Wednesday, 8 February 2012

கருணாநிதி டாப்10 தவறுகள்

கருணாநிதி டாப்10 தவறுகள்


1.எம்.ஜி.ஆர் தி.மு.க வரவு செலவுகளில் ஊழல் நடக்கிறது..கணக்கு கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள் என்று சொன்னதும்,அவரை கட்சியை விட்டு நீக்கியது.அ.தி.மு.க உதயமாகி எம்.ஜி.ஆர் இறக்கும்வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் திக்கி திணறியது.இப்போதும் அதே அ.தி.மு.க வால் பெரும் தொல்வியை சந்தித்து முடங்கி இருப்பது.


2.அட்டைகத்தி வீரன்,குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவன் என்றெல்லாம் எம்.ஜி.ஆரை கேவலபடுத்தி,இன்னும் எழுத முடியாதவற்றையெல்லாம் முரசொலியில் எழுதியும்,மேடையில் உடன்பிறப்புகளை விட்டு பேச வைத்துவிட்டு,இன்று எம்.ஜி.ஆர் இறந்த பல ஆண்டுகளுக்கு பின் எம்.ஜி.ஆர் என் நண்பர் என கூச்சமில்லாமல் சொல்வது.


2.வை.கோ வின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாமல் எங்கே தனக்கு பின் தி.மு.க தலைவர் ஆகி விடுவாரோ என பயந்து,விடுதலை புலிகள் உதவியால் என்னை கொல்ல முயற்சி என அபாண்டமாக பழி போட்டு துரத்தியது.(ஸ்டாலினை வளர்க்க நடந்த சதி இது..என வை.கோ உணர்ந்து கருணாநிதியின் ராஜதந்திரத்தை அன்றுதான் உணர்ந்தார்)

3.தன் மகள் கனிமொழி ,கட்சி கொள்கை பரப்பு செயளாளர் ராசா ஒரு வருடமாக திஹார் சிறையில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக அடைக்கப்பட்டிருந்தபோதும்,அதற்காக மக்கள் தமிழக தேர்தலில் பாடம் புகட்டிய போதும்,எதுக்கு தோத்தோம்..எதுக்கு தோத்தோம்..நம்ம கிட்ட ஒற்றுமை இல்லை என தன் சொந்த கட்சிக்காரர்களையே குழப்புவது.வாக்காளர்கள் தான் தோற்றார்கள் நாமா தோற்றோம் என இன்னும் அடங்காமல் தமிழ்க வாக்காளர்களை வெறியேற்றுவது.அப்புறம் எதுக்கு தேர்தல்..ஓட்டு..எல்லாம்..?(ஒருத்தர் இனிமேல் தோத்துட்டா நாங்களா தோத்தோம் ஓட்டு போட்டவங்கதான் தோத்தாங்கன்னு சொல்லி இனிமே ஓட்டு போட்டவங்களை கிறுக்கு பிடிக்க வைக்கலாம்..)

4.தமிழ்ர்களின் தலைவர் என தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டவர்,இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது,மத்தியில்,மாநிலத்தில் அதிகாரம் இருந்தபோதும்,ஊமையாக கல்மனதுடன் இருந்தார்.இதுதான் இவர் வாழ்நாளில் இவர் செய்த பெரும் தவறு.உலக தமிழ்ர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இவரை தூக்கியெறிந்ததும் அன்றுதான்.!!

5.கட்சி கொள்கை பரப்பு செயலாளர் ராசா ஊழல் வழக்கில் ஒரு வருசமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டும்,இன்னும் அவரை கட்சியை விட்டு நீக்காமல் வைத்திருப்பது..தி.மு.க வின் அடுத்த தலைவராக அழகிரி அல்லது ஸ்டாலின் என இவர் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வர முடியும் என்ற சுழலை உண்டாக்கிவிட்டு,தி.மு.க என்ன சங்கரமடமா வாரிசு கள் தலைமைக்கு வர ?என கேட்பது..இவர்கள் குடும்பத்தினர் தவிர யாருக்கும் தகுதி இல்லை என்பதையே இது காட்டுகிறது.

6.89 வயதாகியும் இன்னும் தலைவர் பதவி ஆசை பிடித்து கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது.மகனையும் வர விடாமல் நானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என அலற வைப்பது.90 வயதில் அன்பழகன் எனும் பொது செயலாளர்.(இருவரும் மாறி மாறி ஐஸ் வைத்து பேசிக்கொண்டு,நீ என்னை துரத்திடாதே..நான் உன்னை துரத்த மாட்டேன் என எழுதாத ஒப்பந்தத்தில் உடன்பிறப்புகளுக்கு கடுக்கா கொடுப்பது.)

7.விஜயகாந்தெல்லாம் தமிழ்க சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆன பின்னரும்,தன் கட்சி இனிமேலும் ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக நம்புவது.

8.நெஞ்சுக்கு நீதி என உண்மையே இல்லாமல் பல ஆயிரம் பக்கங்களில் கதை புத்தகங்கள் எழுதி குவிப்பது.

9.உடன்பிறப்பே ...அடைகடல் என திரண்டு வா..என சொல்லி, சொல்லி உசுப்பி ,உசுப்பியே பல ஆண்டுகாலம் ஏகப்பட்ட சொத்துக்கள் சேர்த்தது.

10.இதுதான் என் கடைசி தேர்தல் என நாதழுதழுக்க.,தமிழகம் முழுக்க கெஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டபோது,தமிழக மக்கள் வய்சான மனுசன் பாவம் ...ரொம்ப கெஞ்சிறாரு என சென்ற முறை முதல்வர் ஆக்கி அழகு பார்த்த போது அந்த மக்களுக்கு மதிப்பளிக்காமல் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக தன் குடும்பத்தினர் அதிகார வர்க்கத்தில் தலையிடுவதை கண்டுகொள்ளாமல் இருந்தது.சும்மாவே அஞ்சு வருசம் ஓட்டியது.மந்திரிகள் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருந்தது.ஸ்பெக்ட்ரம் மெஹா ஊழலால் இந்திய நாட்டுக்கே தீர்க்க முடியாத பெரும் கறையை உலக அளவில் உண்டாக்கியது.(இவங்க கறையை பூசினா சோனியா கறுப்பு தாரையே பூசி இந்தியாவை அழிப்பது வேறு விசயம்)


Related Article:

Post Comment

5 comments:

மனசாட்சி said...

டாப் 11 தவறுகள் அது என்ன மது தாத்தாவுக்கு மட்டும் 11 னு

மனசாட்சி said...

என்ன ஒரே டாப் 10 ன்னா இருக்கே யப்பா மது தாத்தாவுக்கு 11 தவறுகள்

venkatesa gurukkal said...

அம்மையார் திறம்பட ஆட்சி செய்கிறார் எனில்

1.சமச்சீர் கல்வியை தடை என்ற பெயரில் படிக்கும் மாணவர்களை இம்சை படுத்தியதா?

2.முன்னால் அரசு கட்டிய கட்டிடங்களை இயங்கவிடாமல் செய்ததா?

3.பஸ் கட்டணத்தை தடாலடியாக இருமடங்காக உயர்த்தியதா?

4.மின் கட்டணத்தை உயர்த்தப்போவதா?

இதையெல்லாம் நடப்பு அரசின் சாதனையாக சொல்லலாமா?

உங்களை கம்பியூட்டரும்,மிக்சியும்,யார் கேட்டார்கள்.விலைவாசியை கட்டுக்குள் வையுங்கள் இதுதான் சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு.நீங்கள் ஊழல் செய்யுங்கள் செய்யாமல் இருங்கள் அதனால் நடுத்தர மக்களுக்கு எந்த நன்மையோ தீமையோ இல்லை.ஒரு அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது.
விலைவாசியை கட்டுக்குள் வைப்பது.ஆபத்து காலத்தில் உதவுவது.இது மட்டுமே.உபரி பணம் இருந்தால் நலத்திட்டங்களை வழங்கலாம் அதை விடுத்து....
மக்களை வெறுப்பேற்றாதீர்கள்.

Ravindranath said...

Top 10 ADMK Mistakes

1. The persons strictly prohibited to talk against amma
2. ADMK party doesnt considering the peoples problems. They only want to increase government revenue.
3. Mostly AMMA is having a headweight it will lead to huge fall
....
...
..

Jayadev Das said...

மக்களுக்கு நல்லது செய்தால் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள், அனால் சொந்த கஜானா காலியாகக் கிடைக்கும், எல்லா அயோக்கியத் தனகளைப் பண்ணினாலும் முப்பதாயிரம் கோடியை சுருட்டிவிட்டால்...?? அப்புறம் ஜெயித்தால் என்ன தோற்றால் அவர் வழுக்கை மண்டைக்கு என்ன? கவலையே இல்லை. எந்த புன்னியவானாவது வந்து சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தையெல்லாம் கொண்டு வந்தானா போதும், மக்கள் பிழைச்சாங்க, இல்லையென்றால் இந்த மாதிரி திருடர்களால் ஜென்மத்துக்கும் வேந்தே சாக வேண்டியதுதான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner