/> தங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 2 September 2012

தங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம்


தங்கம் வாங்குவதற்குகந்த காலம்

குரு வர்கோத்தமம் பெற்றிருக்க புதனும், சுக்ரனும் கேந்திரத்திலிருக்கும்படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கிச் சேர்த்தால் ஒன்று கோடி மடங்காக வளர்ச்சியுறும்.
இதுபோலவே சந்திரன் தன் உச்ச அம்சமான லக்னத்தில் இருக்க, அதற்கு ஏழாமிடத்தில் குருவும் இருக்க செல்வங்களைச் சேமித்தால் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், ஆபரணங்கள் முதலானவை ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருகும்.
தங்கம், தான்யங்கள், ரத்னம் இவைகளைச் சேமிக்கும் விஷயத்திலும், சம்பாதிக்கும் விஷயத்திலும் லக்னத்தில் குரு இருந்தால் மேன்மேலும் விருத்தியாகும்.
லக்னத்தில் குருவும், இரண்டாமிடத்தில் சுக்ரனும், பத்தாமிடத்தில் சந்திரனும், பதினொன்றாம் இடத்தில் புதனும் இருந்து, அப்படிப்பட்ட நேரத்தில் செல்வத்தினைச் சேமிப்பது நல்லது. குறைவற்றிருக்கும்.
வியாழக்கிழமை தினம், லக்னத்தில் குருவும், 11ல் சூர்யனும், 6ல் சனியும் இருந்தால் அதுசமயம் பணியாட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். பொருள்களையும் சேமிக்கவேண்டும்.
லக்னத்தில் சுக்ரனும், 10ம் இடத்தில் குருவும், சந்திரனும் இருக்க, ஈயம், பித்தளை, வெண்கலம் ஆகியவற்றை வாங்கிச் சேமித்தால் ஒன்று கோடி (பல) மடங்காகும்.Related Article:

Post Comment

1 comment:

Gnanam Sekar said...

நல்ல தகவல் . நன்றி

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner