/> தை அமாவாசை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 21 January 2012

தை அமாவாசை

தை அமாவாசை

முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபட வேண்டிய நாள் தை அமாவாசை.நாளை ஞாயிர்றுக்கிழமை.இந்த விசேஷ நாளாகும்.

ராமேஸ்வரம்,திருப்புல்லாணி,கோடியக்கரை,பூம்புகார்,திருவெண்காடு,திருச்சி அம்மா மண்டபம்,ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை,கொடுமுடி காவிரி கரை ஆகிய இடங்கள் பித்ருபூஜை செய்ய மிக உகந்த தலங்கள்.வடநாட்டில் காசி,ப்த்ரிநாத்,கங்கைகரையெங்கும் பித்ருபூஜை செய்ய உகந்த இடங்களாகும்.

பித்ருதோசம் இருப்பவர்களும்,இதுவரை சரியான முறையில் இறந்தோருக்கான சடங்குகளை செய்யாதவர்களும் இந்த தை அமாவாசையில் செய்வது மிக சிறப்பு.

ஜாதகத்தில் பாக்யஸ்தானம் வலு இழந்தவர்களும்,சூரியன் பாதிப்புக்குள்ளானவர்களும்,இறந்து போன எந்த உயிருக்காகவும் உங்களுக்கு உறவே இல்லாவிட்டாலும் இந்த பூஜையை செய்யலாம்...உங்கள் உறவில் யாருக்கேனும்,பல காலம் அவர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் மறக்காமல் இந்த நாளில் செய்யுங்கள்.

இதை செய்வதால் என்ன பலன்..? உங்கள் வம்சத்தில் இறந்து போன முன்னோர்களை நினைத்து செய்யும் இந்த பூஜையானது,இறந்து போனவர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்க செய்கிறது.அவர்களின் பரிபூர்ண ஆசியும்,வழிகாட்டலும் உங்களுக்கும் உங்கள் வம்சத்தாருக்கும் கிடைக்கிறது.

முன்னோர்களை நினைத்து வழிபாடு என்பதால் உங்கள் குல தெய்வம் கோயிலுக்கும் சென்று வரலாம்.குலதெய்வம் கோயில் சென்று வர இது உன்னதமான நாள் ஆகும்.

பித்ருபூஜைக்கு உண்டான பொருட்களில் முக்கியமனவை;நாட்டுக்காய்கறிகள் கொஞ்சம்..அதாவது வாழைக்காய்,நீர்பூசணி சிறிது துண்டு,பச்சரிசி மாவு,எள்,நல்லெண்ணை,மஞ்சள்,குங்குமம், சூடம் ஒரு பாக்கெட்,நெய் பாக்கெட் ,வரமிளகாய்,உப்பு ஒரு பாக்கெட் ,பருப்பு 100 கிராம்,உளுந்து 100 கிராம் இவை எதுக்கு என்றால் அந்த காலத்தில் பித்ருபூஜை செய்ததும் பிராமணர்களுக்கு தானமாக தருவார்கள்.அது இன்றும் கடைபிடிப்பதற்காகத்தான்.அவரவர் வசதியை பொறுத்து பூஜை அமைத்துக்கொள்ளலாம்...எள்ளும் தண்ணியும் இறைத்தால் போதும் எனும் சிம்பிள் திதியே முன்னோர்களுக்கு போதுமானது.Related Article:

Post Comment

2 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.

naren said...

அறிந்திராத செய்தி. பதிவிற்கு நன்றி.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner