/> குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 17 May 2012

குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்

குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்

குருபகவானில் சொந்த வீட்டை ராசியாக கொண்ட அன்பரே....மனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் நம்பிக்கை,பிறருக்கு மனம் கோணாமல் உதவி செய்தல்,ஆலயபணி,மக்கள் பணி போன்றவை உங்கள் உங்கள் முக்கிய குணம்....இதுவே உங்கள் செல்வாக்கு உயர முக்கிய காரணம்..இதனால் நண்பர்கள் மத்தியிலும்,உறவினர்கள் மத்தியிலும் ,ஊராரிடத்திலும் நல்லபெயர் எடுத்து நல்லமனுசன் என பெயர் பெற்று திகழ்வீர்கள்...அன்பும்,கருணையும் உங்கள் இரு கண்கள்...


இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் இருந்துவந்த குருபகவான்..இனி உங்க ராசிக்கு 17.5.2012 முதல் 6 ஆம் வீட்டுக்கு மாறுகிறார்..இது கொஞ்சம் சிக்கலான இடம்தான்..கடன்,நோய் ஸ்தானம் ஆச்சே..அதிக செலவுகள் இழுத்து விட்டுடுமே ஏற்கனவே ஊருக்கும்,நண்பர்களுக்கும் பணத்தை வாறி இறைச்சிட்டு திணறும்போது இந்த சிக்கல் வேறயா..என குருபகவானை தேடி இப்போதே பலர் திட்ட,ஆலங்குடி குருபகவானை தரிசிக்க சென்று இருப்பீர்கள்..ஏன்னா சிரமப்பட்டு,அதிக செலவழிச்சு,பெரிய லெவல்லா..கும்பிட்டாதான் சாமி கும்பிடக்கூட உங்களுக்கு பிடிக்கும்..உள்ளூர்ல கும்பிடுறது மனசுக்கு நிறைவை தராமல் உங்களுக்கு சங்கடமா இருக்கும்..

ராசிக்கு 6ல் வரும் குருவால் அதிக பண விரயம்,மருத்துவ செலவுகள் ,பணி செய்யுமிடத்தில் கடும் அலைச்சல்,பஞ்சாயத்துக்கள் உங்க பேர்ல தப்பில்லைன்னாலும் எங்கியோ போற பஞ்சாயத்து எல்லாம் அண்ணே நீங்கதான் தீர்த்து வைக்கணும்னு வாசல்ல வரிசை கட்டி நிக்கும்...அதுல உங்க பேரும் கொஞ்சம் ரிப்பேர் ஆகும்..நண்பண்டா ...அவனுக்கு உதவலைன்னா நான் வேஸ்ட்னு களத்துல இறங்குனா..லைட்டா உங்களுக்கு சேதாரம் இருக்கு..சொல்லிட்டேன்...

பணம் கொடுக்கல் வாங்கலில் புதிய நபர்களை நம்ப வேண்டும்..நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு அள்ளிக்கொடுத்தா...பார்த்த விழி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான் பணம் அம்போ...! எதையும் அவசரமா செய்யாம கொஞ்சம் நிதானிச்சு செயல்படுங்க....ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்குறவங்க..இதுவரை அலட்சியமா இருந்தது ஓகே..இனி அப்படி முடியாது..மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழல் வரலாம்...

கெட்டபலனா சொல்றேன்னு சங்கடப்படாதீங்க..நீங்க நல்ல மனுசன்...சிக்கலில் சிக்கிக்க கூடாதுன்னுதான் இந்த அலரா மணி...குரு 6ல் இருந்தாலும் தனஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவுக்கு பஞ்சம் இருக்காது..அதனால் செலவுகளை சமாளித்துவிடலாம்...

குரு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலுக்கு பாதிப்பு வராது...தொழிலில் முன்னேற்றம் உண்டு..ஆனால் கடுமையான பணி சுமையும் உண்டு..பணம் வருது ஆனா வேலை கஷ்டம் என்பீர்கள்...

ஆடம்பர செலவுகளை குறைத்து,உடல்நலனில் கவனம் செலுத்தினால் போதும்....குரு பாதிப்பு தராமல் உங்களை காப்பார்..அன்னதானம் செய்யுங்கள்..நல்லதே நடக்கும்!!
Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

பார்த்தோம்...
எல்லா ராசிக்கும் படித்து பார்க்கிறோம்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner