குருபெயர்ச்சி கருணாநிதிக்கு என்ன செய்யும்..?
குரு பெயர்ச்சி பலன்கள் வரிசையாக என் பேஸ்புக் பக்கத்தில் எழுதிவிட்டேன்..இப்போதான் ப்ளாக் பக்கம் வருகிறேன்;-)) பேஸ்புக் அநியாயத்துக்கு சரண்டர் ஆக்குகிறது..இதுக்கு ப்ளாக்கே பரவாயில்லை..போல...என் பேஸ்புக் பக்கம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்...!
வருகின்ற 17.5.2012 முதல் கோட்சாரப்படி குரு மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..குருபலம் இருந்தால்தான் மனபலம் உண்டாகும்..குருபலம் இல்லாதபோது தன்னம்பிக்கை ,தைரியம் மட்டுமல்ல பணபலமும் சர்று குறையும் ஏன்னா குரு முழுமையான சுபர்...நல்லவை அனைத்தும் நடக்க குருவே முழு காரகன்..அவர் கெட்டால் கெடு பலன்கள் ஏற்படுவது அதிகரிக்கும்..பிறபொபு ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்கள்,லக்னத்துக்கு யோகாதிபதி திசை நடப்பவர்கள் கொஞ்சம் சமாளிக்க முடியும்..அதாவது விபத்து நடந்து சிலருக்கு அறுவை சிகிச்சை நடந்தா குரு பலம் இருப்பவருக்கு கொஞ்சம் மாவுக்கட்டோடு சரியா போயிடும்!!
தி.மு.க தலைவர் ராசி ரிசபம்...அவருக்கு என்ன திசை..ஜாதகத்தில் குரு எப்படி என்ற ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்..இப்போதைக்கு அவ்கருக்கு குருபெயர்ச்சி எப்படி என்று மட்டும் பார்த்தால்...அவருக்கு இப்போது விரய குரு...முதல்வர் பதவி விரயமானது.....அடுத்து துவங்க இருப்பது ஜென்ம குரு...ஜென்ம குருவிலே ராமன் வனவாசம் போனதும் என்று புலிப்பாணி ஜோதிடம் பாடல் சொல்கிறது..
அதாவது ஆட்சியை ,தலைமை பதவியை வெறுத்து தாய் கோரிக்கைக்காக ராமன் வனவாசம் போனது ஜென்ம குருவில்தானாம்....வனவசம் என்றால் தலைமை பதவியை விட்டுதானே ஆக வேண்டும்..ஆகவே அவர் தலைவர் பதவியை துறந்தால் நல்லது...இல்லை என்றால் ஜோதிடர்கள் ஆலோசனைபடி வீட்டை மாற்றி ஓய்வு எடுப்பார்...வீடு மாறினால் சரியாகும் என அவர்கள் சொல்வார்கள்....இது அவருக்கு உடல்நலன் பாதிப்பையும் உண்டாக்கும்...முக்கியமாக சளி தொந்தரவு..இதனால் அவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்..இதற்குதான் அவர் யோகா,தியானம்,மூச்சு பயிற்சி செய்கிறார்.....!!
பார்க்கலாம்..ஜென்மகுரு என்ன தருவார் என்று!!
Related Article:

1 comment:
நம்மாள் குருவுக்கே அல்வா கொடுப்பார் பாருங்கள்.
Post a Comment