/> குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மிதுனம் ராசிக்கு எப்படி..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 21 April 2012

குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மிதுனம் ராசிக்கு எப்படி..?


குரு பெயர்ச்சி பலன்கள் ;மிதுனம்உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த குருபகவான்,வரும் 17.5.2012 முதல் ராசிக்கு 12 ஆம் இடமாகிய விரயஸ்தானத்துக்கு பெயர்ச்சியாகிறார்.உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமாகிய சுகஸ்தானம்,6 ஆம் இடமாகிய ருண ஸ்தானம்,8 ஆம் இடமாகிய அஷ்டமஸ்தானம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்...இதனால் துன்பம் தரும் இடங்கள் எல்லாம் பலம் இழக்கின்றன..

மிதுன ராசிக்கு பாவியாகிய குரு மறைவது நல்ல பலன்கள் தரும் என்றாலும்,குரு தனாதிபதி என்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும்...கணவன்,மனைவிக்குள் சிறு பிணக்குகள் அடிக்கடி தோன்றும்..சும்மாவே அப்படித்தான்..இதுல இது வேறயா என்கிறீர்களா..குழந்தைகள் உயர்கல்விக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்...திருமணம் ஆகாதவர்களுக்கு,குருபலம் இல்லாவிட்டாலும்,8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்...பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள்,சிக்கல்கள் வரும்,.எச்சரிக்கையாக இருக்கவும்...மொத்தத்தில் குரு பெயர்ச்சி உங்களுக்கு வரும் வருமானத்தை செலவழிக்க வைக்ககூடியதாக,கடன் வாங்கியாவது சொத்துக்கள் வாங்க வைக்ககூடியதாக இருக்கிறது!!


 மிருகசிரீடம்,திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வண்டி வாகன்ங்களில் செல்கையில் கவனம் தேவை...முக்கியமான பொருட்கள் தொலைந்து போகலம்..பண இழப்பு ஏற்படலாம்..ஏமாறாமல் இருக்க வேண்டிய காலம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டகும் காலம் என்பதால் நெருங்கிய நண்பரக இருந்தாலும் பண விசய்த்தில் கவனம் தேவை...தேவையில்லாத விசயத்தில் தலையிட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner