/> ஆவணி மாத ராசிபலன் பாகம் 2 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 21 August 2012

ஆவணி மாத ராசிபலன் பாகம் 2

ஆவணி மாத விசேஷ தினங்கள்,முகூர்த்த நாட்கள்,சுப நாட்கள் விபரம்;01 (ஆக.17): காயத்ரி ஜெபம்

04 (ஆக. 20): சங்கடஹர சதுர்த்ததி

06 (ஆக. 22): சஷ்டி விரதம்

07 (ஆக. 23): கிருத்திகை/ கோகுலாஷ்டமி
08 (ஆக. 24): கிருஷ்ண ஜெயந்தி
12 (ஆக. 28): பிரதோஷம்
13 (ஆக. 29): சிவராத்திரி
14 (ஆக. 30): அமாவாசை
17 (செப். 02): ரம்ஜான் நோன்பு ஆரம்பம்
18 (செப். 03): வினாயகர் சதுர்த்ததி
22 (செப். 07): துர்க்காஷ்டமி
26 (செப். 11): சர்வ ஏகாதசி
27 (செப். 12): ஓணம் பண்டிகை/ சிரவண விரதம்/ பிரதோஷம்23.8.2012 வளர்பிறை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கன்னி லக்னம் 7.30 முதல் 9 மணி வரை 

27.8.2012 வளர்பிறை திங்கள் ஏகாதசை மூலம் நட்சத்திரம் சித்த யொகம் சிம்ம லக்னம் 6 மணி முதல் 7.30 மணி வரை

29.8.2012 புதன்கிழமை வளர்பிறை திரதோதசி உத்திராடம் நட்சத்திரம், அமிர்த யோகம் சிம்ம ல்க்னம் 5.30 ம்ணி முதல் 7.00 மணி வரை

30.8.2012 வளர்பிறை சதுர்தசி அவிட்டம் சித்த கன்னி லக்னம் 7,30 முதல் 9.00 மணி வரை


ஆவணி மாத ராசி பலன்;

முந்தைய பாகம் படிக்க க்ளிக் செய்யவும்

கன்னி;

கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து வந்தாலும் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய நன்மையை சனி செய்வார் என நம்பலம்..சோதனையை கொடுத்த சனி உங்களுக்கு ஒரு நன்மையையும் செய்துவிட்டுத்தான் போவார் சிலர் வீடு கட்டும் வேலையை தொடங்கி இருப்பீர்கள்..திருமணம் போன்ற சுப காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள்..மன சஞ்சல் கொள்ளாமல் தைரியமாக செயபடுங்கள் நன்மையே நடக்கும்..மாத தொடக்கத்தில் சாதகமாக இருக்கும் புதன் பிற்பகுதியில் விரயத்தில் சஞ்சரிக்கிறார்..இரண்டில் சனி செவ்வாய் உலவுவதல் பேச்சில் நிதானம் தேவை  உறவுகளுக்குள் பகை உண்டாகலாம் கவனம் தேவை...அதிக செலவுகள் காத்திருப்பதால் சிக்கனம் தேவை

துலாம்;

ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்துகொண்டிருக்கிறது..எதிர்பலினரிடம் அதிக கவனம் தேவை உங்கள் ராசியில் செவ்வாய்,சனி உலவுவதால் உங்களிடம் அதிக கோபம் ,விட்டுக்கொடுக்கா தன்மை,வெளிப்படும் காலம்..குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கும்..பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது...ராசிக்கு பாக்யத்தில் ராசிநாதன் சுக்கிரன் இருப்பதால் தந்தை வழி மூலம் அனுகூலமான நல்ல செய்திகள்,வந்து சேரும்..லாபங்கள் வந்து சேரும் தொழிலில் அதிக அலைச்சல் இருந்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்..

விருச்சிகம்;

ஏழரை சனி தொடங்கி விட்டதே என மன உளைச்சல் அடைய வேண்டாம் தொட்டதெற்கெல்லாம் இது ஏழரை சனியாலதான் ஆச்சு என பயப்பட வேணாம்...நமக்கு டைம் சரியில்லை அதனால் எதையும் செய்ய வேணாம்..புது முயற்சிகள் எதையும் செய்யாமல் முடங்கி இருக்க வேணாம்..கடுமையக உழையுங்கள்..உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை சனிபகவான் கொடுப்பார்..இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சேர்ந்து விரயத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல்,மனக்குழப்பம் அதிகமாகவே காணப்படும் தேவையில்லா பிரச்சினைகள் வீடு தேடி வரும்..உடல்நலனில் அதிக அக்கறை தேவை..பணம் தண்ணீராய் செலவழியும்..கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு தலைதூக்கும் என்பதால் உங்கள் பேச்சை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்..முஎருகனுக்கு அர்ச்சனி செய்து வழிபடவும் சுக்கிரன்,புதன் சாதகமாக இருப்பதால் தொழில்,வருமானம் சிறப்பாகவே இருக்கும்..

தனுசு;

உங்கள் ராசிநாதன் குரு பகை வீட்டில் இருப்பதால் மளமளன்னு வந்துக்கிட்டிருந்த வருமானம் மந்தமாகி இருக்கும்..கவலை விடுங்க சீக்கிரம் சரியாகிடும்..6ல் இருக்கும் குருவால் தொழிலில் பலவித சவால்களை எதிர்கொள்ள நேரும்...அடுத்தடுத்து வீண் செலவுகள் வந்துகொண்டே இருக்கும்..வீடு கட்டுவது போன்ற சுப செலவுகள் செய்தால் கெட்ட செலவுகள் வராது...தந்தை வழியில் சில பிரச்சினகள் எதிர்கொள்ள நேரும் உறவினர்களுடன் பகை உண்டாகும் மாதம்..இது..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

மகரம்;

எடுத்த காரியம் முடியும் வரை தளரமல் போராடுபவர்கள் நீங்கள்..உழைப்பு உழைப்பு கடுமையான உழைப்பு இதுதான் உங்கள் தாரக மந்திரம்..ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குதான்னு பார்த்தா ஒண்ணுமில்ல..எல்லாம் புல்லுக்கு பாய்ந்த நீர்தான்...10 இருக்கும் சனி,செவ்வாய் உங்கள் தொழிலில் பலவித புது முயற்சிக ஏற்படுத்தி முன்னேற்றம் தருவார்கள் ..தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை மாறி லாபம் உண்டாகும்..குருபலம் இருப்பதால் தொட்டது துலங்கும்..வெற்றியாகும்..புதிய முயற்சிகளை தயங்காமல் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே...

கும்பம்;

ராசிநாதன் சனி பலமாக இருப்பதால் தன்னம்பிக்கை,தைரியம் அதிகரிக்கும் மாதம்..10 இருக்கும் ராகு பலவிதங்களிலும் வருமானத்தை தேடி தருவார்..10 ல் ராகு இருந்தால் பணம் பறந்து வரும் என்பார்கள்..சுக்கிரன் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி கொடுக்கும்..கும்பத்துக்காரர்கள் கோவில்,குளம் கட்டுவதிலும் புண்ணிய காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருப்பவர்கள் என்பதால் புண்ணியம் நிரம்ப உடையவர்கள்..இதுவரை இல்லாவிட்டாலும் தான தர்மம் செய்யுங்கள் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்..

மீனம்;

அஷ்டம சனி வந்துவிட்டதே என கலங்கி நிற்க வேண்டாம்..கடன்,தொழில் மந்தம் என புலம்பி தவிக்க வேண்டாம்...உடல் பாதிப்புகள் எதுவும் இன்றி இருந்தாலே போதுமானது உங்கள் ஜாதகத்தில் வலுவான கிரக அமைப்புகள் இருந்து நல்ல திசாபுத்தி நடப்பில் இருந்தால் அஷ்டம சனி பெரிய பாதிப்பை தந்து விடாது..ராசி அதிபதி குரு 3ல் மறைந்தாலும் சுக்கிரன் 4ல் இருப்பதால் சுகங்கள் அதிகரிக்கும் வருமானம் இந்த மாதம் தாராளமாக இருக்கும்5ல் இருக்கும் புதன் வாழ்க்கை துணை சாதூர்யதால் ஆதாயம் பெற வைப்பார்...இக்கட்டான சூழில் இருந்து விடுபடுவீர்கள்...8ல் சனி செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை..உற்சாகமாக செயல்படுங்கள் நல்லதே நடக்கும்..முருகனுக்கு அர்ச்சனை செய்து செவ்வாய் கிழமையில் வழிபடுங்கள்!!

Related Article:

Post Comment

2 comments:

Anonymous said...

something wrong with dates. kindly check.
bala, riyadh

s suresh said...

தகவல் பகிர்வுக்கு நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner