விஜயகாந்த் நன்றி இல்லாதவர்! இப்ராஹீம் ராவுத்தர் பேட்டி -ஜூனியர் விகடன்
அம்மா முன்னிலையில் அ.தி.மு.க வில் சேர்ந்ததுல இருந்து வரிசையா நண்பர்கள் போன் செய்து விசாரிச்சுக்கிட்டே இருக்காங்க...பதில் சொல்லி மாளலை..என்று சந்தோசமாக அலுத்துக்கொண்ட இப்ராஹிம் ராவுத்தரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
என் ஃப்ரெண்டை போல யாரு மச்சான்னு நீங்களும் விஜயகாந்தும் இருந்தீங்க..நடுவுல என்னாச்சு..?
சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் மதுரையில ஒண்ணா படிச்சோம்.ஒரே நேரத்துலதான் சென்னைக்கு வந்தோம்.சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டோம்.அப்ப கேரியர் மீல்ஸ் மூணு ரூபா.அது வாங்கக்கூட எங்ககிட்ட பல நேரங்களில் காசு இருக்காது.எனக்கு கதை ஆசிரியரா ஆகணும்னு ஆசை.அவருக்கு நடிகன் ஆகணும்னு ஆசை.அவருக்காக நானும் எனக்காக அவரும் வாய்ப்பு கேட்டு அலைஞ்சோம்.
ஆண்டவன் கிருபையால் ரெண்டு பேரும் சினிமாவுல ஒரு உயரத்துக்கு வந்துட்டோம்.பூந்தோட்ட காவல்காரன்’கேப்டன் பிரபாகரன்’’ நு விஜயகாந்தை வெச்சு வெற்றிப் படங்களை கொடுத்தேன்.ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இல்லை என்ற அளவுல இருந்த எங்கள் நட்பில் 15 வருசங்களுக்கு முன்னே விரிசல் விட ஆரம்பித்தது.அது நண்பர்களுக்கிடையேயான தனிப்பட்ட விசயம்.அதை பொதுவுல சொன்னா நல்லா இருக்காது!
அ.தி.மு.க வுக்கு எதிராக விஜயகாந்த் சீறியிருக்கும் நிலையில் நீங்கள் அ.தி.மு.க வில் இணைந்திருக்கிறிர்களே!!
இந்தியாவுல உண்மையான மக்கள் இயக்கம்னா அது அ.தி.மு.க தான்.அதுதான் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டுசெயல்படும் இயக்கம்.மற்ற கட்சிகள் எல்லாமே குடும்ப இயக்கம்.அவங்களுக்கு அவங்க குடும்ப நலந்தான் முக்கியம்.மக்களை பத்தி கவலை இல்லை.தி.மு.க,பா.ம.க,காங்கிரஸ் எதுவும் இதற்கு விதிவிலக்கு இல்லை.தே,மு.தி.க வுல கூட மனைவி,மச்சினன்னு குடும்ப ஆதிக்கம்தான் இருக்கு.
எங்களுடன் இருந்ததால்தான் அந்த அம்மா ஜெயிச்சாங்க..என்று விஜயகாந்த் சொல்கிறாரே..?
இது விஜயகாந்தோட அதீதமான கற்பனை.சில மீடியாக்கள் தான் மிகைபடுத்தி அவரை பெரிய ஆளா காட்டிட்டாங்க.அந்த கட்சிக்கு ஓட்டு வங்கி பெருசா இல்லை.அதைத்தான் இதுக்கு முன்னாடி நடந்த தேர்தல்லயே பார்த்துட்டோமே..இப்ப அவரு கட்சிக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருக்காங்கன்னா..அதுல அவர் பங்கு எதுவுமே இல்லை.அம்மா ஆட்சிக்கு வரணும்னு மக்கள் நினைச்சாங்க..அம்மாவோட இவரும் இருந்ததால அவரால் ஜெயிக்க முடிஞ்சது..இதுக்கு முன்னாடி தனியா நின்னப்ப இத்தனை எம்.எல்.ஏக்கள் அவருக்கு கிடைச்சாங்களா..? தனி ஆளா அவர் மட்டும்தானே சட்டசபைக்கு வர முடிஞ்சது..? அப்புறம் எப்படி..இவரோட ஆதரவு இல்லாம மத்தவங்க ஜெயிக்க முடியாதுன்னு சொல்றார்..?
சட்டசபையில் விஜயகாந்தின் நடவடிக்கை மீதான உங்களது விமர்சனம் என்ன..?
மாண்புமிகு மன்றத்துல அவர் நடந்துகிட்டது அசிங்கம்..சட்டசபை எவ்வளவு கண்ணியமான இடம்.அதுல போய் இப்படி நடந்துக்கலாமா..?அதை எப்படி ஏத்துக்க முடியும்..? இது ரொம்பவே கண்டிக்கத்தக்கது...அவரு இத்தனை எம்.எல்.ஏக்களோட சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவரா வரக்காரணமே அம்மாதான் என்ற நன்றி உணர்ச்சியே இல்லாமல் நடந்துகிட்டார்..
விஜயகாந்தை கறுப்பு எம்.ஜி.ஆர் ந்னு சொல்றாங்களே..?
நான் பரம எம்.ஜி.ஆர் ரசிகன்.அவரை ஒப்பிட உலகத்துல யாரும் இல்லை.ஆரம்ப காலத்துல எம்.ஜி.ஆர் படாத கஷ்டம் இல்லை.தான் பட்ட கஷ்டம் இந்த சமுதாயம் படக்கூடாதுன்னு நினைச்சு அரசியலுக்கு வந்தார்.அவர் தலைவன்.விஜயகாந்த் அப்படியா..?
அவர் எம்.எல்.ஏ வா இருக்குற ரிஷிவந்தியம் தொகுதி ‘’தானே’’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில்தானே இருக்குது..? இருந்தும் அவர் ‘’தானே புயலுக்க்காக அம்மக்களுக்கு என்ன செஞ்சார்..? நிவாரண உதவிகளை செய்யறேன்னுட்டு புறப்பட்டு போனவரு,மூணு போர்வையையும்,நாலு பேர்க்கு அடியையும் கொடுத்துட்டு திரும்பி வந்துட்டாரு..வேற எதையும் அவர் செஞ்ச மாதிரி தெரியலையே..அவரை எப்படி மக்கள் தலைவனா ஏத்துக்க முடியும்..?
விஜயகாந்தை எதிர்க்க அவர் பால்ய நண்பரையே ஆயுதமாக அ.தி.மு.க பயன்படுத்த போகிறது..இந்த தாக்குதலை கேப்டன் எப்படி சமாளிக்க போகிறாரோ..?
நன்றி;ஜூனியர் விகடன்
Related Article:

2 comments:
எல்லாம் கடந்து போகும்
அ.தி.மு.க கூட்டணி இல்லாமல் போயிருந்து விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு இருந்தால் ஒன்றிரண்டு இடங்களைத்தான் பெற்றிருப்பார். தே.மு.தி.க உடன் கூட்டு போடாமல் அம்மா நின்றிருந்தால், முடிவு இழுபரியாகவோ அல்லது கருணாநிதி இன்னொரு மைனாரிட்டி ஆட்சி அமைக்கும்படியாகவோ போயிருக்கும். [இதை அவரவர் வாங்கியுள்ள வாக்கு சதவிகிதத்தை வைத்தே கணக்கிட்டு புரிந்து கொள்ளலாம்]. தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அம்மாவுக்கு ஆதரவான தீர்ப்பு என எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் உள்ளாட்சித் தேர்தல்களில் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே இருக்கும்.
Post a Comment