/> சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 8 February 2012

சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?

சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?


சனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.

சனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..?

ரிசபம் ராசி கார்த்திகை 2 ஆம் பாதம் முதல் ,ரோகிணி,மிருகசிரீடம் 2 ஆம் பாதம் வரை இருப்பவர்கள் எப்போதும் முன்னேறுவது பற்றி கவலைதான்...எப்போது சந்தோசமாக இருப்பது...என தற்போதைய காலத்தை குழப்பிக்கொண்டிருப்பர்.நீங்கள் எப்போதும் சந்தோசமான மனிதர்தான் கவலை வேண்டாம்...

பணம் சம்பாதிப்பதில் அதிக சமர்த்தர் நீங்கள் தான்.அலட்சியத்திலும்,வேலையை தள்ளிப்போடுவதிலும் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.அதை சரி செய்துகொண்டால் நல்லது.மிருகசிரீடம் நட்சத்திரக்காரர்களுக்கு கோபம் அதிகம்.அதை கட்டுப்பாட்டில் கொண்டு வாங்க..சாப்பாடு விசயத்தில் அதிக கவனம் தேவை.சிக்கன் பிரியாணின்னா ஒரு பிடி பிடிக்கிறது உங்க பழக்கம்.அசைவ உணவுகள் கட்டுப்பாட்டுக்குள் வெச்சுக்கிறது முக்கியம்.சர்க்கரை நோய் அதிகம் தாக்குவது இந்த ராசிக்காரரைத்தான்.உடல்பருமன் பிரச்சினையும் அதிகம் தாக்கும்,காரணம் உணவு பழக்கமும்,அதிக உழைப்பில்லாத உங்க தொழில் அமைப்பும் தான்.

சனிப்பெயர்ச்சிக்கு பின் ருண,ரோக,சத்ரு ஸ்தானமாகிய ஆறாம் இடத்தில் இருந்து வரும் சனீஸ்வரர் வக்ரமாகி பின்னோக்கி மீண்டும் கன்னிக்கு சென்று மறுபடி துலாம் ராசிக்கு வரப்போகும் இந்த காலகட்டத்தில் ,கூடா நட்பு கேடாக முடியலாம்..அவர்களால் பண விரயம் உண்டாகலாம் ..குழந்தைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம்...மகன்,மகளால் மன வேதனை உண்டாகும்,பூர்வீக சொத்து பிரச்சினை தலையெடுக்கும்.

பாக்யாதிபதி,சனி பூர்வீகத்துக்கு வருவது சிலருக்கு நன்மையையும் கொடுக்கலாம்.ஆனால் பெரும்பாலும் விரயமே காணப்படுகிறது.கவனம் ,கட்டுப்பாடு தேவை!Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner