Thursday, 2 February 2012

விஜயகாந்தை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ

விஜயகாந்தை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ


விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது என்ற என் பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

விஜயகாந்த் ஜெயலலிதா மோதல் இந்த வாரத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் செய்தி ஆகி விட்டது.இருவரும் கடுமையான கோபக்காரர்கள்.இரண்டு சூரியன்கள் நேருக்கு நேர் சந்தித்தது போல சட்டமன்றத்தில் உக்கிரமான தாக்குதல் நடந்தேறியது.விஜயகாந்தை வெளியே அனுப்பிவிட்டு,10 நாள் சஸ்பெண்டும் கொடுத்து ஜெ..அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்....இவர்களுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்..என சொல்லி வைக்க,,,

இன்று மதியம் பேட்டி கொடுத்த விஜயகாந்த்...இவர்களை பார்க்ககூடத்தான் எனக்கு வெட்கமாக இருக்கிறது..இவர்களுடன் ஏண்டா கூட்டணி வைத்தோம் என நான் இன்று வெட்கப்படுகிறேன் என அதே பிளேட்டை திருப்பி போட்டார் விஜயகாந்த்.

சட்டசபையில் விஜயகாந்தை உசுப்பிவிட்ட எம்.எல்.ஏ யார்..? அவர் கோவை மாவட்ட எம்.எல்.ஏ என்கின்றனர்..உண்மையில் பிரச்சினைக்கு அவர்தான் காரணம்...விஜயகாந்த் பேச எழும்போது,முதல்ல உட்காருய்யா நீ..என்று அவர் சொன்னதால்தான்..வெகுண்ட விஜயகாந்த் நாக்கை கடித்து..முதல்ல நீ உட்காருடா என சொல்ல வேண்டியதாயிற்று..விஜயகாந்த்,ஜெயலலிதா மோதலுக்கும் பிள்ளையார் சுழி ஆகிவிட்டது..

அமைதியாக ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக விஜயகாந்த் செயல்படவேண்டும் எனில்,சட்டசபையில் அவர் எப்போதும் இருக்க வேண்டும்.ஆளும்கட்சி உசுப்பிவிடத்தான் செய்யும்.சிலுப்பினால் தொடர் சஸ்பெண்ட்தான்..தேவையா....அப்புறம் மச்சினன் சுதீஷ் நிம்மதியா ஜாலியா இருக்க முடியாது.தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் உத்து கவனிக்கப்படுவார்கள்.நயாபைசா அரசாங்கத்துகிட்ட இருந்து வாங்க முடியாது...கட்சி தாவல் இனி சர்வ சாதாரணமா எதிர்பார்க்கலாம்..இல்லைன்னா கேஸ் தான்...ஆட்சி செய்பவர்கள் கோபக்காரர்கள்தான்...கோபம் இல்லைன்னா ஆட்சி செய்யவே முடியாது..அரசுக்குண்டான கிரகமே சண்டைக்கிரகம் செவ்வாய்தானே.அதனால் கோபம் .வேகம் இல்லாதவர்கள் ஆட்சி,அதிகாரத்தை கைப்பற்றவும் முடியாது.அரசியலில் இருக்கவும் முடியாது...

விஜயகாந்தை கண்டு நடுங்கும் தி.மு.க பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்!


அஜீத்தின் மனித நேயம்..விஜயகாந்தின் கல்மனசு.... பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்..!



Related Article:

Post Comment

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner