/> உங்க ஜாதகத்துல சனி எங்க இருக்கு? ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 4 September 2012

உங்க ஜாதகத்துல சனி எங்க இருக்கு? ராசிபலன்


ஜோதிடம்;ஜாதகத்தில் சனியின் நிலை

லக்னத்தில் சனிபகவான் இருக்கப் பிறந்தவர் பல கலைகளையும் கற்றுணர்வார். ரூபவான், துர்ப்புத்தியுள்ளவர் என்றும் பெயர் எடுக்கக்கூடும். வாத சரீரமுள்ளவர். தீர்க்காயுள் உடையவர். ஞானமுள்ளவர். உற்சாகமாக காலங்கழிப்பவர்.
இரண்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் செல்வம் உடையவர். ஆயுள் விருத்தியில்லாதவர். இரண்டு விவாகங்கள் செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். ஏதாவது விசாரத்தால் பாதிக்கப்படுபவர்.
மூன்றாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர். தாசிகள் லோலர், கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்பவர். சேவகா விருத்தியு;ளளவர். தன் தான்ய விருத்தியுள்ளவர். ஆனால் சகோதர விருத்தியில்லாதவர். சுகவான் என்றும் கூறலாம்.
நான்காவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் சகோதர பாக்கியம் உள்ளவர். பெரியோர் சேர்க்கையுள்ளவர். சரீர புஷ்டியுள்ளவர். வாஹன பிராப்தியுள்ளவர். மித்ர பேதம் செய்வதில் பின் வாங்க மாட்டார்.
ஐந்தாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் தர்ம சிந்தனையுள்ளவர். விரோதிகளை எளிதி; ஜெயிப்பவர். புத்ர பாக்கியம் அதிகம் இல்லாதவர். பெரியோர்களுடைய விரோதத்தைச் சம்பாதிப்பவர்.
ஆறாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் புத்திமான், பரிசுத்தார். சத்ருக்களை எளிதில் வெல்பவர். செல்வங்கள் சேர்ப்பவர். அற்பமான வியாதிகள் உள்ளனர்.
ஏழாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் தேச சஞ்சாரம் செய்பவர். களத்ர ஹானியுள்ளவர். வேசிகள் சகவாசம் உள்ளவர். இரண்டு மனைவியர் பிராப்தியுள்ளவர். ஸ்திரீகளின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
எட்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் கண் சம்பந்தமான வியாதியுள்ளவர். கீழ் ஜாதிப் பெண்களின் இன்ப நுகர்ச்சியுள்ளவர். புத்திரர்கள் அதிகமில்லாதவர். தீர்க்காயுள் உண்டு. ஆனால் உத்தியோகத்தில் நிலைத்து இருக்காத நிலை உண்டாகும். தரித்திரத்தில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஓன்பதாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் பெற்ற தாயாருக்குப் பீஐட மனைவி பாக்கியம் உள்ளவர். திருப்பணிகள் செய்வதில் ஆசையுள்ளவர்.

பத்தாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் குருபக்தியில் சிறந்தவர். கிராமாதிகாரம் வகிப்பவர். பிறந்த ஊரை விட்டு தூரதேசத்தில் உத்தியோகம் செய்பவர். புத்திமான் என்று பலரால் போற்றப்படுவார்.

பதினோராவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அல்ப வித்தையுள்ளவரான போதிலும் ராஜபூஜித் என்று சொல்லலாம். புத்தி கூர்மையுள்ளவர். தானிய விருத்தியுள்ளவர். பூமிகளைச் சேர்த்து லாபம் அடைபவர், போக பாக்கியங்களை அனுபவிப்பவர்.

பன்னிரெண்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆர்வம் உள்ளவர். விஷப் பார்iவுயுள்ளவர். லோபியென்று பலர் தூற்றும் குணங்கள் உள்ளவர். மனைவி தோஷம் உள்ளவர்.Related Article:

Post Comment

2 comments:

Gnanam Sekar said...

நல்ல தகவல் .நன்றி

Anonymous said...

http://photosmtbnw.xn--wpiao-kra.com/

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner