Tuesday, 31 January 2012

புதிய பதிவர்கள் ஹிட்ஸ் அள்ளுவது எப்படி..? 10 பொன்னான வழிகள்!blogger hits tips&tricks

புதிய பதிவர்கள் ஹிட்ஸ் அள்ளுவது எப்படி..? 10 பொன்னான வழிகள்!blogger hits tips&tricks

எச்சரிக்கை;கீழ்க்கண்ட பதிவு,மொக்கை மசாலா எழுதியாவது ஹிட் வாங்கிவிடத்துடிக்கும் என்னை போன்ற சாதாரண பதிவர்களுக்கானது.உலகத்தரம் வாய்ந்த பதிவர்களுக்கானது அல்ல.அவர்கள் வழக்கம் போல டுடே விசிட்ஸ் 37 பேரை வைத்தே தன் எழுத்தை பறைசாற்றிக்கொள்ளலாம்..!!

          ஹிட் அடிக்கிறது எப்படின்னு எழுதியே,ஹிட்டடிச்சுடுறாய்ங்க.சார்!!!


1. முதல் வழி பொன்னான வழி.மாசம் ஒரு முறை மேற்க்கண்டவாறு தலைப்பிட்டு,ஒரு மொக்கை பதிவு போட்டு விடுங்கள்.

2.சினிமா,கமல்,அஜித்,விஜய்,சூர்யா,சிம்பு,தனுஷ்,வடிவேலு,சந்தானம்,திரிஷா,அமலாபால்,கருணாநிதி,ஜெயலலிதா,எம்.ஜி.ஆர்,
விஜயகாந்த்,காமம்,அன்பு,காதல்,கவிதை,சமையல்,சிக்கன்,மட்டன்,பிரியாணி, சென்னை,சோனியாகாந்தி,சாருநிவேதிதா,ஜெயமோகன்,இணையம்,ஜோக்ஸ்,நகைச்சுவை,காமம்,செக்ஸ்,கொலைவெறி,ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி,ஸ்பெக்ட்ரம்,,சாப்பாட்டுகடை,, ரஜினி சித்தர்,உணவு,சர்க்கரை நோய்,மூட்டுவலி,கவர்ச்சி நடிகை,ஃபேஸ்புக்,டிவிட்டர்,இவையெல்லாம் ஹிட்டான கீவேர்டு.ஆகும்.

ரஜினிஅரசியலுக்கு வந்துட்டார்,விஜய் நண்பன் அதிரடி தகவல்கள், அஜித் மங்காத்தா,அஜித் பில்லா 2 என சீசனுக்கு தகுந்தாற்போல புஸ்வானம் விடுவதும் முக்கியம்.கரண்ட் மேட்டர்ல கைவெச்சு, 10,000 ஹிட்ஸ் அடிப்பது கூடுதல் போனஸ்..

3.உங்கள் அனுபவங்களை தினசரி பதிவாக போடலாம்..நான் இன்று அலுவலகம் போனேன்.வீட்டுக்கு வந்தேன் சாப்பிட்டு தூங்கினேன் என மொக்கை போடாமல் சுவாரஸ்யமாக எழுதுங்கள்.கற்பனை வளம் பெறும்...மூளை க்கு வேலை கொடுக்க ப்ளாக் எழுதுதல் நல்ல பழக்கம்.கேம்ஸ்  விட இது சூப்பர்.

4.படங்கள் நிறைய போட்டு பதிவிடவும்.இதனால் கூகிள் இமேஜ் (google imeges) மூலம் அதிக ஹிட்ஸ் கிடைக்கும்.

5.முன் பத்தியில் இருப்பதை போல அடிக்கடி ஆங்கில வார்த்தையை போடுங்கள்..ஹிட்ஸ் கிடைக்கும் சூத்திரம்தான் இதுவும்.

6.மற்ற பதிவர்களுக்கு கமெண்ட்ஸ் போடுவதால் என்ன புது ஆளா இருக்கே என உங்கள் பெயரை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்குக்கு பெரிய ? பதிவர்கள் வருவர்.அங்கு வந்தால் நோ போஸ்ட்ஸ் என பப்பரப்பா என ஒண்ணும் போடாமல் வைத்திருக்க கூடாது..அதையாவது ரெண்டு போஸ்டாவது எழுதவும்.

7.100 போஸ்ட் வரைக்கும் எழுதியிருப்பார்.ஆனா கமெண்ட் வேர்டு வெரிஃபிகேசன் மட்டும் எடுத்து தொலைய மாட்டார்.இதனால் கமெண்ட் போடுகிற பெரிய பதிவர் ? எரிச்சலடைந்து உங்கள் எழுத்தை அங்கீகரிக்காமல் கோபத்துடன் வெளியேற வாய்ப்புண்டு.

8.அலங்காரம் பண்ணுகிறேன் பேர்வழி என ரேடியோ,பூ கொட்டுதல்,கர்சர் பாம்பு போல நெளியும் ஜாவ ஸ்கிரிப்ட் எல்லாம் போட்டு வைத்திருப்பர்.பதிவு 10 வரிதான் இருக்கும்.திரிசா வுக்கு பிடிச்ச சாப்பாடு என.ஆனா உள்லெ நுழைய முடியாத அளவு டிராஃபிக் ஜாம்.இப்படி இருந்தா ஹிட்டடிக்க முடியாது.

9.தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ் 10,உடான்ஸ் திரட்டிகளில் உங்கள் பதிவை இணைக்கவில்லையெனில் இணைத்துக்கொள்ளவும்.இவற்றில் இனைக்காவிட்டால் நமக்கு ஹிட்ஸ் வராது என நினைக்க வேண்டாம்....ஹிட்ஸ் கிடைக்கும்.கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான்.

10.google friend connect மூலம்,.ஃபாலோயர் ஆகுங்கள்.எல்லா ப்ளாக்குகளிலும் ஃபாலோயர் ஆகுங்கள்.இதன் மூலம் பலர் உங்கள் புகைப்படத்தை பார்த்து வரவும் வாய்ப்புண்டு...பதிவுகள் ஆல் சப்ஜெக்ட் ஐ நோ எனும்படி இருந்தால் நீங்கள் மசாலா பதிவர் எனும் சிறப்பு தகுதி அடைந்து...பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பும் உண்டு.முதல்ல உங்க ப்ளாக்குக்கு எல்லாரையுஇம் அடிச்சு பிடிச்சு வர வையுங்க..அப்புறம் உங்கள் எழுத்து பிடிச்சா அவங்களே தேடி வருவாங்க...எல்லாத்துக்கும் விளம்பரம் வேணும் சார்..இல்லைனா குண்டு சட்டி குதிரைதான்!!


Related Article:

Post Comment

13 comments:

வெளங்காதவன் said...

Congrates thala!!!!

ஜீ... said...

வாழ்த்துக்கள் பாஸ்! வாழ்க்கையின் மிகமுக்கியமான ஹிட்டுக்கு! :-)

கும்மாச்சி said...
This comment has been removed by a blog administrator.
விக்கியுலகம் said...

என்னை போல குழந்த பதிவருக்கு பல அறிவுரைகள் நன்றிங்கோ!

பழனி.கந்தசாமி said...
This comment has been removed by a blog administrator.
தமிழ்வாசி பிரகாஷ் said...

ஓ... சாரிங்க, பயனுள்ள பதிவு'ன்னு டைப் செய்தேன்

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

நன்றி..கும்மாச்சி..பழனி கந்தசாமி சார்!!

இருதயம் said...

உங்கள் குடும்பத்தின் புதிய வரவுக்கு அன்பின் வாழ்த்துக்கள் ..... கடவுள் அவளை எல்லா விதத்திலும் காத்து நடத்துவாராக ..

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் அப்பா ஆனதுக்கு

Vijayakumar A said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் பாஸ்.....

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாவது பெண் குழந்தை அப்பாவுக்கு வாழ்த்துக்கள் !

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துகள்

இத்தோட நிறுத்தவும் ஹி ஹி

ஹிட் ஐடியாக்கள்க்கு நன்றி ஹி ஹி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner