Thursday, 12 January 2012

நண்பன் சினிமா விமர்சனம் nanban movie review

நண்பன் சினிமா விமர்சனம்;விஜய் அலட்டல் இல்லாத நடிப்பு;


ஜோதிடம்,ராசிபலன் .எழுதிகிட்டே இருக்கோம்.ஒரு சினிமா விமர்சனம் எழுதலாம் என்பதாலும்,.. ஷங்கர் படம்.த்ரீ இடியட்ஸ் ரீமேக் என்பதால் ஆர்வம் அதிகரிக்க,இன்று நண்பன் பார்த்துவிட்டேன்.

விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா கல்லூரி மாணவர்கள்.விஜய் நம் இந்திய கல்வி முறையில் புதிய மாற்றம் வர வேண்டும் என கனவு காணும் இளைஞர்.இஷ்டப்பட்டது படிக்கணும்.கஷ்டப்பட்டு படிக்ககூடாது.நமக்கு எதுல ஆர்வம் இருக்கோ அந்த துறையில எதைப்பத்தியும் கவலைப்படாம இறங்கி சாதிக்கணும்.யாருக்காகவும் உன் வாழ்க்கையை மாத்திக்காதே.என மெசேஜ் சொல்கிறார்...ஸ்ரீகாந்த் விரும்பியபடி அவரை வைல்டு போட்டோகிராபர் ஆக்குகிறார்.ஜீவா விரும்பியபடி அவர் குடும்பத்தை காக்க நல்ல வேலையில் சேர உதவி செய்கிறார்.அதன் பின் விஜய் மர்மமான முறையில் யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் காணாமல் போகிறார்.அவரை நண்பர்கள் தேடிப்போய்,ஆச்சர்யப்படுவதுதான் க்ளைமாக்ஸ்.அதை திரையில் காண்க.

படத்துல காமெடி தூவல் நிறைய இருக்கு.வழக்கமான ஷங்கர் படத்துல காமெடி காட்சிகள் செயற்கைதனமாய்தான் இருக்கும்.கற்பிக்கும் ஆசிரியர் என்ற சொற்பொழிவு பேப்பரில் கற்பழிப்பு ஆசிரியர் என விஜய் திருத்திவிட,அதை சத்யன் மேடையில் வாசிக்கும் சீன், தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது.நம் ஆசிரியர் நன்றாக கற்பழிப்பார்.அவரை கண்டு நாமும் நன்றாக கற்பழிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று படித்துக்கொண்டே போக..என் பக்கத்தில் இருந்த ஆள் சிரித்த சிரிப்பில் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.அப்படி வெடி சிரிப்பு.

சத்யராஜ் தான் கல்லூரி முதல்வர்.எந்திரனில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷங்கர் கூப்பிட்டபோது,ரஜினி என் படத்துல வில்லனா நடிக்க ஒப்புகிட்டா நானும் வில்லனா நடிக்க தயார் என எகத்தாளம் பேசியவர்,இதில் குணச்சித்திர வேடமும் இல்லாமல் வில்லனாகவும் இல்லாமல்,அமைதிப்படை ரேஞ்ச் கலக்கலாகவும் இல்லாமல் நடித்து வைத்திருக்கிறார்.சத்யராஜ எனக்கு பிடிக்கும்.அவர் இந்தளவு,தன்னை மாற்றிக்கொண்டது ஆச்சர்யமாக இருக்கிறது! அவருக்கு கனமான பாத்திரம்.அவரைப் போன்ற மூத்த நடிகர்கள் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்.

இலியானா தெலுங்கு கனவு கன்னி.தமிழில் நடிக்க அழைத்த போது அளவுக்கதிகமான சம்பளமும்,கால்ஷீட்டே இல்லை என பந்தா செய்து கொண்டே இருந்தவர் ,இப்போதுதான் ஒப்புக்கொண்டுள்ளார்..ஷ்ரேயா,திரிஷா லெவெல் நடிப்பு கூட இல்லை.பாடலில் இடுப்பு டான்ஸ்க்குத்தான் அவ்ளோ பணம்.

ஸ்ரீகாந்த்,ஜீவா பாத்திர படைப்பு பரவாயில்லை என்றாலும்,கதை விஜய் சுற்றியே நிகழ்கிறது.நண்பனுக்கு எதையும் செய்பவராக ,நண்பர்களின் பிரச்சினைகளை தீர்ப்பவராக,புத்திசாலி மாணவராக,என விஜய் நன்கு மெருகூட்டப்பட்டுள்ளார்.சண்டைக்காட்சிகள் ஏதாவது இருக்கானு பார்த்தா அட..ஒன்ணும் இல்லை.ஆச்சர்யம்.

அப்புறம் விஜய் ஹீரோயின் அக்காவுக்கு பிரசவம் பார்க்கும் சீன்.பெரும் மழை நேரத்தில் ஆஸ்பத்திரி போக வழியில்லாமல் கல்லூரி லேப்பில்,வெப் கேமரா உதவியால்,  இலியானா (டாக்டர்)சொல்ல..சொல்ல..,பிரசவம் பார்க்கிறார் விஜய்.!!குழந்தையின் தலையை பிடித்து இழு என டாக்டர் சொல்ல,விஜய் தவிக்க,கர்ப்பிணி நோ என கத்த,நாமும் வீல்னு கத்தலாம் போல இருக்கு.ரொம்ப ஒரு மாதிரியான சீன் அது..ஆனா வாக்குவம் க்ளீனர் பைப் மூலமா குழந்தையை எடுப்பது எல்லாம்,படம் பார்க்கும் கல்லூரி மாணவிகளை பிரசவம் பத்தி பயத்தை உண்டாக்கிவிடலாம்!!

இசை பொறுத்தவரை ,என் நண்பன் போல யாரு மச்சான்...தீம் மற்றும் இஸ்கு இஸ்கு பாடல் மட்டும்தான் கேட்கும்படி இருக்கு.இன்னும் பாட்டு இருக்கானு கேட்கும்படி மத்ததெல்லாம் இரைச்சல்.

ஒளிப்பதிவிலும்,ஒலிப்பதிவிலும் ஷங்கர் எப்போதும் அதிக மெனக்கெடுவார்..இதில் இன்னும் அதிகம்...யூத் கலர்.பாடல்காட்சிகள் திரும்ப திரும்ப ரசிக்க வைக்கும்...

டாக்டர்கிட்ட டெஸ்டுக்கு போறீங்க..அவர் உங்களுக்கு எயிட்ஸ் இருக்குனு சொல்றார் ..அதை நோட்டீஸ் போர்டுல எழுதி போட்டா நல்லாருக்குமா.அதுமாதிரி முதல் ரேங்க்..கடைசி ரேங்க்,,,,என மாணவர்களை பிரிப்பது..மேல் சாதி..கீழ்சாதி என பிரிப்பது போல இருக்கு.என விஜய் சொல்லுமிடம் சூப்பர்.

கல்வி முறை சீர்சிருத்தம் பற்றி விஜய் பேசும்போதெல்லாம் தியேட்டரில் கல்லூரி மாணவ,மாணவிகள் மத்தியில் கைத்தட்டலும்,விசிலும் தியேட்டரை அதிர வைக்கின்றன..

ஷங்கர் படம் என்றாலே மினிமம் கியாரண்டி.அதிலும் த்ரீஇடியட்ஸ் வெற்றிக்களம் இருக்கும்போது பிரச்சனையே இல்லை.எதையும் சொதப்பாமல்,,,படம் பார்ப்பவர்களை குழப்பாமல் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.த்ரீ இடியட்ஸை அதிகம் சிதைக்காமல் எடுத்திருப்பதாக ஹிந்தி படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

நண்பா யு ஆர் கிரேட் என ஜீவா,ஸ்ரீகாந்த்,சத்யன் எல்லாம் பேண்டை கழட்டி ஜட்டியோடு நிற்பது நமக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் ,பெண்களுக்கு..?

நண்பன் கலர்ஃபுல் படம்.அருமையான கதைக்களம்.சிறப்பான வசனம்,வேகமான திரைக்கதை.பில்டப் இல்லாத விஜய்.மொத்தத்தில் நண்பன்,நல்ல மெசேஜ் உள்ள ஒரு அருமையான பொழுபோக்கு படம்.




Related Article:

Post Comment

15 comments:

ஆகாயமனிதன்.. said...

அடுத்து வேட்டை விமர்சனமும் போட்ருங்க....

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம். இதுவரை யாரும் நெகடிவ் விமர்சனம் போடவில்லை. சீக்கிரமே பார்க்க முயற்சிக்கிறேன்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்கள் பதிவை இணைத்துள்ளேன் .. தவறு அல்லது கோபம் என்றல் எடுத்து விடுகிறேன்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்களுக்காக ...

நண்பன் : திரை விமர்சனம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான விமர்சனம்

சி.பிரேம் குமார் said...

நல்ல விமர்சனம் அருமை

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ் சார்!சினிமா விமர்சனமும் எழுதுகிறீர்கள்,அலட்டலில்லாமல்!!வாழ்த்துக்கள்!!!!!(சனி நல்லது!)

சேகர் said...

சேட்டன் பகத் என்ற நபரை எல்லோறும் மறைத்து விட்டனர்...அவர் தான் உண்மையான கதையை எழுதியவர்...

கும்மாச்சி said...

நல்ல விமர்சனம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுநடுவே இப்படியும் போடுங்க தலைவரே.....!

chinnapiyan said...

விமர்சனம் அருமை. நன்றி வாழ்த்துகள்.

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

நடுநடுவே இப்படியும் போடுங்க தலைவரே..//நன்றி பாஸ் போடுறேன்!!அடிக்கடி..!!

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

சேட்டன் பகத் என்ற நபரை எல்லோறும் மறைத்து விட்டனர்..//மறைக்கவில்லை..தெரியாது..;-))

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

கும்மாச்சி,ராஜா,சின்னபையன்,சேகர்,யோகா,ப்ரேம் அனைவருக்கும் நன்றி ஹாலிவுட் ரசிகன்,ஆகாயமனிதனுக்கும் நன்றி!!!!

hotkarthik said...

நல்ல படத்தை மக்கள் எந்த பாகுபாடும் ரசிப்பார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு மாபெரும் உதாரணம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner