Wednesday, 25 January 2012

விஜய் இப்படி பேசலாமா..? ரஜினி ரசிகனின் ஆவேச கடிதம்

விஜய் இப்படி பேசலாமா..?


விஜய் சார், நீங்க முதன்முறையாக நடித்த,இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.சந்தோசம்.    ஆனா எப்போதும் தலைக்கனமாய் பேசும் நீங்க இப்போது கொஞ்ச நாட்களாய் அதை குறைத்து எதார்த்தமாக ,நல்லவிதமாக பழக தொடங்கியிருந்தீங்க..பேச்சிலும் பக்குவம் தெரிந்தது.ஆனாலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக ,நண்பன் ஓடத்தொடங்கியதும்,தலைக்கனம் விஷம் போல மண்டைக்குள் ஏறியதால்,மீண்டும் தன்னை ரஜினி ரேஞ்சுக்கு நினைத்துக்கொல்ள தொடங்கிவிட்டீர்கள்.

யாரும் சொல்லாமல் தானே முன்வந்து நண்பன் படம் எந்திரன் வசூலை மிஞ்சிக்கொண்டிருக்கிறது.சில இடங்களில் முறியடித்தும் கொண்டிருக்கிறது என்கிறிர்கள்.இதை என் மண்டைக்குள் ஏற்றிக்கொள்வதா வேண்டாமா என்றும் தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்திருக்கிறீர்கள்.(இதை உங்க மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டாம் நண்பரே, ஏற்கனவே மண்டைக்கனம்....இதையும் ஏத்திக்கிட்டா இன்னும் கனமாயிரும்.  )

விஜய் சார்..உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்,நண்பன் படத்தின் வெற்றி உங்க வெற்றி மட்டும் அல்ல...இயக்குனர் ஷங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குனரின் வெற்றி.உங்களுடன் நடித்த இன்னும் நான்கு அப்பாவி ஹீரோக்களின் வெற்றி.ஷங்கர்,டவுசர் ராமராஜனை வைத்து இந்த படம் எடுத்திருந்தாலும் இந்த ஓட்டம் ஓடியிருக்கும்.காரணம் ஹிந்தியில் புகழ்பெற்ற த்ரீஇடியட்ஸ் கதை அம்சம் அப்படி.

 இந்த படத்தை தூக்கி நிறுத்த சத்யராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த் என மூணு ஹீரோ வேற இருக்காங்க...நீங்க மட்டும் இதுல ஹீரோ இல்லையே..? இது பத்தாம தெலுங்கு கனவு கன்னி இலியானா வேற இருக்காங்க..இத்தனை பேரை தாண்டி விஜய் இப்படி நீங்க முந்திரிக்கொட்டை தனமாக ரஜினியின் எந்திரன் படம் அளவுக்கு நண்பன் ஓடிருச்சி...அத்தனை வசூலும் எனக்காகத்தான் என்பது போல பேசலாமா..? எந்திரன் பிரிண்ட் எவ்வளவு.நண்பன் பிரிண்ட் எவ்வளவு.அதன் வெளிநாட்டு விற்பனை எவ்வளவு..? அது எத்தனை மொழிகளில் வெளியிடப்பட்ட படம்..? நண்பன் தமிழ் மட்டும் தான் வந்திருக்கிறது...எந்திரனின் தெலுங்கு டப்பிங் பட வசூல் எவ்வளவு தெரியுமா..? நண்பன் இப்போதான் ஓட ஆரம்பிச்சிருக்கு...அதுக்குள்ள ஏன் சார்..இப்படி..? பொறுமையா வளரலாம்...என்ன அவசரம்..? சூர்யா,அஜீத் கண்டு பயமா.ரஜினியோடு ஒப்பிட்டுக்கொண்டால் தன்னை பெரிய ஆள் என நினைச்சுக்குவாங்க என்ற எண்ணத்தை முதலில் விடுங்கள்.ஒரு சூரியன்..ஒரு நிலா ..என்பது போல ஒரு ரஜினிதான்.நீங்க எல்லாம் வானத்தில் மின்னும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் போலத்தான்.

விஜய் சார்..ரஜினி மாதிரி ஆகணும்னு ஆசைபட்டீங்கன்னா,முதல்ல நீங்க செய்ய வேண்டிய விசயம்..வாயை பொத்திக்கிட்டு இருப்பதுதான்..!! அஜீத்,சூர்யா,எல்லாம் உங்களை விட பெரிய ஹிட்ஸ் 2011 ல் கொடுத்திருக்காங்க...அவங்க பணிவை யோசிச்சு பாருங்க..தனுஷ்,கார்த்தி ஹிட்ஸ் பத்தி நினைச்சு பாருங்க..கடந்த 3 தோல்வி படங்களுக்கு பின் இப்பதான் ஹிட் படம் கொடுத்திருக்கீங்க.அதுக்குள்ள ஆடுனா எப்படி.

குறைகுடம் தழும்பும் என்பதாலா..?

இன்னொன்னு சொல்லட்டுமா சார்..?

கடவுளை கண்டவனும் இல்லை.ரஜினியை வென்றவனும் இல்லை.!!!

                                                                                                   -ரஜினி ரசிகன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           


Related Article:

Post Comment

8 comments:

மனசாட்சி said...

கடந்த 3 தோல்வி படங்களுக்கு பின் இப்ப தான் ஹிட் படம் கொடுத்துரிங்க அப்படின்னு நீங்களே சொன்னா அவருக்கு தலைகனம் ஏறாம என்ன செய்யும்.

கும்மாச்சி said...

சதீஷ் மிக நல்ல பதிவு, ஊர்க்குருவி என்றும் பருந்தாக முடியாது. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். ஒரே ஒரு சூரியன் தான் அதுபோல ஒரே ஒரு ரஜினிதான்.

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ் சார்!சரியான சாட்டையடி!"பெரிய"இடத்துல அம்மா சகவாசம் வச்சிருக்கிறதால கனம் கூடிட்டுதோ,என்னமோ????

MANO நாஞ்சில் மனோ said...

ஹிந்தியில இந்த படத்தை பார்க்காதவிங்கதான் நல்லா இருக்குன்னு சொல்வாங்க இது ஒரு ரீமேக் படம்னு நம்ம மக்கள் நிறைய பேருக்கு தெரியவே தெரியாது என்பதே உண்மை...!!!

naren said...

குறைக்கிற தெரு நாய்களை பற்றி நமக்கு எதற்கு பேச்சு,

இதைப் படிங்க..நெஞ்சில் பால் வார்க்கும்..

http://ohoproduction.blogspot.com/2012/01/blog-post_25.html

இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு! ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

கருத்து தெரிவித்த நன்பர்கள் அனைவருக்கும் நன்றி..விஜய் வெற்றி பெறட்டும்..என் வாழ்த்துக்கள்!! ரஜினி உயரம் தொட இயலாது..புரிந்தால் போதும்

Anonymous said...

innuma rajiniye nambureenga.kuselan padam unga rajikkaga odavendiathu thane.yean sir odale

Anonymous said...

Kusaelan padam oduna konja nalumae enga thalaivarukaka tan... antha padathoda vasoolah ivangaloda vetri padangal kooda pidika mudiyala....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner