விஜயகாந்தை கண்டு நடுங்கும் தி.மு.க
விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது எனும் என் பதிவை ஒருமுறை வாசித்து பாருங்கள்..இங்கு கிளிக் செய்யவும்...
விஜயகாந்த் நேற்று சட்டமன்றத்தில் போட்ட சத்தத்தில் ,நாக்கை மடித்து வேட்டியை வரிந்து கட்டியதில் ஜெயலலிதா மிரண்டாரோ இல்லையோ..ஸ்டாலினும்,துரைமுருகனும் நடுங்கி போய்விட்டனர்.அடுத்த நாள் மீடியாக்கள் கதறி தீர்த்துவிட்டதை பார்த்து கலைஞர் பதட்டமாகிவிட்டார்..விஜயகாந்த் ஜெயலலிதா மோதல் என்ற செய்தி காட்டுத்தீயாக மீடியாக்கள் மூலம் இந்த வாரம் முழுக்க தொடரும் என்பதும் தி.மு.க வுக்கு கவலை தரும் செய்திதான்.காரணம்...விஜயகாந்த் எதிர்கட்சிதலைவராக சட்டமன்றம் ஏற்றுக்கொண்டாலும்,அந்த மனநிலைக்கு மக்களும்,மீடியாக்களும் ,அரசியல்தலைவர்களும் வரவில்லை.சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்னிலையிலேயே அவருக்கு சவால் விட்டபின்,அ.தி.மு.க எம்.எல்.ஏ வை பார்த்து நாக்கு கடித்து முதல்ல நீ உட்காருய்யா என முதல்வர் முன்னிலையில் மிரட்டியது ,அவரது தைரியம்,துணிச்சலாக நடந்துகொண்ட பின் அந்த மனநிலை எல்லோருக்கும் மாறியிருக்கிறது!
இதனால் தி.மு.க வுக்குத்தான் நஷ்டம்..10 சதவீத விஜயகாந்த் வங்கி இன்னும் பத்து சதவீதம் உயர்ந்தால் தி.மு.க இனி எப்போதும் ஆட்சிக்கு வரவே முடியாதல்லவா..?
ஜெயலலிதா வையே எதிர்த்துட்டாராம் கேப்டன்..என பட்டி தொட்டியெங்கும் மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்..நகர்புறங்களில் ஏற்கனவே தி.மு.க வாக்கு வங்கி காலியாகிவிட்டது.இனி கிராமப்புறங்களிலும் விஜயகாந்த் அலையால் காலியாகும் வாய்ப்புண்டு.
அடுத்த தேர்தலில் தி.மு.க வை போல ஜெயலலிதாவையும் மக்கள் வெறுத்தால் அது தி.மு.க வுக்கு சாதகமாக வாய்ப்பே இல்லை.விஜயகாந்துக்கு அதிக சாதகமாக முடியும்...அதே சமயம் விஜயகாந்த் தி.மு.க வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.காரணம் விஜயகாந்த் எண்ணமே இர்டண்டாவது கட்சியாக தே.மு.தி.க வை கொண்டு வருவதுதான்.அப்படியிருக்கும்போது இனி அவர் கம்யூனிஸ்டுகளை மட்டுமே நம்பியிருப்பார்.தனித்தே போட்டியிடுவார்.ஒண்ணு விஜயகாந்த் இல்லைன்னா ஜெயலலிதா ...நோ தி.மு.க. இதுதான் .....விஜயகாந்த் ஃபார்முலா!!
இப்போது நடந்த சண்டைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? இதனால் விஜயகாந்த் வாக்கு வங்கி உயர்ந்து விடாது என்கிறீர்களா..?
அதுதான் இல்லை.இனி விஜயகாந்த் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜெயலலிதாவை எதிர்த்தே ஆகவேண்டும்..ஜெயலலிதாவும் அவரை ஓட ஓட விரட்டுவார்...இதனால் மீடியாக்கள் இனி இவர்கள் மீதுதான் ஃப்ளாஸ் லைட் பிடிக்க போகிறது...மீடியாக்களின் வெளிச்ச வட்டம் இல்லையெனில் இனி எந்த கட்சியும் வளர முடியாது..தி.மு.க வில் கருணாநிதி போல இனி ஸ்டாலினால் சாதுர்யமாக செயல்பட முடியாது.சட்டமன்றத்தில் அமைதியாக நமக்கேன் வம்பு என்றுதான் அமர்ந்திருப்பார்...விஜயகாந்த் கட்சி துள்ளிக்கொண்டுதான் இருக்கும்.மக்கள் இனி விஜயகாந்த் இன்னிக்கு சட்ட்சபையில் என்ன பேசினார் என ஆவலுடம் விசாரிப்பார்கள்..இப்படித்தான்..தி.மு.க வும் ,அ.தி.மு.கவும் பெரிய கட்சிகள் ஆகின.....
விஜயகாந்தை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ்டை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
அஜீத்தின் மனித நேயம்..விஜயகாந்தின் கல்மனசு ..பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்!!
விஜயகாந்தை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ்டை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
அஜீத்தின் மனித நேயம்..விஜயகாந்தின் கல்மனசு ..பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்!!
Related Article:

No comments:
Post a Comment