/> 2012 எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,கார் யோகம்..? ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Wednesday, 18 January 2012

2012 எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,கார் யோகம்..? ராசிபலன்

2012 எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்


சிம்மம்,கும்பம் ராசிக்காரர்களை விட துலாம்,மேசம்,ரிசபம் ராசியினருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம் அதிகம்.ரிசபம்,துலாம் ராசிக்காரங்க சுக்கிரன் ராசிக்காரங்க என்பதால் இவங்களுக்கு யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.

சொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும்.வாகனத்துக்கு சனியும்,நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதான்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது! அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது!

வாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.

கார் வாங்கும் யோகம் நாங்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்!!

2012 ல் வாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்குவதில் தவறில்லை.5,லட்சம் ரூபாய் கார் வாங்கும்போது 500 செலவில் ஜோசியரிடம் ஆலோசனை பெறுவதில் தவறில்லை.என் நண்பரின் நண்பர் ஒருவர் 7171 என்ற கார் வாங்கினார்.நண்பரிடம் அப்போதே சொன்னேன்.5353,6262 எல்லாம் ராசியா இருப்பதில்லை.இதுவும் பிரச்சினையைதான் கொடுக்கும் என சொன்னேன்.இன்று அந்த கார் விபத்தாகி விட்டது...நண்பருக்கு கால் எலும்பு முறிவு.அறுவை சிகிச்சை கோவையில் நடக்கிறது..அந்த செய்தி கிடைத்த பாதிப்பில்தான் இந்த பதிவு!!


Related Article:

Post Comment

2 comments:

கோவை நேரம் said...

ஆகா.....இது வேற இருக்கா.....

Anonymous said...

முனி,கருப்பண்ணசாமி வெளியேற என்ன பரிகாரம்.ப்ளீஸ் சொல்லுங்களேன்.......முருகன்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner