/> வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 19 February 2012

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?1. அடிமனை கோல (வீட்டிற்கு அஸ்திவாரம் போட)

சித்திரை, வைகாசி, தை மாதங்களில் 
குரு, சுக்கிரன் இருவரும் அஸ்தங்கததோஷம் அடையாமல் பிரகாசமாக இருக்கும்பொழுது
அசுவினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திராடம், திருவோணம், ரேவதி என்ற நஷத்திரங்களில்
ரிக்தை, பௌர்ணமி, அமாவாசை தவிர மற்ற திதிகளில்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இவர்களின் வாரங்களில்
இவர்களுடைய லக்னங்களில்
அடிமனைகோலினால் நன்மையுண்டாகும்.

2. வீடு கட்ட ஆரம்பிக்க
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற இந்த மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது.
மேற்கண்ட மாதங்களிலும் ஆடி மாதத்திலும் வாஸ்து நிர்மாணம், கிருகப்பிரவேசம் செய்தால் தரித்திரனாகிவிடுவான்.

3. க்ருஹ ப்ரவேசத்திற்கு நல்ல காலம்

1. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை என்னும் மாதங்களில்
2. அசுவனி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி என்னும் நஷத்திரங்களில்
3. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற வாரங்களில்
4. 2-ம் இடம் சுத்தியுள்ள ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் என்ற லக்னங்களில்
கிரகப்பிரவேசம் செய்யவேண்டும்.

4. முடிக்காமல் கிருஹப்பிரவேசம் கூடாது.

மேற்கூரை கட்டாமலும்
கதவு போடாமலும்
கவர், தரை பூசாமலும்
பஞ்ச மகாயக்ஞம் செய்யாமலும்
பிராமண போஜனம் செய்விக்காமலும்
வீட்டில் பிரவேசித்தால் அந்த வீட்டில் பேய் புகுந்து விடும். பிராணஹானியும் ஏற்படும். ஆகவே மேற்கண்டவைகளை முடித்த பிறகே கிருகப்பிரவேசம் செய்யவேண்டும்.Related Article:

Post Comment

1 comment:

சே.குமார் said...

nalla pakirvu.... nanum veedu arampithuthu irukkirean nanba...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner