/> ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 25 August 2012

ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்


ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலை

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொல்லை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அவர் ஒரு ஜாதகத்தில் எந்தெந்த ஸ்தானத்தில் இருந்தால் எந்தெந்த பலன்களைக் கொடுப்பார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
புதபகவான் லக்னத்தில் இருக்கப்பிறந்தவர் நல்லவிதமாக கல்விகேள்விகளில் சிறந்தவராகவும், சமயோசித புத்தியுடன் பேசவல்லவராகவும், ஞானவானாகவும், தனதான்ய சுகங்கள் உள்ளவராகவும், சரீர பூஷணம் உள்ளவராகவும் இருப்பார்.
இரண்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் புத்ர பாக்யம் உள்ளவர். செல்வச் செழிப்பு உள்ளவர். சகோதரர் சகோதரிகள் உள்ளவர். ராஜாக்களின் சபையில் வெகுமதி வாங்கும் யோக்கியதை பெற்றிருப்பவர். எடுத்த காரியத்தில் வெற்றியடையும் நோக்கமும் மனஉறுதியும் உள்ளவர்.
புதன் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஸ்தீரிகள்பால் பிரியம் உடையவர். அறுசுவை உண்டி புசிப்பவர். அக்காள் உண்டு. இனியவர்.
நான்காவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் கல்விமான். கீர்த்தியுள்ளவர். ராஜசபையில் வெகுமானம் பெறும் யோக்கியதையுள்ளவர். சுகபோஜனம் செய்யும் பாக்கியம் பெற்றவர். பண்டிதர் என்று பலராலும் போற்றப்படும் பாக்கியம் பெற்றவர்.
ஐந்தாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் வித்தைகளுக்குக் குறைவில்லாமல் இருப்பார். சுக ஜீவனம் செய்து நல்ல பதார்த்தங்களுடன் போஜனம் செய்யும் பிராப்தியுண்டு. செல்வந்தர்கள், அரசர்கள் போற்றுதலுக்குரியவர். அதே நேரத்தில் கலகப் பிரியராகவும், டாம்பீகம் உள்ளவராகவும் இருப்பார்.
ஆறாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் சத்துருக்களை எளிதில் வெல்வார். அற்ப வித்தையிருந்தாலும் அதை வைத்தக்கொண்டே பிரகாசிப்பார். திரவியம் நாசம் செய்பவராகவும் இருப்பார். பித்தரோகங்கள் அடிக்கடி தோன்றும்.
ஏழாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் சரீர காந்தியு;ளளவர். பெண்கள் மூலம் திரவியம் அடைவார். வாஹன யோகம் உண்டு. குதிரைகளைப் பராமரித்து யோகம் அடையக்கூடும்.
எட்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல குணம் உடையவர்தான். ஆனால் அற்பபுத்தியும், அடிக்கடி தலைதூக்கும். தீர்க்காயுளுடன் இருப்பார். திரவியங்கள் சேர்ப்பதில் கருத்துடன் இருப்பார்.
ஒன்பதாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல வித்யா பாக்கியம் ஆசாரமுள்ளவர். செல்வந்தன் பலரும் சிலாகித்து விரும்பும் நிலையை அடைவார்.
பத்தாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல ஞானமுள்ளவர். தர்ம சிந்தனையுள்ளவர். கீர்த்தியுள்ளவர். ஆசார சீலர். நேத்திர ரோகம் பாதிக்கும். திரவியம் சம்பாதிப்பதில் கருத்தூன்றியிருப்பார்.
பதினோராவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் யோகவான். பாக்கியங்கள் பெற்று வாழ்வார். வீடு, வாசல் பாக்கியங்களும் உண்டு. அதிகாரம் உள்ளவர். ஆனால் சற்று மூர்க்க குணமும் காணப்படும். மங்களகரமும் இவரைச் சூழ்ந்திருக்கும்.
பனிரெண்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் காமாந்தகாரர் என்னும் பெயர் பெற்றுவிடுவார். பலருக்கு விரோதியாவார். அளவுக்கு மிஞ:சி அனாவசிய செலவுகள் செய்வார். புத்திரபாய்கியம் குறைந்திருக்கும்.Related Article:

Post Comment

1 comment:

Kandumany Velupillai Rudra said...

தொடரட்டும் உங்கள் பணி ! வாழ்த்துக்கள்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner