/> புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 20 January 2012

புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்

புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்

ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமாகிய 5 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால் கடுமையான புத்திர தோசம் உண்டாகிறது.அடிக்கடி கருச்சிதைவும்,குழந்தை பிறந்து இறத்தலும் உண்டாகிறது!சிலருக்கு புத்திர பலனே இருப்பதில்லை.இதை புலிப்பாணி பாடல் மூலம்,சொல்கிறார்;

‘’பாரப்பா இன்னமொரு பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் மறைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம்
தீர்ப்பதற்கு விபரம் சொல்வேன் மைந்தா
கூறப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லாக் கன்னியற்கு உத்தம ஸ்தான செய்து
வீரப்பா விலகுமடா தோசம்
விதியுள்ள ஜென்மனவன் ஜெனிப்பான் பாரே’’

ஜாதகத்தில் ராகு 5ல் இருப்பின் அரச மரத்தை சுற்றி வந்து ,சுமங்கலிகளுக்கு குங்குமம்,மஞ்சள் முதலான மங்களப்பொருட்கள் கொடுத்து வண்ங்கினால் தோசம் நீங்கும் என்கிறார்.12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து அவர்களுக்கு உணவும் கொடுத்து வசதி இருப்பவர்கள் உடைதானமும் செய்தால் இந்த தோசம் நீங்கும்.

காளசர்ப்ப தோசம்;

ராகு,கேதுவுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்து இருந்தால் அது காள சர்ப்ப தோசம் எனப்படும்.எம்.ஜி.ஆர்,ரஜினி ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறது.காள சர்ப்ப யோகம்,காள சர்ப்ப தோசம் என்று இருவகை உண்டு.ஆனாலும் ராகு,கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் 30 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் அடைவார்.அதுவரை போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்.
Related Article:

Post Comment

2 comments:

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ் சார்!புரிகிறது போலும்,புரியாதது போலுமிருக்கிறது. நன்றி!!!!

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner