/> ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 20 November 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி

ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி 23.12.2012 மாலை 6 மணி முதல் நிகழ இருக்கிறது இதுவரை விருச்சிகத்தில் உலா வந்த ராகு துலாத்திலும்,ரிசபத்தில் இருந்து வந்த கேது மேசத்திலும் மாற இருக்கிறார்கள்...அதன் பலன்களை எழுதி வருகிறேன்..அந்த வரிசையில் சிம்மம்,கன்னி ராசி பலன்கள்;

சிம்மம் ராசி பலன்;

மூன்றதனில் கருநாகம் கூடி நிற்க
மூண்டெழுவான் முன்னேறிப் பகை தீர்ப்பான்
சான்றிதனை அறிவாய்நீ செகத்தில் என்றும்
ஜெயம் போகம் கீர்த்திதனைப் பெற்று வாழ்வான்’’

என புலிப்பாணி சித்தர் சொல்கிறார்...முயற்சி செய்து தோற்று போனவர்களுக்கு முயற்சி செய்யாமலே வெற்றிகள் தேடி வரும் காலம் இது.இதுவரை இருந்து வந்த எதிர்ப்பு,பகை,வழக்கு,கடன்,பணி செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் தொல்லை,கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினை அனைத்தும் விலகும் காலம் இது..ராகுவை போல கொடுப்பார் இல்லை என்பார்கள்..ராகு பலம் மிக்கவர்...துணிச்சல் என்றால் முரட்டு துணிச்சல் ராகுவால் மட்டுமே முடியும்..அதுவும் வீரிய ஸ்தானத்தில் இருந்தால் கேட்கவா வேணும்...ஆதாயம் நிறைய உண்டு...சனியும் விலகி விட்டதால் தைரியமாக செயல்படுங்கள்..நல்லதே நடக்கும்...

கன்னி;

கரும்பாம்பு ரெண்டில் நிற்க
கடும்பேச்சு குடும்ப பேதம்
வரும் செல்வம் தடங்கும் அன்றும்
வழிமாறி செல்வன் தானே....’’

பாடலை படித்தவுடன் பயம் கொள்ள வேண்டாம்...ராகு இரண்டில் இருந்தால் பணம் வரவில் தடங்கல் ஆகும் அல்லது ஏதேனும் வழியில் பணம் பெரிய அளவில் விரயம் ஆகும் என்பதுதான் பொருள்...கெட்ட செலவு வரும் முன் நாமாகவே நல்ல செலவை செய்து விட்டால் நல்லதுதானே..குரு பலமும் இருப்பதால் வீட்டில் சுப காரியத்தை நடத்துங்கள்..நிலம் வாங்குங்கள்..வீடு கட்ட துவங்குங்கள்.தொழிலில் முதலீடு செய்ய துவங்குங்கள்..

ஏற்கனவே கடன் பிரச்சினையில் இருக்கேன்..இதுல இது வேறயா என்றால்...வேறு வழியே இல்லை..பட்ட காலில் தான் படும்...ஏழரை சனி முடியும் வரை சமாளிக்கத்தான் வேண்டும்...கவனமாக செயல்படுங்கள்..துர்க்கையை செவ்வாய் தோறும் வணங்கி வாருங்கள்!!!
Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner