/> ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 18 February 2012

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்


ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்;நல்ல நேரம் சதீஷ்குமார்

1. துருதுரா யோகம் : சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன், ராகு கேதுவைத் தவிர இதர கிரஹங்கள் இருப்பின், இந்த யோகம் ஏற்படும். இதனுடைய பலன்கள், சம்பத்து, வாகனங்கள், நல்ல குணங்கள்.

2. அநபா யோகம் : சந்திரனுக்கு 12வத ராசியில் ராகு கேதுக்களைத் தவிர கிரகங்கள் இருப்பது, இதன் பலன்கள்; நல்ல ஆரோக்கியமும் பேரும் புகழும் உண்டாகும்.

3. சுநபா யோகம் : சந்திரனுக்கு 2ல் சூரியன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது. உழைத்து சம்பாதித்தல், நல்ல புத்திமான், ராஜாவுக்குச் சமானம்.

4. கேமத்துருமம் : சந்திரனுக்கு பின்னும் முன்னும் கிரகங்கள் இல்லாமை. இது ஒரு பொல்லாத யோகம். தரித்திரமும் பீடையும் உண்டாகும்.
ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏதேனும் ஒரு கிரஹம் இருந்தால் இந்த தோஷ பரிஹாரமாகும்.

5. கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம் : சந்திரனுக்கு ஏதேனும் ஒரு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) பிரஹஸ்பதி இருப்பது. இது ஒரு நல்ல யோகம். நல்ல பெயரும் புகழும் உண்டு. தீர்க்க ஆயுள், பணவருவாய் பகைவர்களை வெல்லும் திறமை.

6. சந்திரமங்கள யோகம் : சந்திரன், செவ்வாய் சேர்க்கை. இதன் பலன்கள் நிலச்சொத்து, பேரும் புகழும். ஆயினும் சில சமயத்தில் மனக்கோளாறு அல்லது சஞ்சலம் உண்டாகலாம்.

7. அதியோகம் : சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் குரு, புதன், சுக்கிரன் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ நிற்பது. இது ஒரு பலமான யோகம். இந்த யோகம் உடையவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய உத்தியோகங்களிலே இருப்பார்கள். போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவோர். நல்ல பணவசதி உண்டு. பேரும் புகழும் உண்டு. இதேபோல் லக்னத்திற்கு 6,7,8ல் சுபர்கள் இருந்தால் அது லக்ன அதியோகம் எனப்படும். அதுவும் ஒரு நல்ல யோகமே.

8. சகடயோகம் : சந்திரனுக்கு குரு 8 அல்லது 12ல் இருந்தால் சகடம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சக்கரம் போல் நிலையில்லாத வாழக்கையே பெறுவர். சதா கஷ்டங்கள் ஏற்படும்.Related Article:

Post Comment

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner