Thursday, 19 January 2012

வடிவேலு கண்ணீருடன்..சரண்டர்.!...அம்மா சமாதானம்!!

வடிவேலு சரண்டர்..அம்மா சமாதானம்!!

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் கொடுத்த தெம்பில் ஜெயிக்கும் குதிரை எது என தெரியாமல் தலைகால் புரியாமல் ஆடிய வடிவேலு,ஜெயலலிதா முதல்வர் ஆனதும் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆனதும் ஒரு படம் கூட புக்கிங் ஆகவில்லை!! காரணம் முதல்வர் கோபித்துக்கொள்வார்..பிரச்சினை வந்தால் என்ன செய்வது...என தயாரிப்பாளர்கள் தயங்கியதே காரணம்.

இந்த நிலை கடந்த 6 மாதமாக தொடரும் நிலையில் நொந்து போன வடிவேலு ,இயக்குனர் சங்க தலைவர் இயக்குனர் சந்திர சேகரை பார்த்து மிக வருந்த,நான் அம்மாவிடம் பேசி பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன்..என சொல்லியிருக்கிறார்...அதன்பின் முதல்வரை சந்தித்த சந்திர சேகர் விசயத்தை சொல்ல,ஜெயலலிதாவோ கூலாக வடிவேலு மீது எனக்கென்ன கோபம்..தயாரிப்பாளர்கள் அப்படி நினைச்சிக்கிட்டா நான் என்ன செய்றது..அவர் நடிக்கட்டும்..அது அவர் தொழில்..அதில் அரசியல் குறுக்கீடு வராது...என சொல்லுங்கள் என்றிருக்கிறார்.இதை கேள்விப்பட்டு ஆனந்த கண்ணீருடன் கைகூப்பியிருக்கிறார் வடிவேலு..!! விரைவில் முதல்வருடன் சந்திப்பும் இருக்கும்..இப்போது வடிவேலுக்கு மூன்று படங்கள் புக்கிங்ஆகி விட்டது!! விஜய்,சூர்யா,அஜீத் படங்களில் இனி வடிவேலுவை பார்க்கலாம்..!!




Related Article:

Post Comment

2 comments:

ரஹீம் கஸாலி said...

வடிவேலு புத்திசாலி....பிரச்சாரத்தின்போது ஜெயலலிதாவை அவர் திட்டவேயில்லை. திட்டியதெல்லாம் விஜயகாந்தைத்தான். இப்போதுதான் விஜயகாந்தும் ஜெயலலிதாவிற்கு எதிரி ஆகிட்டாரே....எதிரிக்கு எதிரி நண்பன். சரியாப்போச்சு கணக்கு

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ஆமாம் நண்பரே..கருணாநிதியே சரணடைந்த பின் வடிவேலு சரணடைய மாட்டாரா..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner