Saturday, 21 January 2012

என் ஃப்ரெண்ட்ட போல யாரு மச்சான்...!!

விஜய் நடித்த ஷங்கர் இயக்கிய நண்பன் வசூல் நிலவரம் பிரமிக்க தக்க வகையில் உயர்ந்து வருவது சந்தோசம்தான்.ஆனால் விஜய் மீண்டும் சிம்பு போல பில்டப் மசாலா மொக்கைக்குள் போகாமல் விசயமுள்ள நல்ல மசாலா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும்.அதுதான் அவருக்கும் அவரை நம்பி படம் பார்க்க செல்லும் அப்பாவிகளுக்கும் நல்லது..ரொம்ப நல்லது.ரஜினி ஃபார்முலா மாதிரி பெரிய இயக்குனர்,பெரிய பேனர் படங்களில் மட்டுமே நடிப்பது என விஜய் உறுதியாக இருந்தால் அவர் தோல்வி படமே கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது...
-------------------------
அஜீத் பில்லா இரண்டாம் பாகம் ஸ்டில்கள் அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டது.பாகம் இரண்டு டிரெண்ட் செட்டாகுமா என்பதை இந்த படம் நிரூபிக்கும்.ரஜினியின் பில்லா அளவுக்கு அஜீத் பில்லா இல்லையென்றாலும் அஜீத்கு புது கலரை கொடுத்தது இந்த படம்தான்.அதன் சாரமே மங்காத்தா என்றும் சொல்லலாம்..அஜீத் முகத்தில் ஒரு ஆக்‌ஷன் ஸ்டாருக்குண்டான பக்குவம் எப்போதுமே உண்டு.ரஜினிக்கு பின் இவர் முகத்தில்தான் அந்த ஃபயர் இருக்கிறது.
---------------------------------------
பில்லா 2 போலவே காஞ்சனா 2,பாட்ஷா 2,கமலின் விருமாண்டி 2,பருத்தி வீரன் 2,சுப்ரமணியபுரம் 2,வந்தா நல்லாருக்கும் ..இதை பார்த்துட்டு விஜய் குருவி 2க்கு முயற்சித்து விட வேண்டாம் என சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

த்ரிஷா,அனுஷ்கா,ஷ்ரேயா,தமன்னா அலையெல்லாம் ஓய்ந்துவிட்டது.அமலாபால் பேச்சும் குறைந்துவிட்டது.தமிழ் சினிமாவின் அடுத்த டிரெண்ட் செட்டர் நடிகையை இன்னும் காணோம்...குஷ்பூ,ஜோதிகா,சிம்ரன் மாதிரி காலத்தால் அழியாத அழகுகளை காண்பித்த தமிழ் சினிமா நடிகை வறட்சி கொண்டிருப்பது சோகம்தான்..!!
--------------------------------
சாருநிவேதிதா வின் எக்ஸைல் இன்னும் முழுதாக படிக்கவில்லை.அதற்குள் ஆர்வம்தாங்காமல் விமர்சனம் போட்டுவிட்டேன்.சி.பி.செந்தில்குமார் நானும் விமர்சனம் போடணும்,புக் கொடு..படிச்சிட்டு தரேன் என துடிக்கிறார்.புக்கை கூட மனுசன் விட மாட்டேங்கிறார்.பணம் கொடுத்து வாங்கு சார் அப்படீன்னு சொன்னா,யேம்பா நீயே ஜோசியம் பார்க்க வந்தவர்கிட்ட கட்டணத்துக்கு பதிலா புக் வாங்கின ஆள்..என்னை சொல்றியா என ரகசியத்தை போட்டுடைக்கிறார்..அது அன்பா கேட்டு வாங்குனது.(ஈரோட்டுக்கு வரும் முன் வாங்கிடணும்னு துடிச்சி வாங்கினேன்...)அவருக்கு கொடுக்குறதுக்கு முன்னாடி படிச்சிடலாம்னா 480 பக்கம் இருக்கு.என் ஆர்வத்துக்கு காரணம் அதுல உள்ள அகத்தியர்,ஜோதிடம்,மூலிகைகள் பத்தின குறிப்புகள்தான்.ரொம்ப நாள் ஆராய்ச்சி பண்ணியிருப்பார் போல..சி.பி.இப்பவும் ஒரு எஸ்.எம்.எஸ்..அனுப்பியிருக்கார்.புக்கை படிச்சிட்டியா..?,வரவா..? என் ஃப்ரெண்ட்ட போல யாரு மச்சான்..!!
---------------------
புது பதிவர்களுக்கான டிப்ஸ் என நீ எழுதிய பதிவெல்லாம் செம ஹிட்.ஃபாலோயர் சேர்க்க நீ செய்த டிரிக் வேலையெல்லாம் அகில உலக ஃபேமஸ்.(அந்த பதிவெல்லாம் முடக்கப்பட்ட என் sathish777 ப்ளாக்குடன் மூழ்கி விட்டது)இப்பல்லாம்,ப்ளாக் உலகம் பத்தி பதிவே போடுவதில்லை.ஏன் மேட்டர் இல்லையா என நண்பர் ஒருவர் கேட்டார்.ப்ளாக்கர் டிப்ஸ் என வருவது எல்லாம் உண்மையில் ப்ளாக் டிப்ஸே இல்லை.உண்மையை மறைத்துதான் எழுதுகிறார்கள்.டிராஃபிக்கை அதிகரிக்கும் வழி,எப்படி வாசகர்கள் வருகிறார்கள்,திரட்டிகள் எப்படி செயல்படுகிறது...திரட்டியை நம்பி ப்ளாக்கா,ப்ளாக்கை நம்பி திரட்டியா,அலெக்ஸாவை எதில் நம்பலாம்..எதில் நம்பக்கூடாது...ஆன்லைன் விசிட்டர்ஸ் என்பதில் உள்ள ஓட்டை உடைசல்கள் பற்றியெல்லாம் விரிவாக அலசும் பதிவுகள் இதுவரை ஒன்றுகூட வந்ததில்லை.ஆனால் ஆங்கிலத்தில் இருக்கின்றன..எதையையோ சுட்டு போடுற மகராசனுக..இதை சுட்டு போடுங்கப்பா!!
---------------------------
கோட்சாரம்,ஜோதிடம்,ராசிபலன் பத்தி நிறைய எழுத வேண்டியிருக்கு..லக்ன பலன் எழுத சொல்லி வெங்கடேச குருக்கள் அன்பாக மிரட்டிக்கொண்டே இருக்கார்.வாரம் தோறும் ராசிபலன் போடணும் என ஆசை..ஆனா கரெக்டா ஃபாலோ பண்ண முடியலை..ஜாதக கட்டம் போட்டு அந்த ஜாதகரின் பலன்கள் தரணும் என நினைக்கிறேன்.திருமன பொருத்தம் பத்தியும் எழுதணும்.

ஆனா என்கிட்ட ஜாதகம் மெயில் மூலமா அனுப்புறவங்க அவங்க ஜாதகத்தை பப்ளிக்கா போட்டு பலன் சொல்லிடுவேனோன்னு பயப்படுறாங்க...அப்படியெல்லாம் பயப்படாதீங்க..மெயிலில் அனுப்படும் எந்த ஜாதகமும் என் பதிவில் சுட்டிக்காட்ட மாட்டேன்...!! 


Related Article:

Post Comment

8 comments:

கும்மாச்சி said...

ஸார் நான்தான் பஸ்ட். அதனால் எனக்கு ஜோதிடம் இலவசமா பார்த்து சொல்லுவீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எஸ்.ஏ.சி. பேச்ச கேட்கிற வரை டாகுடர் திருந்தறதுக்கு வாய்ப்பு மிகக் குறைவு.

! சிவகுமார் ! said...

எதையெதையோ சுட்டு போடுற மகராசனுங்க.. :)

! சிவகுமார் ! said...

சி.பி. ஜாதகம் போடுங்க. நேயர் விருப்பம்!! :))

மயிலன் said...

குருவிக்கு என்னன்னே கொறச்சலு..

குடும்பத்தோட சிரிச்சோம்...:)

Yoga.S.FR said...

வணக்க சதீஷ் சார்!ப.ரா சொன்னாப்புல அப்பா பேச்சைக் கேட்டா அம்புட்டுத்தான்!நண்பன் படத்தப் பாத்தாவது அந்த அப்பா திருந்துவாரா,தெரியல!அம்மா வேற அந்த "அம்மா" கூட நட்பா இருக்காங்களாம்!க(கொ)லைஞர் சொன்னாப்புல ஆயிடப்படாது!அதான்,கூடா............................!

naren said...

இந்த மாதிரி பதிவை படித்து உங்க தளத்தில் ரொம்ப நாளாச்சு.

@ விஜய்க்கு சூப்பர் அறிவுரை
@ பில்லா 2 சோபிக்காது என்று எண்ணுகிறேன்.
@ Exile என்னைப் பொறுத்தவரை ஒரு குப்பை.
@ஆங்கில பதிவுகளின் லிங்க் தந்தால் நல்லது.
@ அதிகமாக ஜோதிட பதிவுகளை எளிமையாக பதிவிடுங்கள். விஷயங்களை அறிய பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி.

hotkarthik said...

சார் ஒன்னும் புரியல. இருங்க ஒரு வருசத்துல வந்துர்ரேன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner