ஜெயலலிதா டாப்10 தவறுகள்
1.சசிகலாவுடன் நட்பு.தவறில்லை.அவர் உறவினர்களையும் அதிகார வர்க்கத்தில் தலையிட்டதை கண்டுகொள்ளாமல் விட்டது.
2.ஆடம்பர வளர்ப்பு மகன் கல்யாணம்
3.கருணாநிதியை கைது செய்யும்போது சன் டிவி கேமராமேனை கவனிக்காமல் விட்டது.
4.மந்திரிகள்,கட்சியினர் ஊழல் செய்வார்கள் என்பதை முதல் ஐந்து வருட ஆட்சி முடியும் வரை தெரியாமல் இருந்தது.
5.சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியது.
6.போனமுறை கருணாநிதி ஒரு ரூபாய் அரிசி,இலவச டிவி தேர்தல் அறிக்கை வெளியிடும்போது,அது என்ன செய்ய போகிறது என அசட்டையாக இருந்தது.
7.விஜயகாந்த் வளர்ச்சி தன்னை பாதிக்காது என இன்னும் நம்புவது.
8.விஜயகாந்தை சட்டமன்றத்தில் கோபத்துடன் திட்டி,கூட்டணி முறித்தது.
9.பஸ் கட்டணம்,மின்சார கட்டண உயர்வு
10.கூடங்குளம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து மின்வெட்டை சீரமைக்காமல் மத்திய அரசை பழி வாங்க காத்திருப்பது.( மக்களுக்கு மின்சார தேவை நன்கு ‘’ புரிந்தால் அவர்களே கூடங்குளம் போராட்டக்காரர்களை ஒடுக்கிவிடும் வாய்ப்பும் உண்டு என காத்திருக்கவும் வாய்ப்புண்டு.)
டாப் 5 பிடித்தவை;
1.தன்னம்பிக்கையான எதிரிகளை நடுங்க செய்யும் கம்பீரமான பேச்சு.
2.துணிச்சல்
3.பெண்களுக்கு அறிவிக்கும் சலுகைகள்.
4.ஆட்சிக்கு வந்த குறைந்த கலங்களில் பல மந்திரிகளை செயல்படவில்லை என மாற்றி அமைக்கும் வேகம்
5.நில அபகரிப்பு செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த முன்னாள் மந்திரிகளை சிறைக்கு அனுப்பியது.
ad;சனி வக்ரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பை தரும் பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
ad;சனி வக்ரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பை தரும் பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Related Article:
1 comment:
சர்தான்...
Post a Comment