Thursday, 26 January 2012

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் கதை வெளியானது..விஜய் அதிர்ச்சி


விஜய் நடிக்கும்,அடுத்த படம்..துப்பாக்கி..ஏ.ஆர் .முருகதாஸ் இயக்குகிறார் ..இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஜோசியம் பார்க்க வாடிக்கையாளர் வராத நேரத்தில்,இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என யோசித்து பார்த்ததில் கிடைத்த கதை ! தான் இது.இதை முருகதாஸ் பயன்படுத்திக்கொண்டாலும் ? எனக்கு ஆட்சேபனை இல்லை...;-))

விஜய் ஒரு சமூக சேவகர்.(எதிர்காலத்துல அரசியல் தலைவர் ஆகப்போகிறவர் இல்லையா.அப்படிதான் கேரக்டர் கொடுக்கணும்.சந்திரசேகர் உத்தரவு.)வேலைக்கு போகாமல் பணம் சம்பாதிக்காமல் ஏழைகளுக்கு நிறைய தான தர்மம் செய்கிறார்.(அது எப்படி நு கேட்க கூடாது.கதையை மட்டும் கேட்கணும்)

விஜய் ஏழை மாணவிகள் 1000 பேரை தத்தெடுத்து படிக்க வைக்கிறார்.அவர்கள் ஊர் வழியாக வரும் டில்லி எக்ஸ்பிரஸ் கவிழ்க்க வைக்கப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்க செய்கிறார்.பெண்களுக்கு சுய தொழில் சொல்லிக்கொடுத்து,மாதம் 50,000 ஒவ்வொருவரையும் சம்பாதிக்க வைக்கிறார்.ஆண்கள் யாரும் பீடி,சிகரெட்,சாராயம் குடிக்க விடாமல் செய்கிறார்.டாஸ்மாக் ஆரம்பிக்க முடியாமல் அரசு திணறுகிறது.

ராதாரவி அந்த ஊர் வில்லன் சாராயம் காய்ச்சுவது அவர் தொழில்.அந்த ஊர் ஆண்கள் திருட்டுத்தனமாக அவர் காய்ச்சும் சாராயத்தை குடிக்கின்றனர்.இதை கண்டு சோடா திறக்காமலே பொங்கும் விஜய்.,ராதாரவியை கண்டுபிடித்து அவர் பானைகளையும் அவரையும் அடித்து துவம்சம் செய்கிறார்.

ஒரு நாள் அவர்கள் கிராமத்தில் தீவிரவாத கும்பல் நுழைந்து விடுகிறது.அவர்களின் இலக்கு பிரதமரை கொலை செய்வது.அந்த கிராமத்தில் இருக்கும் விஜய் யை பாராட்ட பிரதமர் வருகிறார்!?! என தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரை அங்கேயே போட்டுத்தளளுவது என முடிவெடுத்து கன்னத்தில் தாடி வைத்து மாறு வேடத்தில் காட்டுக்குள் மறைந்திருக்கிறார்கள்.சாராயம் காய்ச்சும் தொழில் செய்து விஜய் அடித்து துரத்திய ராதாரவி தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.பிரதமரை போட்டுதள்ளும்போது விஜய்யையும் போட்டுத்தள்ள வேண்டும் என்பது அவரது நிபந்தனை.அதை தீவிரவாதிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பிரதமர் வந்தாரா,விஜய்யை பாராட்டினாரா,விஜய் தீவிரதிவாதிகளிடமிருந்து அந்த ஊரையும்,பிரதமரையும்,ஏன் இந்தியாவையே காப்பாற்றினாரா என்பதை வெண் திரையில் காண்க...

காட்டுக்குள் விஜய் தீவிரவாதிகளை தேடி அலையும் சீன் மிக பரபரப்பாக திரில்லிங்காக இருக்கும்.தீவிரவாதிகளை டில்லி நகரத்தின் மலை உச்சியி ல்,நின்று விஜய் வேட்டையாடுவது உங்களை சீட் நுனிக்கு கொண்டு செல்லும்...!!


Related Article:

Post Comment

14 comments:

மௌனகுரு said...

Kalakkal boss appadiye yohan, maatraan, billa2 , kochadayaan storyum ezhuthunga

கும்மாச்சி said...

சதீஷ் தயாரிப்பாளர் சங்கத்தில உங்க கதையை பதிவு செய்யுங்க, பிற்பாடு யாராவது வழக்கு தொடர்ந்தால் வசதியாக இருக்கும்.

சேகர் said...

நல்ல கதை....

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ் சார்!கத ஓ.கே!ஆனா,இதுல "துப்பாக்கி" எங்க வருது,ஹி!ஹி!ஹி!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே மீதிய வெண்திரையில் காண்கன்னு சொல்லி இருக்கீங்களே, அது ஏண்ணே?

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

வணக்கம் சதீஷ் சார்!கத ஓ.கே!ஆனா,இதுல "துப்பாக்கி" எங்க வருது,ஹி!ஹி!ஹி!!//
விஜய் படம்ன்னு சொன்ன பிறகும் டைட்டிலுக்கு அர்த்தம்,கதையில் லாஜிக் எல்லாம் எதிர்பார்க்கலாமா சார்..;-))))))

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

சதீஷ் தயாரிப்பாளர் சங்கத்தில உங்க கதையை பதிவு செய்யுங்க, பிற்பாடு யாராவது வழக்கு தொடர்ந்தால் வசதியாக இருக்கும்.//
அந்தளவு கதை வெயிட்டா இருக்கு.அப்ப முயற்சி பண்ணிட வேண்டியதுதான்..ஹிஹி

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

Kalakkal boss appadiye yohan, maatraan, billa2 , kochadayaan storyum ezhuthunga//
இன்னும் இது வேறயா..?நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதியை..தமிழ் சினிமா வாழட்டும் பாஸ்!! பொழச்சி போராய்ங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்ப ஒத்துக்கிறேன், நண்பன் படத்துக்கப்புறம் டாகுடர் கொஞ்சம் டெவலப்தான் ஆகி இருக்காரு.....

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

அண்ணே மீதிய வெண்திரையில் காண்கன்னு சொல்லி இருக்கீங்களே, அது ஏண்ணே//பன்னிக்குட்டியாரே..அது டாக்டரு பல நகாசு வேலையெல்லாம் கதையில செய்யணும்.அப்புறம் ஹீரோவோட அப்பா சொல்ற பிட்டு கதையெல்லாம் சொருகணும்..இதெல்லாம் தாண்டி வரும்போது கதை எப்படியிருக்கும் என தெரியாது...அதான் வெண் திரையில் காண்க...ஹிஹி

ஜீ... said...

ஏன் பாஸ் திடீர்னு ராதாரவி? ஹிந்தி வில்லன்க வரலையா? :-)

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ஏன் பாஸ் திடீர்னு ராதாரவி? ஹிந்தி வில்லன்க வரலையா? //டக்குனு இவர் பெயர்தான் ஞாபகம் வந்துச்சி...நாமளாவது நல்ல வில்லனுக்கு வாய்ப்பு கொடுப்போம்னுதான்;-))

ABS TechInd said...

vijaya comment pannarathukku ungalavitta yarama illa........... supperrrrrrrrrrrrrr

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? துப்பாக்கி படத்துல கதை இருக்கா? அஜித் அதிர்ச்சி ஹி ஹி ஹி

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner