/> குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 28 March 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013


குரு பகவான் வைகாசி மாதம் 4 ஆம் தேதி 17.5.2012 வியாழக்கிழமை மாலை 6.24 அளவில் திருக்கணிதம் பஞ்சாங்கப்படி மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...

17.5.2012 முதல் 31.5.2013 வரை ரிசப ராசியில் சஞ்சாரம் செய்கிறார்..

குரு பார்க்க கோடி புண்ணியம்,,,குரு பார்க்க சகல தோசங்களும் நிவர்த்தி என்பதற்கேற்ப வருடம் ஒரு ராசிக்கு பெயர்ச்சியால் அனேக குற்றங்கள்,தோசங்கள் குறையும்...சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்..

இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நன்மையும் குருபலமும் பெறக்கூடியவர்கள் யார் ..?

மேசம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் குருபலம் பெறுகிறார்கள் இதனால் உத்யோக உயர்வு,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல்,திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தல் ,குழந்தை பாக்யம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் காலம் இது.


எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள்;


மிதுனம்-விரய குரு


மீனம்-மூன்றாமிட குரு


சிம்மம் ராசி-10 ஆம் இட குரு


துலாம் ராசி-அஷ்டம குரு


தனுசு ராசி-ஆறாமிட குரு


கும்பம் ராசி- 4 ஆம் இட குரு


இவர்களுக்கான பலன்களும் பரிகாரமும் விரைவில் எழுதுகிறேன்...ராசிபலன் ஆகட்டும்,குரு பெயர்ச்சி ஆகட்டும்,சனி பெயர்ச்சி ஆகட்டும்..பொதுவாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக பலத்தாலும்,திசா புத்தியாலும் பலன்கள் மாறலாம்..உதாரணமாக 4ஆம் அதிபதி திசை...ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவருக்கு குரு பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ பெரிய கெடுதல் செய்வதில்லை...குரு திசை,சுக்கிர திசை...லக்னத்துக்கு சுபர் திசைகள் அதிக பாதிப்பை தருவதில்லை..தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்..போலீஸ் ஸ்டேஷன் வம்பு வழக்கு என்றால் ஒருவர்க்கு டூ வீலர் லைசன்ஸ் பிரச்சினையில் கோர்ட்டில் தண்டம் அழலாம்..இன்னொருவர் செய்யாத தப்புக்கு ஜெயிலில் தண்டனையும் அனுபவிக்கலம்..இருவருக்கும் ஒரே ராசிதான்..ஆனால் திசா புத்தி வேறு வேறு ஆச்சே..ஜாதகம் வேறு ஆச்சே..எனவே இது எச்சரிக்கை பதிவுதான்..!!.Related Article:

Post Comment

4 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தகவலுக்கு நன்றி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

sowri said...

Thank you. Looking for more posting :)

Anonymous said...

enga poneenga sathishkumar................

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner