Tuesday, 17 January 2012

ஜெயலலிதா, ஸ்டாலினை ஏன் கைது செய்யவில்லை..?

ஜெயலலிதா தமிழக சட்டமன்ற தேர்தலில், எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளை விட மாபெரும் வெற்றி பெற்று, இன்று மக்கள் ஆதரவுடன் ,சிறந்த நிர்வாக திறமையுடன் முதல்வராக செயல்படுகிறார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல லட்சம் கோடி ஆட்டையை போட்டதாக தி.மு.க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ,,தமிழக பட்டி தொட்டி வரை சிரிப்பாய் சிரித்து இன்று அந்த கட்சி, இனி மக்கள் செல்வாக்கை பெறவே முடியாத சூழலில் உள்ளது...பட்ட காலிலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பதற்கு ஏற்ப...கட்சியின் உட்கட்சி பூசல், உட்கட்சி போராக வெடிக்க காத்திருக்கிறது.ஸ்டாலின் அழகிரி யார் பெரியவர் என்ற நிலை மாறி இன்று ஸ்டாலின்- கனிமொழி யாருக்கு அதிக செல்வாக்கு எனும் போட்டி தொடங்கிவிட்டது.ஸ்டாலினுக்குதான் அவர்கள் கட்சியில் அதிக செல்வாக்கு சந்தேகமில்லை.ஆனால் கனிமொழிக்கு பெரிய கட்சி பதவி தரணும்..இல்லைன்னா எல்லா ரகசியத்தையும் போட்டுடைப்பேன் என ராஜாத்தியம்மா அதிரடியாய் கிளம்ப,கருணாநிதி யும் பதவி தர முடிவெடுத்துவிட்டார்.ஸ்டாலின் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்.

கனிமொழி விரைவில் தி.மு.க வின் முக்கிய கட்சி பதவியை ஏற்பார்...என்ன வேணாலும் அந்த கட்சியில் நடக்கட்டும்/.அது மூழ்கும் கப்பல்தானே..என்கிறீர்களா..அதுவும் சரிதான்.ஏனென்றால் ஜெயலலிதாவை விட்டால் அ.தி.மு.க வில் செல்வாக்கானவர்கள் யாரும் இல்லை என்பதுபோல..கலைஞரை விட்டால் செல்வாக்கானவர்கள் ஸ்டாலின் மட்டும் தான்.அதுவும் ஒரு மாயை தான்.ஒரு பிரச்சினை என்றால் ஸ்டாலின் எப்படி சமாளிப்பார் என்று நமக்கு தெரியாது.ஸ்டாலின் இதுவரை செய்தது எல்லாம் சுற்றுப்பயணம் பிரச்சாரம் மற்றும் சிறையில் உள்ள தன் கட்சிக்காரர்களை சென்று பார்ப்பதும்தான்.

ஒரு தலைவருக்கு அடிப்படை தேவையானபேச்சுதிறமையும்,தொண்டர்களை அரவணைத்து செல்தலும் ,நல்ல நினைவாற்றலும்,நகைச்சுவை உணர்வும்,மக்கள் கொந்தளிப்பையும்,போராட்டத்தையும் ,உணர்வுகளையும் தனக்கு சாதகமாக மாற்றி கட்சியை வளர்க்கும் சாமர்த்தியமும்,துரோகிகளை அடையாளம் கண்டு அகற்றும் கோபமும் அவசியம் தேவை.இது எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,கருணாநிதி ஆகியோரிடம் நிரம்ப உண்டு.ஆனால் ஸ்டாலினிடம் இது எதுவாவது இருக்கிறதா என யோசித்தால் ..பதில் உங்களால் கூட சொல்ல இயலாது.சோனியாகாந்திக்கு இதுவெல்லாம் இருக்கா அவங்க எப்படி ...ஆளுங்கட்சி தலைவியா இருக்காங்க..என்றால் அது நேரு பாரம்பரியம் என்பது மட்டுமில்லாமல் ,ராஜீவ் காந்தி படுகொலை அனுதாபத்தால்தான் சோனியாகாந்தி இன்று இந்தியாவையே பத்து வருடமாக ஆட்சி செய்து இந்தியனை பைத்தியக்காரனாக்கி கொண்டிருக்கிறார்.அதற்கு காரணம் அனுதாப ஓட்டுதான்...அனுதாப அலை இல்லையெனில் சோனியா இத்தாலி போயிருப்பார்.காங்கிரஸ் கூடாரமும் எப்போதோ காலியாயிருக்கும்.

அனுதாப அலையால் கோபுரத்தில் போய் ஒட்டிக்கொண்ட சோனியா கதை போல் ஸ்டாலினுக்கு நேரக்கூடாது என்பதுதான் அவர் கைது செய்யப்படாமல் இருக்க முக்கிய காரணமாக இருக்க முடியும்.தி.மு.க வினர் சொல்வது போல உத்தமர் என்பதற்காக அல்ல.


Related Article:

Post Comment

2 comments:

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ்குமார் சார்!ஸ்டாலினை அம்மா வெளியே விட்டு வைத்திருப்பதற்கு வேறும் பல காரணங்கள் இருக்கின்றன!அதில் ஒன்று,திராவிடக்கட்சி ஒன்று பெயருக்காவது இருக்க வேண்டும் என்பதும் தான்.

மனசாட்சி said...

நல்லா சொன்னேள் போங்க

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner