Tuesday, 28 February 2012

ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்

ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருபாம்புரம்

கும்பகோணம் -கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் கற்கத்தி என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.ஒரு முறை வினாயகர் கைலாயத்துக்கு சென்று சிவபெருமானை ஆராதித்து வழிபாடு செய்தார்.அப்போது ஈசனின் கழுத்தை சுற்றியிருந்த பாம்பு.வினாயகர் தன்னையும் வணங்கியதாக கர்வம் கொண்டது.இதையறிந்த சிவபெருமான் ஆவேசம் அடைந்து நாக இனம் முழுவதும் சக்தி இழந்து தவிக்குமாறு சாபமிட்டார்.உடனே பாம்புகள் ஆதிசேஷன் தலைமையில் சேஷபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுசாப விமோசனம் பெற்றன.சிவபெருமானின் பஞ்சமுகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்று பஞ்சலிங்கத்தலமாக இத்தலம் விளங்குகிறது.நவகிரக தோசங்கள் யாவும் இத்தலத்தில் நிவர்த்தியாகிறது.

சனிப்பெயர்ச்சியால் துன்பப்படுபவர்களும் ,ராகு திசை,சனி திசை,கேது திசை,சூரியதிசையால் துன்பப்படுபவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...சினிமா நடிகர் நடிகைகள் பலர் இங்கு ரகசிய பரிகாரங்கள் செய்வதும்,ஜெயலலிதா முதல் விஜயகாந்த் வரை அரசியல் பிரபலங்களும் இங்கு வந்து செல்வதுண்டு..காரணம் நாகம் நம் வாய்ப்புகளை கொத்தி கொத்தி தடுத்துவிடுமாம்...அதனால் இங்கு வந்து செல்லும்போது நம் செயல்பாட்டை மூர்க்கத்தனமாக மாற்றும் நாகதோசம் சமாதானம் ஆகும்..ஒரு சிலருக்கு இரண்டில் ராகு இருக்கும்..அவங்க பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது..அந்தளவு திமிராக ஆணவமாக கொடூரமாக பேச்சு இருக்கும்..வாய திறந்தாலே சண்டைதான்..இதுக்கு காரணம் இரண்டில் ராகு...அது லக்னத்துக்கு சுபர் சாரத்தில் இருந்தால் பெருசா பாதிக்காது...சனி,செவ்வாய் சாரத்தில் இருந்தால் இன்னும் மோசம்தான்..குடும்பமும்,வருமானமும் சிறப்பில்லாமல் கடனாளியாக இருப்பார்கள்....தைரியமும், இழந்துவிடுவர்.

5ல் ,9ல் ராகு கேதுக்கள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்..இல்லையேல் கர்ப்பம் அடிக்கடி கலையும்...குழந்தைகளால் தொல்லைகளும் உண்டாகும்....இதுவும் நாகதோசமே...7ல் ராகு,கேது அந்நியத்தில் திருமணம் நடக்கும்..வேறு மதமோ ஜாதியோ உள்ளவரை மணப்பர்..காதல் திருமணமாக இருக்கலாம்..அல்லது வரப்போகும் கணவன் அல்லது மனைவியால் நிம்மதி குலையும் இருவருக்கும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற சண்டை நடக்கும்...பிரிவு வரை செல்லும்..பெரும்பாலும் விவாகரத்துக்கு கோர்ட்டில் நிற்பவர்கள் இவர்கள்தான்..செக்ஸ் குறைபாடு,காமம் ஒருவருக்கு குறைவு,ஒருவருக்கு அதிகம்...படுக்கையறையில் சந்தோசம் இல்லாமல் போவதே பல குடும்பங்களில் ஓயாத சண்டைகளுக்கு காரணம்..எத்தனை நாளைக்குதான் கணவன் அமலா பால்,நயன் தாரா வை நினைச்சுக்கிட்டு இருப்பது..மனைவி சூர்யா,அஜீத்,விஜய் ந்னு நினைச்சுக்கிட்டு இருப்பா..ரெண்டு பேரும் ஒரு வீட்டில் ஏதோ வண்டி ஓடும்...நாக தோசம் அதிக பேராசையையும்,அதிக டென்சனையும்,அதிக காமத்தையும் உண்டாக்கும்...இந்த ஆலயம் செல்வது தோசம் நீங்க மேற்க்கண்ட குறைகள் நீங்க,நல்ல கணவன்,மனைவி அமையும்..
மேலும் வாசிக்க"ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்"

Post Comment

Thursday, 23 February 2012

ஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய்கின்றன..?


நவக்கிரக காரகத்துவம்;

நவக்கிரக காரகத்துவம் என்றால், நவக்கிரகங்கள் தரும் பலன் என்று பொருள். எந்த கிரக என்னென்ன வகையான பலன்களை அளிக்க முடியும். எந்தெந்த பலன்களுக்கு கராணம் ஆகிறார் என்பதாகும். 27 நட்சத்திரங்கள் 9 கிரகங்களின் சாரம் பெற்று பன்னிரு ராசிகளில் பவனி வரும்போது என்ன பலன் தருவார் என்பதை அறிய இந்த அத்தியாயம் மிகமிக அவசியம் ஆகும்.

சூரியன்

சூரியன் பிதுர்காரகர். அதாவது தந்தையை குறிப்பவர். பிதா, ஆத்மா, சிரசு, பற்கள், வலதுகண், சிலிர்த்த தலைமுடி, பித்ததேகம், வைத்தியம், ஒற்றைத்தலைவலி, ஜூரம், வியாதியாதியான பெண், சித்தம் பேதலித்த பெண்ணுடன் போகம், பெயர், புகழ், தைரியம், அரசசேவை, உத்யோகம், சைவானுஷ்டானம், தவம் புரிதல், சதாசிவன், பஞ்சலோகம், இரசவாதம், யானை, கோதுமை, மாணிக்கம், மிளகு யாத்திரை, பகல்பொழுது, ஒளி, மலை, காடு, கிராம சஞ்சாரம் இவைகளுக்கெல்லாம் சூரியனே காரகர் ஆவார்.

சந்திரன்

சந்திரன் மாத்ரு காரகர். அதாவது தாயைக் குறிப்பவர். மாதா, பராசக்தி, நல்விருந்து, ஆடை, குதிரை, தூக்கம், உடல் பருத்தும் இளைத்தும் சீறும் இருத்தல், நினைவிழத்தல், கூயரோகம், சீதளநோய்கள், இடது கண், புருவம், குடை, உத்யோகம், புகழ், முத்து, நிலையாக ஒரு இடத்தில் நில்லாமை, வெண்கலம், வெண்ணெய், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம்,கந்தபுஷ்பம், சாமரம், பலம், உப்பளவர், வண்ணார், குளியல் இவைகளுக்கெல்லாம் சந்திரனே காரகம் ஆவார்.

செவ்வாய்

செவ்வாய் சகோதரர் காரகர். பூமி, சுப்ரமணியர், பத்ரகாளி, கோபவான், குயவன், அக்கினி முகமாக செய்யும் தொழிலினர். யுத்தம், இரத்தம், சாயம், வீரதீரச் செயல்கள், செம்பு, பவழம், துவரை, அக்னி பயம், காயம், பகை, கடன், சோரம், வீர்யம், உற்சாகம், ஆடு, படைத்தலைமை, அதிகாரம், அரசியல் பதவி, விதவை ஸ்திரிபோகம், திடீர் மரணம் இவைகளுக்கெல்லாம் செவ்வாயே காரகர் ஆவார்.

புதன்

புதன் அம்மான் காரகர். மாமன், கல்விஞானம், விஷ்ணு, வியாபாரி, கணக்கன், தானாதிபதி, தூதுவன், தேர்ப்பாகன், வாக்கு வன்மை, கதை, கவிதை, கட்டுரை, சங்கீதம், ஜோதிடம், உபந்நியாசம், மேடைப்பேச்சு, உபாசனை, யுக்தி, புத்தி, சத்தியவசனம், வைஷ்வ நியமம், வியாபாரங்கள், கடித பரிவர்த்தனை, தற்காலத்தில் கெரியர், சிற்பத்தொழில், திருநங்கை, தேர், தாதன், தாதி, நாட்டிய வகைகள் முதலானவைகளுக்கும் அண்டரோகம், வாதநோய், விஷரோகம், பிறன் இல் விழைதல், (தாசிலோலன்) பிரபஞ்சமுணர்ந்தவன், நிலையானபேச்சு, புத்திகுறைவு, மரகதப்பச்சை ரத்தினம் ஆகியவைகளுக்கும் இளங்கன்று, இலை, பாசிப்பயறு, வெந்தயம் இவைகட்கும் புதனே காரகர் ஆவார்.

வியாழன் (எ) குரு

வியாழன் புத்திர காரகர். புத்திரர், பிரம்மா, ஞானம், அஷ்டமாசித்துகள், உபதேசம், புத்தி, யுக்தி, யோகப்பயிற்சி, ஆசானாயிருத்தல், உபதேசம், விவகார ஆலோசனை, அரச பதவி, குடும்பத்தலைவன், அரசு சேவை, செல்வம், செல்வாக்கு, ஒழுக்கம், அரச வெகுமதி, பட்டங்கள், விருதுகள், சுருதி, ஸ்மிருதி, ஆன்மீக நெறிகள், ஆன்மீக ஒழுக்கம், சாந்தம், தங்கம், வைடூரியம், புஷ்பராகம், சேமேதேகம், மலர் வகைகள், கனி வகைகள், இனிப்பு, கண்கள், சுற்று வர்க்கம், சித்தர் பரம்பரை, ரிஷி வர்க்கம், தேனி, கடலை, சீரகம் ஆகியவைகட்கு வியாழன் (எ) குருவே காரகர் ஆவார்.

சுக்ரன்

சுக்ரன் களத்திரகாரகர். மனைவி, வீடு, பட்டப்பெயர், பகல்கால மாதா, பல பெண்கள் தொடர்பு, தாசிலோலன், சங்கீதவாத்யம், பரதநாட்டியம், மற்றும் அதில் நாட்டம், வாசனை மலர்கள், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, மற்றும் பரிமள வகைகள், கட்டில் மெத்தை சப்பிரமம் முதலானவைகளுக்கும் வெண்சாமரம், அரசவர்க்க மங்கை, அழகி, போகபாக்யம், அழகு, இளமை, மைவிழி, செல்வவளம், வாகனம், மாலை, கொடி, பொம்மைகள், முதலானவைகளுக்கும் ரத்தினம், வைரம், வெள்ளி, கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம், அகடவிகடம்  பேசுதல், மிமிக்ரி செய்தல், ஆசை, பெண்தெய்வவழிபாடு, மக்களிடம் செல்வாக்கு மக்களுக்காக வாதிடல் மற்றும் போராடுதல் மக்கள் சேவைக்கு அறநிலை அமைத்தல் நட்பு, பசு, பால், தயிர், அன்னம், மொச்சை, புளி, ஈயம், தேவஇனப்பெண்கள், இலட்சுமி கடாட்சம், ஆகாய, சமுத்திர யாத்திரை ஆகியவைகளுக்கு சுக்ரனே காரகர் ஆவார்.

சனி 

சனி ஆயுள்காரகர். இரவுக்கால தந்தை சாத்தான், உபாயம், ஜீவன மார்க்கம், எருமை விருத்தி, இரும்பு, ஆளடிமை சேவக விருத்தி, வயல், விவசாயம், நீலரத்தினம், ஆகியவைகளுக்கும் மரவேலை, களவு, ஆத்ம பலமின்மை, சிறைமடல், இராஜதண்டனை, வீண்வார்த்தை, வெட்கமின்மை, துன்பம், ஏட்டிக்கு போட்டியாக வாயாடுதல், கடன், அபகர்மா, நீதிக்கு புறம்பானவை. நாத்திகம் பேசுதல், மதுவர்க்கம் அருந்துதல், போதை வஸ்துக்கள், நீச ஸதிரி, விதவை மாதர், ஊனமான ஸ்திரியும் இன்பம் அனுபவித்தல், அலி, அங்கஹீனம், சித்த சுவாதீனமின்மை, மேகநோய், பித்தநோய், எள், கடுகு, உளுந்து, நல்லெண்ணை ஆகியவைகட்கும் சனியே காரகர் ஆகிறார்.

ராகு

யோகம் ராகு தந்தை வழிபாட்டன் வம்சம், எதிர்பாராத புகழ், ஜாலவித்தை (மேஜிக்) செப்படி வித்தை (ஏமாற்றுதல்), களவு, பலவகை வேடத்தொழில், மறைமுக வருவாய் பெறுதல், சேவகத் தொழில், சொந்த ஊர்விட்டு அயலூர் வாசம், தன் குலத்துக்கு விரோதமாக நடத்தல், கண்கட்டி வித்தைகள், உடல்நலம் குன்றிய பெண்ணிடம் இன்பம் அனுபவித்தல், குஷ்டம், வீக்கம், அதிகம் பேசுதல், வாய்வு பிடிப்பு, பித்தம், வயிற்றுவலி, வெட்டுக்காயம், பிளவைக்கட்டிகள் போன்ற நோய்களுக்கும் வளர்ப்பு பிராணிகள், சிறைப்படல், லஞ்சம் வாங்குதல், மதம் மாறுதல் போன்றவைகளுக்கு ராகுவே காரகர்.

கேது

ஞானம், தாய்வழி பாட்டன் வம்சம், கட்டத்தொழில், கம்பளம், சுயஇன்பம், நீசத்தொழில், விபசாரம், பாபத்தொழில், அயல்தேச ஜீவனம், ரணம், விஷரோகம், குஷ்டம், குன்மம் முதலியவைகளுக்கும் தீயினால் கண்டம், தற்செருக்கு, சதா சுகமின்மை, சிறைப்படல் ஆகியவைகட்கு கேதுவே காரகன் கேது மோட்சகாரகன் என்று கூறுவது மரபு.

மேலும் வாசிக்க"ஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய்கின்றன..?"

Post Comment

சென்னை வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டரில்சுட்டுக்கொலை;சபாஷ் போலீஸ்

சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளில் கொல்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளைக்கும்பலை இன்று அதிகாலையில் போலீஸார் என்கவுண்டரில் சுட்டு கொன்றிருக்கிறார்கள்...வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸார்..வெளியே வரும்படி எச்சரிக்கை செய்ய,அவர்கள் சுட ஆரம்பித்த்திருக்கிறார்கள்,உடனே போலீஸ் திரும்ப சுட்டிருக்கின்றனர்..

இரண்டு வங்கிக் கொள்ளைகள் அடுத்தடுத்து நடந்ததும்...தமிழ்க மக்களை மட்டுமல்ல..தமிழ்க போலீஸையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது..என்னய்யா தமிழ்நாட்டுல கொள்ளையடிக்கிறது ரொம்ப ஈஸியா இருக்குன்னு எல்லா திருடன்களும் இங்கே வந்துருவானுகளோன்னு பயமாவும் இருந்துச்சி..இவங்களை என்கவுண்டர் பண்ணாம சிறையில போட்ருந்தா இன்னும் பல வடமாநிலத்தான்கள் உள்ளே வந்திருப்பானுக..சிறைக்கு போனாலும் இப்பல்லாம் கோழிச்சோறு கிடைக்குதே.

என்கவுண்டரில் ஈடுபட்டபோது இரு போலீஸார் காயமடைந்துள்ளனர்.அதுவும் தலையில்.போலி என்கவுண்டர் என கொக்கரிக்கும் சிலர் கவனிக்கவும்.தலையில் குண்டு பாய்ந்திருக்கிறது.போலி என்கவுண்டர்ன்னா சுண்டு விரல்ல அடிபட்ருக்கும்..காக்க காக்க சினிமாவில் சூர்யா வுக்கு அடிபட்ட மாதிரி.

வங்கி கைள ்ப்ற்றி துப்பு துலக்க மிக கடினமாக உழைத்திருக்கின்றனர் சென்னை போலீஸ்...மற்ற வங்கிகளில் நோட்டமிட்டவர்களை..வந்து போனவர்களை சி.சி.வி கேமிராவில் பதிவானதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து..அதுவும் எத்தனை வங்கிகள் எத்தனை சி.சி.வி கேமிரா எவ்வளவு நேரம் ஓடக்கூடியா வீடியோக்கள்..? அடேயப்பா அத்தனையையும் வங்கி ஊழியர்களை பார்க்க வைத்து உன்னிப்பாக அடையாளம் கண்டுணர்ந்து கொள்ளையன் படத்தை நேற்று தான் டிவியில் அறிவித்தார்கள்..அன்று இரவே சுற்றி வளைப்பு..அடேயப்பா சென்னை போலீஸ்...ஸ்காட்லாண்ட் போலீஸ்க்கு இணையான திறமைசாலிகள் ந்னு சும்மாவா சொன்னாங்க..சாதித்தா காவல்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! இனி கொள்ளையர்கள் முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல வடமாநிலத்துக்கு உயிர் தப்பினா போதும்னு தலை தெறிக்க ஓடிவிடுவார்கள்!!!


மேலும் வாசிக்க"சென்னை வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டரில்சுட்டுக்கொலை;சபாஷ் போலீஸ்"

Post Comment

Sunday, 19 February 2012

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?



1. அடிமனை கோல (வீட்டிற்கு அஸ்திவாரம் போட)

சித்திரை, வைகாசி, தை மாதங்களில் 
குரு, சுக்கிரன் இருவரும் அஸ்தங்கததோஷம் அடையாமல் பிரகாசமாக இருக்கும்பொழுது
அசுவினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திராடம், திருவோணம், ரேவதி என்ற நஷத்திரங்களில்
ரிக்தை, பௌர்ணமி, அமாவாசை தவிர மற்ற திதிகளில்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இவர்களின் வாரங்களில்
இவர்களுடைய லக்னங்களில்
அடிமனைகோலினால் நன்மையுண்டாகும்.

2. வீடு கட்ட ஆரம்பிக்க
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற இந்த மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது.
மேற்கண்ட மாதங்களிலும் ஆடி மாதத்திலும் வாஸ்து நிர்மாணம், கிருகப்பிரவேசம் செய்தால் தரித்திரனாகிவிடுவான்.

3. க்ருஹ ப்ரவேசத்திற்கு நல்ல காலம்

1. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை என்னும் மாதங்களில்
2. அசுவனி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி என்னும் நஷத்திரங்களில்
3. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற வாரங்களில்
4. 2-ம் இடம் சுத்தியுள்ள ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் என்ற லக்னங்களில்
கிரகப்பிரவேசம் செய்யவேண்டும்.

4. முடிக்காமல் கிருஹப்பிரவேசம் கூடாது.

மேற்கூரை கட்டாமலும்
கதவு போடாமலும்
கவர், தரை பூசாமலும்
பஞ்ச மகாயக்ஞம் செய்யாமலும்
பிராமண போஜனம் செய்விக்காமலும்
வீட்டில் பிரவேசித்தால் அந்த வீட்டில் பேய் புகுந்து விடும். பிராணஹானியும் ஏற்படும். ஆகவே மேற்கண்டவைகளை முடித்த பிறகே கிருகப்பிரவேசம் செய்யவேண்டும்.

மேலும் வாசிக்க"வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?"

Post Comment

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?


உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?
சூரிய யோகங்கள்

1. வேசி யோகம் : சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு கேதுக்களைத் தவிர ஏதேனும் கிரஹம் இருப்பது, பண வருவாய், சத்ருக்கள் ஜெயம்.
2. வாசி யோகம் : சூரியனுக்கு 12ல் சந்திரன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரஹம் இருப்பது, பேரும் புகழும் உண்டாகும்.
3. சுப உபயசாரி யோகம் : சூரியனுக்கு இரு பக்கங்களிலேயும் (இருராசிகளிலேயும்) கிரகங்கள் இருப்பது. நல்ல பணவருவாய், பேரும் புகழும் உண்டாகும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்

1. பத்ர யோகம் : புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
2. ருசக யோகம் : அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
3. சசயோகம் : சனி பகவான் ஆட்சி உச்சங்களில் ருது கேந்திரத்தில் நிற்பது. நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
4. ஹம்ஸ யோகம் : குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
5. மாலவ்ய யோகம் : சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்.

அஷ்டலஷ்மி யோகம்
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும். எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.

தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை.
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாத ராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.

மேலும் வாசிக்க"உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?"

Post Comment

அமலா பால் செய்த கலாட்டா..சினிமா ஸ்டார் இப்படி செய்யலாமா?


மிகப்பெரிய சேனல் அது. அங்கேயிருக்கிற ஒவ்வொரு இஞ்ச்-ம் கூட லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தை உள்ளடக்கியது. பிரதமரே வந்தால் கூட தனது காரை 100 மீட்டர் தூரம் Amala Paulதள்ளி நிறுத்திவிட்டுதான் வாசல் வரைக்கும் நடந்து செல்ல வேண்டும் என்பதெல்லாம் ரூல்!
இந்த சேனலுக்கு நேரடி பேட்டியளிக்க போன அமலா பால் செய்த அலட்டல்களை பற்றிதான் இப்போது கதை கதையாக கதைக்கிறது கோடம்பாக்கம். அப்படியென்ன செய்துவிட்டாராம் அவர்?

ம்ஹூம்... என் கார் வாசல் வரைக்கும் போய் நின்றால்தான் காரை விட்டே இறங்குவேன் என்று கூறிவிட்டாராம். எம்.டியை தவிர யார் காரும் அது வரைக்கும் போகாதும்மா. ப்ளீஸ் என்று கெஞ்சிய சேனல் நிருபரை, போய்யா லு£சு என்பது போலவே ட்ரீட் பண்ணிய அமலா, காரைவிட்டு இறங்கவே இல்லையாம் கடைசிவரைக்கும்.

அப்புறம் சேனல் மேனேஜர், செக்யூரிடி ஆபிசர் என்று ஒவ்வொரு டேபிளுக்காய் ஓடி அமலா வந்த காரை வாசல் வரைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தாராம் சேனல் நிருபர். அப்புறம் என்ன. சட்டென்று இறங்கி பட்டென்று உள்ளே செல்ல வேண்டியதுதானே? வாசலுக்கு நேராக காரை நிறுத்திக் கொண்ட அமலா, 'இருங்க பசிக்குது. ஒரு பர்கரை முழுங்கிட்டு வர்றேன்' என்று காருக்குள்ளேயே இருந்து காலை பசியை தீர்க்க, அடி வயிறெல்லாம் கலங்கிப் போனாராம் நிருபர்.

இந்த நேரத்தில் எம்.டி வந்தால் வேலைக்கு உலைதான் என்று மனசெல்லாம் இடி இடிக்க, 'மேடம் சீக்கிரம்' என்று கெஞ்சிக் கொண்டேயிருந்தாராம் அவர். அந்த சேனலின் ஒட்டுமொத்த செக்யூரிடி டீமும் ஓடி வந்து 'சீக்கிரம் சீக்கிரம்' என்று பதறியும், ஆற அமரதான் வயிற்றுக்குள் போனதாம் அந்த ஒன்றரையணா பர்கர்.
சேனலை விட்டு அமலா கிளம்பும் வரைக்கும் இந்த பீதி நீடித்ததாக தெரிவிக்கிறது கோடம்பாக்கத்தின் அக்கப்போர் நியூஸ் பீரோ!

நன்றி;தமிழ் சினிமா.காம்
மேலும் வாசிக்க"அமலா பால் செய்த கலாட்டா..சினிமா ஸ்டார் இப்படி செய்யலாமா?"

Post Comment

Saturday, 18 February 2012

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்


ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்;நல்ல நேரம் சதீஷ்குமார்

1. துருதுரா யோகம் : சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன், ராகு கேதுவைத் தவிர இதர கிரஹங்கள் இருப்பின், இந்த யோகம் ஏற்படும். இதனுடைய பலன்கள், சம்பத்து, வாகனங்கள், நல்ல குணங்கள்.

2. அநபா யோகம் : சந்திரனுக்கு 12வத ராசியில் ராகு கேதுக்களைத் தவிர கிரகங்கள் இருப்பது, இதன் பலன்கள்; நல்ல ஆரோக்கியமும் பேரும் புகழும் உண்டாகும்.

3. சுநபா யோகம் : சந்திரனுக்கு 2ல் சூரியன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது. உழைத்து சம்பாதித்தல், நல்ல புத்திமான், ராஜாவுக்குச் சமானம்.

4. கேமத்துருமம் : சந்திரனுக்கு பின்னும் முன்னும் கிரகங்கள் இல்லாமை. இது ஒரு பொல்லாத யோகம். தரித்திரமும் பீடையும் உண்டாகும்.
ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏதேனும் ஒரு கிரஹம் இருந்தால் இந்த தோஷ பரிஹாரமாகும்.

5. கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம் : சந்திரனுக்கு ஏதேனும் ஒரு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) பிரஹஸ்பதி இருப்பது. இது ஒரு நல்ல யோகம். நல்ல பெயரும் புகழும் உண்டு. தீர்க்க ஆயுள், பணவருவாய் பகைவர்களை வெல்லும் திறமை.

6. சந்திரமங்கள யோகம் : சந்திரன், செவ்வாய் சேர்க்கை. இதன் பலன்கள் நிலச்சொத்து, பேரும் புகழும். ஆயினும் சில சமயத்தில் மனக்கோளாறு அல்லது சஞ்சலம் உண்டாகலாம்.

7. அதியோகம் : சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் குரு, புதன், சுக்கிரன் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ நிற்பது. இது ஒரு பலமான யோகம். இந்த யோகம் உடையவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய உத்தியோகங்களிலே இருப்பார்கள். போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவோர். நல்ல பணவசதி உண்டு. பேரும் புகழும் உண்டு. இதேபோல் லக்னத்திற்கு 6,7,8ல் சுபர்கள் இருந்தால் அது லக்ன அதியோகம் எனப்படும். அதுவும் ஒரு நல்ல யோகமே.

8. சகடயோகம் : சந்திரனுக்கு குரு 8 அல்லது 12ல் இருந்தால் சகடம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சக்கரம் போல் நிலையில்லாத வாழக்கையே பெறுவர். சதா கஷ்டங்கள் ஏற்படும்.

மேலும் வாசிக்க"ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்"

Post Comment

Friday, 17 February 2012

தனுஷ் மீது ரஜினி ரசிகர் ஆவேச தாக்குதல்

தனுஷ் மீது ரஜினி ரசிகர் ஆவேச தாக்குதல்;

தனுஷ் தம்பி....


ரஜினி மருமகன் ஆனபின் எனக்கு சுய அடையாளமே போய் விட்டது என புலம்பி இருக்கிறீர்கள் விரக்தி அடைந்து இருக்கிறீர்கள்...இதை பத்திரிக்கையில் படித்த பின் முதலில் தோன்றியது இதுதான்..

தன் மகள் விரும்புகிறார் என்றதும் அவர் ஆசைக்கும்,சுதந்திரத்திற்கும் குறுக்கே நிற்க விரும்பாத ஒரு நல்ல தகப்பனாக ரஜினி நடந்துகொண்டார்..அப்போதெல்லாம் நீங்கள் ,உங்கள் அப்பா,அண்ணன் எல்லாம் பிட்டு படம் இயக்கிக்கொண்டும்,நடித்துக்கொண்டும் இருந்தீர்கள்.உங்கள் தந்தை பெரும் கடனாளியாக ஊருக்குள் ஒளிந்துகொண்டு இருந்தார்...

அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ரஜினி தன் முடிவில் தெளிவாக இருந்தார்...ஆடம்பரமாக முன்னாள் முதல்வர்கள் முன்னிலையில் உங்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்.ஆமாம் நீங்க சொல்வது சரிதான் ரஜினி மிகப்பெரிய மாஸ்.அவர் மருமகன் என்றால்,அவர் பெண்ணை கட்டியவரென்றால் உங்களுக்கும் தனி ஒளி வட்டத்தை மீடியாக்களும்,மக்களும் கொடுக்கத்தான் செய்வார்கள்.இது உங்களுக்காக அல்ல..ரஜினி பொண்ணை கட்டிக்கிட்ட அதிர்ஷ்டத்தால் வருவது.ஆனா அதை ஒழுங்கா காப்பாத்திக்க தெரியணும்..இல்லைன்னா உங்க சாயம் வெளுத்துவிடும்.ரஜினிக்கு மருமகனாக உங்களுக்கு தகுதி இல்லைன்னு மக்கள் சிரிக்க ஆரம்பிச்சிருவாங்க...அதனால் ரொம்ப சலிச்சுக்காதீங்க...ஒழுங்கா பொண்ணை சந்தோசமா காப்பத்துற வழியை பாருங்க..கொலை வெறி பாட்டு ஹிட்டானதுல இருந்து பிரதமர் கூட சூப் குடிச்சதுல இருந்து ரொம்ப ஓவர் பந்தா கிட்டு தலைகால் புரியாம திரியறீங்க தம்பி..கொஞ்சம் அடங்குங்க..பெரிய பெரிய உச்சாணி புகழ்கொம்புல உட்கார்ந்துருக்குற ரஜினி,கமல்,அமிதாப் எல்லாம் தேமேன்னு இருக்கும்போது உங்களுக்கு ஏன்....ஒவர் பந்தா ..?

ஓகே..பொழப்ப பாருங்க தம்பி...ரஜினி சிவனேன்னு இருக்காரு..அவரை நோண்டாதீங்க..
மேலும் வாசிக்க"தனுஷ் மீது ரஜினி ரசிகர் ஆவேச தாக்குதல்"

Post Comment

ஜோதிடம் வளர்ந்த வரலாறு



பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஜோதிடக்கலை.அன்று இடுப்பில் கோவணமும் கையில் தண்டமுமாக பித்தர்கள் மாதிரி சுற்றித் திரிந்தவர்களுக்கு ஜோதிடம் எப்படித் தான் வசமானதோ தெரியவில்லை.கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாய் இருக்கும் கிரகங்கள், பூமியில் உள்ள மனித இனத்தை எப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஞான ஒளியின் மூலமாக உணர்ந்து பாடல்களும் ,வெண்பாக்களுமாகத் தொகுத்ததில் 4,50,000 பாக்கள் என்பது உதிரி தகவல்.
  • 1.சூரியன்
  • 2.பிரம்மன்
  • 3.வியாசர்
  • 4.வசிஸ்டர்
  • 5.அத்திரி
  • 6.பராசுரர்
  • 7.கசியபர்
  • 8.நாரதர்
  • 9.கர்க்கர்
  • 10.மரிசீ
  • 11.மனு
  • 12.ஆங்கீரசர்
  • 13.உலோமர்
  • 14,பெளலசர்
  • 15.சிஸ்னவர்
  • 16.யவனர்
  • 17.மரு
  • 18.செளனகர்
ஆகிய 18 பேர் முக்கியமானவர்கள் என ஆதி ஜோதிட வரலாறு ஓலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.
வேத காலத்தில் பிறந்து இதிகாச காலத்தில் வளர்ந்து, இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது ஜோதிடம்.கி.பி.169 ல் யவனேஸ்வரர் என்பவரால் யவன ஜாதகம் எனும் நூல் இயற்றப்பட்டது.கி.பி.258 ல் இதே பெயரில்இன்னொரு நூல் வெளியிடப்பட்டது.பிற்காலத்தில் கி.பி.587 ல் வராகமிகிரர் எனும் சிறந்த ஜோதிட அறிஞர் தோன்றினார்.இவர் பஞ்ச சித்தந்திகா,பிருஹத் சம்ஹிதை,பிருஹத் ஜாதகம்,பிருஹத் யாத்திரை ,லஹு ஜாதகம் ,பிருஹத் விவாஹ படலம் ஆகிய நூல்களை எழுதினார்.
வராஹிமிரரது மைந்தர் பிருதுயசன் ஹோராட் பன்சாசிகா எனும் நூலை எழுதினார்.கி.பி.1172ல் கணித மேதை பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோமணி எனும் நூலை இயற்றினார்.இவர் 1118 ல் கரணகுதூகலம் எனும் நூலை இயற்றினார்.கல்யாண வர்மா என்பவர் சாராவளியை எழுதினார்.கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கணிதம் மற்றும் வானவியலை காட்டிலும் சோதிடத்தில் பல நூல்கள் தோன்றின.சாமுத்ரிகா லட்சணம்,கைரேகை,பிரஸ்னம்,எனும் தனிதனி பிரிவுகள் தோன்றின.
பலன்களை நிர்ணயிப்பதில் பல தீபிகை ,ஜாதகாதோசம்,ஜாதக சந்திரிகை,பிருஹத் பாரசரீயம் என்பன முக்கியத்துவம் பெற்றன.இது போன்ற நூல்கள் இன்றளவும் வட மொழியில் 74 நூல்கள் உள்ளன.
தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை மொத்தம் 66 உள்ளன,அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.இதை கீரனூர்நடராஜன் எழுதினார்.மங்களேஸ்வரியம்,வீமகவி ஜோதிடம்,சாதக சூடாமணி,சினேந்திரமாலை,தாண்டவமாலை,சாதக சிந்தாமணி,சந்திர காவியம்,ஆனந்த களிப்பு ,புலிப்பாணி ஜோதிடம்,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.அனைத்து ஜோதிடர்களிடமும் இந்த நூல்கள் இருக்கும்.ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம்.அவற்றில் முக்கியமானவை ;புலிப்பாணி ஜோதிடம்.இது பாடல்கள் நிரம்பியது.பாடல்கள் மூலம் கிரக சேர்க்கை அதன் பலன்களை சொல்கிறது.புலிப்பாணி சித்தர் எழுதியது.தமிழின் மிக பழமையான ஜோதிட நூல்களில் முக்கியமானது.எண்ணற்ற ஜோதிட நூல்கள் இருப்பினும் அவற்றை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல சோதிடர்கள் எழுதி வருகிறார்கள்.அவற்றை படிப்பது சுலபமாக இருக்கும்.அவர்களில் ஆத்தூர் மாதேஸ்வரன்,சி.ஜி.ராஜன்,சிவதாசன் ரவி,முருகு ராஜேந்திரன்,புலியூர் பாலு,சுப.சுப்ரமணியன், முக்கியமானவர்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை.இந்த கிரகவியல் கலைக்கு என்றுமே தேய்பிறை கிடையாது.மகான்களால் உருவாக்கப்பட்டு மன்னர் வம்சத்தால் பாதுகாக்கப்பட்டு,இன்று மனித இனத்துக்கு மகத்தான வழிகாட்டியாக விளங்குகிறது.இந்தக் கலை வசப்பட வேண்டுமானால் அதற்கும் கிரகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் தொட்டே ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது.இன்று பிரதமரும் முதல்வரும் எப்படி தங்கள் அலுவல் பணியின் துவக்கத்தில் சந்திக்கும் நபராக உளவுத்துறை உயர் அதிகாரி இருக்கிறாரோ,அதைப்போல அன்று மன்னர்கள் ஆண்ட காலத்தில் ,அரசர் சந்திக்கும் முதல் நபர் அரண்மனை ஜோதிடரைத்தான்.அதுவும் பல தேர்வுகளுக்கு பின்னரே அந்த அரண்மனை ஜோதிடரை தேர்ந்தெடுத்திருப்பார் அரசர்.
ஜோதிடரும் மன்னரின் ஜாதகத்தை மனக்கண் முன் நிறுத்தி அன்றைய கோட்சார நிலையை கருத்தில் கொண்டு தினப்பலன் சொல்வார். தான் போர் தொடங்க வேண்டிய நட்சத்திரம் எது என ஆராய்ந்து,,தன் நட்சத்திரத்துக்கு 6 வது நட்சத்திரத்தில் ராவணன் மீது போர் தொடங்கினால் வெற்றி பெறலாம் என சூட்சுமம் உணர்ந்து செயல்பட்டான் ராமன்என ராமயணம் சொல்கிறது.
ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், வடநாட்டு ஜோதிட நூல்களும் விளங்குகின்றன…மேலும் அவரவருக்கென்று ஜோதிட குருக்கள் இருக்கின்றனர்.அந்தந்த பகுதியில் வசிக்கும் ஜோதிடர்களிடம் பல வருடங்கள் ஜோதிடம் பயின்று அதன் பின்பே ஜோதிடர்களாக தொழில் தொடங்குகின்றனர்.ஆனால் இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும்,ஜோதிட கிரகம் என சொல்லப்படும் செவ்வாயும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்

-கட்டுரை.காமில் நான் எழுதிய கட்டுரை

மேலும் வாசிக்க"ஜோதிடம் வளர்ந்த வரலாறு"

Post Comment

Monday, 13 February 2012

தமிழ் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச காலர் டியூன்,ரிங்டோன் எது தெரியுமா..?

தமிழ் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச ரிங்டோன் பாடல் எது தெரியுமா..? tamil ring tone

பெண்கள் அதுவும் தமிழ் பெண்கள் மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள்.உண்மையான அன்புக்கு தன் உயிரையும் கொடுப்பார்கள்..சரியில்லாத சில ஆண்கள்தான் அவர்களை புரிந்து கொள்ளாமல் தூற்றுகிறார்கள்...இவன் தண்ணியடிச்சுட்டு வந்து அவளை சீண்டுவான்..இனிமேல் சரக்கடிச்சா என் கூட பேசாதே என பல முறை சொல்லி பார்ப்பான்..அவன் திருந்த மாட்டான்..உடனே அவள் இவன் நமக்கு சரிப்பட மாட்டான் என விலகிவிடுவாள்..அவன் இவள் பிரிந்ததை சாக்காக வைத்து மேலும் குடித்துவிட்டு அவளை தூற்றுவான்..இதுதான் பெரும்பாலான காதல் தோல்விகளின் கதை...சும்மா ஊர் சுத்துபவனையும் திருத்த முடியாமல் பல காதலிகள் விட்டு பிரிகிறார்கள்.

சும்மா இருப்பவனையும்,சோம்பேறியையும் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.தமிழ் பொண்ணுக்கு சுத்தமா பிடிக்காது.ஏதாவது ஒரு திறமை அவனுக்கு இருக்கணும்.அப்படிப்பட்ட ஆனைதான் எந்த பெண்ணும் விரும்புவாள்..தமிழ் சினிமாவில் விஜய்,அஜீத்,சூர்யா போன்ற ஆண்களை எல்லா தமிழ் பெண்களும் நிஜ வாழ்வில் எதிர்பார்ப்பதில்லை..தமிழ் இளைஞர்களும் அமலாபால்,நயன் தாரா,சமந்தா,ஹன்சிகா மாதிரி எதிர்பார்ப்பதில்லை...ஆண் அன்புக்காக ஏங்குகிறான்..அம்மா போல தன் மீது பாசம் காட்டும் பெண்ணுடன்  தன் வாழ்வை கழிக்க விரும்புகிறான்..தமிழ் பெண்ணோ...தன் தந்தையை போல பொறுப்பாக குடும்பம் நடத்தும் ஆணை தேடுகிறாள்.அவன் தன் மீது உயிரையே வெச்சிருக்கணும்.அவன் கிட்ட நகைச்சுவை உணர்வு நிறைய இருக்கணும்,அப்படி இல்லைன்னாலும் கரடு முரடா பேசாதவனாவாச்சும் இருக்கணும்..நல்லா திறமையா சம்பாதிக்கணும் என்றுதான் விரும்புகிறாள்..

பெரும்பாலான தமிழ் பெண்கள் இப்போது வைத்திருக்கும் ரிங்க்டோன் என்ன தெரியுமா..?

நன்றி சொல்ல உனக்கு..வார்த்தையில்லை எனக்கு...என்ற பாடல்தான்.ஏன் ..? என்றால் இந்த பாடலில் இருக்கும் அன்பான வரிகளும்,காதலும் தான் காரணம்..நான் கேட்ட,பெரும்பாலான பெண்களின் காலர்டோன் இதுவாகத்தான் இருக்கிறது..ஈரோடு,கோவை பகுதிகளில் இந்த பாடலை தான் பெண்கள் ரிங்டோனாகவும்,காலர் டோனாகவும் வைத்திருக்கிறார்கள் என்று என் நண்பனும் சொல்கிறான்..! இந்த படங்கள் எல்லாம் வெளியாகி ரொம்ப வருசங்கள் ஆகியிருந்தாலும்,இதன் பாடல்களில் உள்ள மென்மையான மனம் மயக்கும் இசையும்,அர்த்தமுள்ள பாடல் வரிகளும்,ஒவ்வொரு பெண்ணின் மனதை யும் உருக்குகிறது..ஆணுக்கு அதை கேட்கும்போது அப்பெண்கள் மீது காதலும் பொங்குகிறது..இது உண்மை..மல்லிகைப்பூ போல ஆண்களை இந்த பாடல் மயக்குவதால்தானோ என்னவோ பெரும்பாலான தமிழ் பெண்கள் இப்பாடல்களை வைத்துக்கொள்கின்றனர்.

நீங்களும் கேட்டு பாருங்க!!


இதே போல இன்னொரு பாடலும் இருக்கிறது..நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தையில்லையே...தெய்வம் என்பதே நீ எனக்கு நீயல்லவா....நன்றி சொல்ல விட இது . இன்னும் மெஹா ஹிட்.இந்த பாடலை பத்துக்கு ஒரு பெண்ணாவது தன் காலர் டோனாக வைத்திருக்கிறார்.தனக்கு போன் செய்யும் கணவன் அல்லது காதலன் கேட்டு தன் மனதை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தே வைத்துக்கொண்டிருக்கின்ற்னர்..போல...!!
மேலும் வாசிக்க"தமிழ் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச காலர் டியூன்,ரிங்டோன் எது தெரியுமா..?"

Post Comment

சனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்

சனி வக்ரம் ;ராசிபலன்-ஜோதிடம்-எண் ஜோதிடம்-வாஸ்து-கைரேகை


சனி வக்ரம் ராசிபலன் அடிப்படையில் கடந்த இரு பதிவுகள் எழுதியிருக்கிறேன்..எல்லா ராசிகளுக்கும் எழுதுவத்ற்குள் சனி வக்ரம் முடிஞ்சிரும் போலிருக்கு..ஓகே இனி வேகமா எல்லா ராசிக்கும் எழுதிடுறேன்.மேசம்,ரிசபம் ராசிபலன் படிக்காதவர்கள் அருகில் உள்ள் கூகிள் தேடலில் நல்ல நேரம் ப்ளாக் சைட்ல இருக்கு பாருங்க..அதுல சனி வக்ரம் அல்லது sani peyarchi என தேடினால் கிடைக்கும்.

இன்றைய பலன்கள் மிதுனம் ராசியினருக்கு;

சனி வக்ரம் 8 ஆம் தேதியே துவங்கி விட்டது..இன்னும் 4 மாதங்கள் வரை இது இருக்கும்.அதாவது சனி வக்ரம் துவங்கிய பின் தான் மின்வெட்டு பிரச்சினை தமிழ்கத்தில் பூதாகரமாகி உள்ளது..சனி மின்சாரத்துக்கும் அதிபதி அல்லவா.ஏற்கனவே அரசியல் கிரகம் செவ்வாயும் வக்ரகதியில் உள்ளது.எனவே இது அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.இது மூத்த அரசியல் தலைவர்களுக்கும் கண்டமான காலம்.விஜயகாந்த் ஜாதகம் கணித்து அவர் மீது வழக்கு பதிய அதிக வாய்ப்பு இருக்கிறது.வாயால் அவர் கெடுவார் என உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே எழுதியிருந்தேன்..அது இன்று பலிதம் ஆகியிருக்கிறது..இது குறித்து பாராட்டிய சென்னை விஜய் க்கு நன்றி.இன்னும் நிறைய எழுத விருப்பம்தான்..அதுவுமில்லாமல் பப்ளிக்காக பல விசயங்களை எழுதி வைப்பது கொஞ்சம் பிரச்சினைதான்.ஜெயலலிதா ஜாதகம் குறித்து ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன்...நல்ல நேரம் பார்த்து ! தான் வெளியிடணும்!!

மிதுனம் ராசியினர் புதன் கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.நுட்பமானவர்கள்..யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.யார் எது சொன்னாலும் சொல்பவர்களின் யோக்யதையை தராசு மீது வைத்து அளந்து பார்ப்பது போல மனக்கண்ணில் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுப்பார்கள்.ஆராய்ச்சி குணம்,பகுத்தறிவு குணம் அதிகம் உண்டு....மிதுன்பம் ராசிக்காரர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும்.பலருக்கு ஏணிப்படியாக விளங்குவார்கள்..இவர்களுக்கு அவர்கள் உதவுவதும் இல்லை.இவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.நல்ல பேச்சுதிறமை நிறைந்தவர்கள்.இவர்கள் பலம் பலவீனமே பேச்சுதான்.

சனிப்பெயர்ச்சி ஆனது உங்கள் ராசிக்கு 5 ஆம் இடம்....இப்போது வக்ரம் ஆகியிருப்பது நான்காம் இடம்..இரண்டுமே பாதகம் தான்..நான்காம் இடம் சுகம் ஸ்தானம் என்பதால் போன வாரம் முதலே சொத்துக்கள் வில்லங்கம்,உடல்நலன் பிரச்சினை,மருத்துவ குறிப்புகள் நாடுதல் என்று இருப்பீர்கள்...தொழிலில் அதிக மன உளைச்சல் ஏற்படும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்.அதிக பண விரயமும் உண்டாகி வருகிறது.பெற்றோர்களால் கவலையும் வாட்டும்.திருப்பதி பாலாஜி யை தரி8சனம் செய்து வந்தால் ,வெங்கடேஸ்வரா எல்லா பிரச்சினையையும் தீர்த்து வைப்பார்.பிரியாணி சாப்பாடு எல்லாம் எல்லாம் லிமிட்டாக இருக்கட்டும்.சமையல் விசயத்தில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..தீயால் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சனி,செவ்வாய் வக்ரம் என்பதால் இரும்பு சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் அதிக கவனம் தேவை.நிதி,மற்றும் பங்கு வர்த்தகம் பிரச்சினையை கொடுக்கும்.மகளிர் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் பெண்களிடம் அதிக கவனம் தேவை.குழந்தை சம்பந்தமான சிகிச்சைக்கு செல்பவர்கள் இன்னும் 3 மாதம் கழித்து முயற்சிக்கலாம்.

எண் ஜோதிடம்;

எண் ஜோதிடம் பொறுத்தவரை எனக்கு 7 வருட அனுபவம் உண்டு.பண்டிட் சேதுராமன் முதல் கொண்டு தமிழில் வெளியான அனைத்து எண் ஜோதிட நூல்களையும் ஆய்வு செய்து,பார்த்துவிட்டேன்..இதுதான் எண் ஜோதிடம் என்ற முறையை நான் வகுத்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்டபெயர் அமைத்து வருகிரேன்..திருச்சி கோபால் தாஸ்,திருப்பூர் அசோக் பாரதி,சேலம் ஜெயவஸ்ரூபா போன்ற எண் நியூமராலஜி பார்ப்பவர்களிடம் பார்த்தவர்களும் பண்டிட் சேதுராமன் மகனிடம் ஜோதிடம் பார்த்தவர்களும் என்னிடம் வந்து பெயர் திருத்தம் செய்து கொண்டு இப்போது நன்றாக இருக்கின்றனர்.அவர்கள் வாங்கும் கட்டணம் 4,000 ரேஞ்ச்..நான் வாங்குவது..மிக சொற்பம்..அவர்கள் டிவி விளம்பரம் செய்து பில்டப் கொடுக்கின்றனர்..எனக்கு வயது குறைவாக இருப்பதால் இப்போதே ஓவராக வளர வேண்டாம் என பொறுமையாக இருக்கிறேன்..என் வாடிக்கையாலர் ஒருவர் விஜய் டிவியில் நான் நிகழ்ச்சி நடத்த தானே பணம் கட்டிவிடுகிறேன்.வாரம் அரை மணி நேரம் பேசுங்கள்..என்றார்..அவர் சொல்லி இரண்டு வருடம் இருக்கும்..நான் மறுத்துவிட்டேன்..என் கூச்ச சுபாவமும் ஒரு காரணம்..என் அலுவலகத்தில் தில்லா பேசிவிடுவேன்...மேடை என்றால் கொஞ்சம் உதறும்.எனது நண்பரும்,வாடிக்கையாருமான ஈரோடு கணேஷ் வீடியோஸ் உரிமையாளர் திரு ஜெயபாலன்அவர்கள்..ஜோதிட நிகழ்சிக்கான ஒளிப்பதிவு செய்து தருகிறேன் என சொல்லியிருக்கிறார்..பார்ப்போம்.. 

நியூமராலஜி யில் என் ஸ்டைல் என்னவெனில், என் ஜோதிடம் விதிப்படி நான் பெயரில் இரண்டு ஏ எழுத்துக்கள் இரண்டு எஸ் எழுத்துக்கள் எல்லாம் சேர்த்து நியூமராலஜியை கற்பழிப்பதில்லை.உச்சரிப்பு முறையை பயன்படுத்திதான் சக்ஸஸ் கொடுக்கிறேன்...பெயரின் உச்சரிப்பு ஒலியை மாற்றினால் வெற்றி கிடைக்கும்.இது என் அனுபவம்...இது எப்படி சாத்தியம் என்பதையும் நியூமராலஜி தொழிலில் நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களையும் பற்றி எழுத நிறைய விசய்மிருக்கிறேது..அவ்வப்போது எழுதுகிறேன்...
மேலும் வாசிக்க"சனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்"

Post Comment

Saturday, 11 February 2012

விஜயகாந்த் நன்றி இல்லாதவர்! இப்ராஹீம் ராவுத்தர் பேட்டி -ஜூனியர் விகடன்

விஜயகாந்த் நன்றி இல்லாதவர்! இப்ராஹீம் ராவுத்தர் பேட்டி -ஜூனியர் விகடன்

அம்மா முன்னிலையில் அ.தி.மு.க வில் சேர்ந்ததுல இருந்து வரிசையா நண்பர்கள் போன் செய்து விசாரிச்சுக்கிட்டே இருக்காங்க...பதில் சொல்லி மாளலை..என்று சந்தோசமாக அலுத்துக்கொண்ட இப்ராஹிம் ராவுத்தரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

என் ஃப்ரெண்டை போல யாரு மச்சான்னு நீங்களும் விஜயகாந்தும் இருந்தீங்க..நடுவுல என்னாச்சு..?

சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் மதுரையில ஒண்ணா படிச்சோம்.ஒரே நேரத்துலதான் சென்னைக்கு வந்தோம்.சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டோம்.அப்ப கேரியர் மீல்ஸ் மூணு ரூபா.அது வாங்கக்கூட எங்ககிட்ட பல நேரங்களில் காசு இருக்காது.எனக்கு கதை ஆசிரியரா ஆகணும்னு ஆசை.அவருக்கு நடிகன் ஆகணும்னு ஆசை.அவருக்காக நானும் எனக்காக அவரும் வாய்ப்பு கேட்டு அலைஞ்சோம்.

ஆண்டவன் கிருபையால் ரெண்டு பேரும் சினிமாவுல ஒரு உயரத்துக்கு வந்துட்டோம்.பூந்தோட்ட காவல்காரன்’கேப்டன் பிரபாகரன்’’ நு விஜயகாந்தை வெச்சு வெற்றிப் படங்களை கொடுத்தேன்.ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இல்லை என்ற அளவுல இருந்த எங்கள் நட்பில் 15 வருசங்களுக்கு முன்னே விரிசல் விட ஆரம்பித்தது.அது நண்பர்களுக்கிடையேயான தனிப்பட்ட விசயம்.அதை பொதுவுல சொன்னா நல்லா இருக்காது!

அ.தி.மு.க வுக்கு எதிராக விஜயகாந்த் சீறியிருக்கும் நிலையில் நீங்கள் அ.தி.மு.க வில் இணைந்திருக்கிறிர்களே!!

இந்தியாவுல உண்மையான மக்கள் இயக்கம்னா அது அ.தி.மு.க தான்.அதுதான் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டுசெயல்படும் இயக்கம்.மற்ற கட்சிகள் எல்லாமே குடும்ப இயக்கம்.அவங்களுக்கு அவங்க குடும்ப நலந்தான் முக்கியம்.மக்களை பத்தி கவலை இல்லை.தி.மு.க,பா.ம.க,காங்கிரஸ் எதுவும் இதற்கு விதிவிலக்கு இல்லை.தே,மு.தி.க வுல கூட மனைவி,மச்சினன்னு குடும்ப ஆதிக்கம்தான் இருக்கு.

எங்களுடன் இருந்ததால்தான் அந்த அம்மா ஜெயிச்சாங்க..என்று விஜயகாந்த் சொல்கிறாரே..?

இது விஜயகாந்தோட அதீதமான கற்பனை.சில மீடியாக்கள் தான் மிகைபடுத்தி அவரை பெரிய ஆளா காட்டிட்டாங்க.அந்த கட்சிக்கு ஓட்டு வங்கி பெருசா இல்லை.அதைத்தான் இதுக்கு முன்னாடி நடந்த தேர்தல்லயே பார்த்துட்டோமே..இப்ப அவரு கட்சிக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருக்காங்கன்னா..அதுல அவர் பங்கு எதுவுமே இல்லை.அம்மா ஆட்சிக்கு வரணும்னு மக்கள் நினைச்சாங்க..அம்மாவோட இவரும் இருந்ததால அவரால் ஜெயிக்க முடிஞ்சது..இதுக்கு முன்னாடி தனியா நின்னப்ப இத்தனை எம்.எல்.ஏக்கள் அவருக்கு கிடைச்சாங்களா..? தனி ஆளா அவர் மட்டும்தானே சட்டசபைக்கு வர முடிஞ்சது..? அப்புறம் எப்படி..இவரோட ஆதரவு இல்லாம மத்தவங்க ஜெயிக்க முடியாதுன்னு சொல்றார்..?

சட்டசபையில் விஜயகாந்தின் நடவடிக்கை மீதான உங்களது விமர்சனம் என்ன..?

மாண்புமிகு மன்றத்துல அவர் நடந்துகிட்டது அசிங்கம்..சட்டசபை எவ்வளவு கண்ணியமான இடம்.அதுல போய் இப்படி நடந்துக்கலாமா..?அதை எப்படி ஏத்துக்க முடியும்..? இது ரொம்பவே கண்டிக்கத்தக்கது...அவரு இத்தனை எம்.எல்.ஏக்களோட சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவரா வரக்காரணமே அம்மாதான் என்ற நன்றி உணர்ச்சியே இல்லாமல் நடந்துகிட்டார்..

விஜயகாந்தை கறுப்பு எம்.ஜி.ஆர் ந்னு சொல்றாங்களே..?

நான் பரம எம்.ஜி.ஆர் ரசிகன்.அவரை ஒப்பிட உலகத்துல யாரும் இல்லை.ஆரம்ப காலத்துல எம்.ஜி.ஆர் படாத கஷ்டம் இல்லை.தான் பட்ட கஷ்டம் இந்த சமுதாயம் படக்கூடாதுன்னு நினைச்சு அரசியலுக்கு வந்தார்.அவர் தலைவன்.விஜயகாந்த் அப்படியா..?
அவர் எம்.எல்.ஏ வா இருக்குற ரிஷிவந்தியம் தொகுதி ‘’தானே’’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில்தானே இருக்குது..? இருந்தும் அவர் ‘’தானே புயலுக்க்காக அம்மக்களுக்கு என்ன செஞ்சார்..? நிவாரண உதவிகளை செய்யறேன்னுட்டு புறப்பட்டு போனவரு,மூணு போர்வையையும்,நாலு பேர்க்கு அடியையும் கொடுத்துட்டு திரும்பி வந்துட்டாரு..வேற எதையும் அவர் செஞ்ச மாதிரி தெரியலையே..அவரை எப்படி மக்கள் தலைவனா ஏத்துக்க முடியும்..?

விஜயகாந்தை எதிர்க்க அவர் பால்ய நண்பரையே ஆயுதமாக அ.தி.மு.க பயன்படுத்த போகிறது..இந்த தாக்குதலை கேப்டன் எப்படி சமாளிக்க போகிறாரோ..?

நன்றி;ஜூனியர் விகடன்
மேலும் வாசிக்க"விஜயகாந்த் நன்றி இல்லாதவர்! இப்ராஹீம் ராவுத்தர் பேட்டி -ஜூனியர் விகடன்"

Post Comment

Thursday, 9 February 2012

சனிவக்ரம் -விஜயகாந்த்,ஜெயலலிதா,கருணாநிதிக்கு என்ன செய்யும்..?

சனிவக்ரம் அரசியல் தலைவர்களுக்கு என்ன செய்யும்..?

சனி வக்ரம் 8.2.2012 முதல் 138 நாட்களுக்கு ஏற்படுகிறது.இக்காலத்தில் சனி தற்போது பெயர்ச்சியாகியுள்ள துலாம் வீட்டில் இருந்து மறுபடியும் கன்னி வீட்டிற்கு செல்கிறார்.இதனால் அரசியல் தலைவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கும் என பார்ப்போம்.

கருணாநிதி ;

கருணாநிதி ஜாதகப்படி மிருகசிரீடம் நட்சத்திரம் ரிசபம் ராசி.அவருக்கு சனி ராசிக்கு ஐந்தில் வருகிறது.இது புத்திர ஸ்தானம்.பிள்ளைகளால் தொல்லைகள் நேரும் காலம்..5 ல சனி..நெஞ்சுல வலி...அதாவது மனக்கவலை மிக அதிகரிக்கும்...என சொல்கிறேன்..தப்பா எடுத்துக்காதீங்க..சொத்துக்களை பிரித்தல்...,கட்சியில் பதவி வழங்குதல் சம்பந்தம மன உளைச்சல்ல இருக்காரு..இவரா பதவி கொடுக்கட்டும் என மகன் நினைக்க,தனக்கு பிறகு பதவி மகனுக்கு கிடைச்சா போதும் என இவர் நினைப்பாரு.இதனால் குடும்பத்தில் கலகம் உண்டாகும் காலம் இது.சுக்கிர திசையில் சந்திரன் புத்தி பெண்களால் நிம்மதி இல்லாமல் தவிப்பார்.பெண்கள் டார்ச்சர் அதிகம் காணப்படும்.2012 ஜூன் மாதத்துக்குபின் வரும் சுக்கிர திசை,செவ்வாய் புத்தி இவர் ஜாதகப்படி இவருக்கு நல்லதல்ல...செவ்வாய் இவர் ஜாதகத்தில் சுய சாரத்தில் இருப்பதால்,கர்மஸ்தானாதிபதி செவ்வாய் லக்னத்தை பார்ப்பதால் கண்டம்...செவ்வாய் புத்தி தொடங்கிய,வரும் ஒரு வருடம் இரண்டு மாதம் இவருக்கு கண்டமான காலம் ஆகும்...சனி வக்ரம் தொல்லையே கொடுக்கும்....!!

விஜயகாந்த்;

விரயாதிபதி சந்திரன் இவர் ஜாதகத்துக்கு 2ல் இருப்பதால் பிரச்சாரம் செய்யும்போது மட்டும் வாய் திறந்தால் போதுமானது..ஏன்னா இவர் ஜாதகமே பேச்சால் கெடும் ஜாதகம் ஆகும்.சனி வாக்குல இருந்தா சனி நாக்குல என்பார்கள் அது இவருக்குத்தான் முற்றும் பொருந்தும்.சினிமாவில் அமலாபால்,திரிஷா,நயன் தாரா என கூட்டணி போட்டு படங்கள் நடிக்கலாம்...இப்போதைக்கு அரசியலில் அமைதியாக் இருப்பதே நல்லது...
சனி வக்ரம் பொறுத்தவரை இவர் பிறக்கும்போது ஜென்ம சனி.கன்னியில் சனி இருக்கும்போது பிறந்தார்.,இப்போது மீண்டும் சனி கன்னிக்கே செல்ல இருப்பதால் 138 நாட்கள் இவருக்கு கண்டம்தான்...கெட்ட பெயர் இன்னும் உண்டாகும்...கவனம் தேவை...

ஜெயலலிதா;

இவரது ஜாதகத்தில் வரும் ஜூன் மாதத்துக்குபின் குரு திசை தொடங்குகிறது.இது யோகமான அமைப்பு.இவருக்கும் வாக்கு ஸ்தானத்தில் சனி இருந்தாலும் அது வக்ரம் பெற்று உள்ளது.இதனால் விஜயகாந்த் போல பேச்சால் கெடுவார் என சொல்ல முடியாது.ஆனால் அவ்வப்போது இவரது பேச்சு சர்ச்சையாகி விடும்.தலைக்கனமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டுவதாக தெரியும்.சனி வக்ரம் இவர் ராசிக்கு எந்த பாதிப்பையும் தராது என்றாலும் செவ்வாய் சாரத்தில் சனி செல்வதால் செவ்வாய் பாதகாதிபதி என்பதை அரசியல் நெருக்கடியை அதிகம் சம்பதிப்பார்.மக்கள் எதிர்ப்பு போராட்டங்களும்,சட்டம் ஒழுங்கு பாதிப்பால் சில மன உளைச்சலை இவருக்கு ஏற்படுத்தலாம்..!!



மேலும் வாசிக்க"சனிவக்ரம் -விஜயகாந்த்,ஜெயலலிதா,கருணாநிதிக்கு என்ன செய்யும்..?"

Post Comment

ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு

ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு


ராகுல்காந்தி பிறந்த தேதி;19.6.1970
பிறந்த நேரம்;5;50 காலை
 பிறந்த ஊர்;டில்லி


இவரது ராசி;விருச்சிகம்
லக்னம்;மிதுனம்
நட்சத்திரம்;கேட்டை



இவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்த்ததால் தந்தை வழி ஸ்தானம் வலுவடைந்தது.செவ்வாய்,சூரியன் இணைந்து அதனை சனி பார்த்தது,9 ஆம் பாவத்தில் ராகு அமர்ந்ததும் தந்தையை அகால மரணம் அடைய வைத்தது.

செவ்வாய்,சூரியன் இணைந்து 7 ஆம் பாவத்தை பார்ப்பதால் எந்த பெண்ணையும் முறையாக திருமணம் செய்யும் யோகம் அடையமுடியவில்லை.அதாவது ஊரறிய திருமணம் செய்யமுடியவில்லை.அப்படி செய்தாலும் நிலைக்காது.பெண்கள் விசயத்தில் சொதப்பல் திலகமாக இவர் இருப்பதும் ஒரு காரணம்.செவ்வாய்,சுரியன் லக்னத்தில் இருந்தாலே எல்லாம் குளறுபடிதான்.தொழில்,குடும்பம் எதுவும் சிறக்காது.சனி அரசியல் கிரகங்களை பார்த்து முடக்கி விட்டதாலும்,பாக்யாதிபதி சனி நீசம் அடைந்து சனி நின்ற வீட்டுக்கதிபன் செவ்வாயும் லக்னத்துக்கு பாதகாதிபதி ஆகிவிட்டபடியால் இவர் அரசியலில் மக்கள் செல்வாக்கை பெறவும் இயலாது.தலைவராக உருவெடுக்கவும் முடியாது.

நடப்பு சந்திர திசை சனி புத்தியும்,தற்போது ஏழரை சனி தொடங்கியதாலும் இவர் தொட்டதெல்லாம் தோல்விதான்.தாய் சோனியாகாந்திக்கும் கண்டம்.இவருக்கும் கண்டம் ..இருவருக்கும் மறுபடி மருத்துவ சிகிச்சை காத்திருக்கிறது.தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் காலத்தில் இவர் இப்போது இருக்கிறார்.

இவரது தங்கை பிரியங்கா அரசியலில் பரிணமிக்க வாய்ப்பு அதிகம் உண்டு.ராகுல்காந்தி விபத்துகளை சந்திப்பார்.அரசியலை விட்டு ஒதுங்கியே இருப்பார்.நல்ல மக்களை கவரும் பேச்சுத்திறமை இவருக்கு இல்லை.ஆனால் இவர் தங்கைக்கு உண்டு.கட்சியை வழிநடத்தும் திறனுக்கும்,பிரதமர் ஆகும் அமைப்பிற்கும் சூரியன்,குரு,செவ்வாய் கிரகங்கள் சிறப்பாக அமைய வேண்டும்.இவர் ஜாதகத்தில் இவை எல்லாம் கெட்டுய் விட்டன..மக்கள் செல்வாக்கு பெற சனி,சந்திரன்,புதன் சிறப்பாக அமைய வேண்டும்.அவையும் இவர் ஜாதகத்தில் வலு குன்றிய்றே காணப்படுகின்றன..பூர்வீக ஸ்தானமான 5 ஆம் இடத்தை சனி பார்ப்பது பூர்வீக சாப கேடை சொல்கிறது...ஆக இவர் பெரும் குழப்பத்தில் இப்போது இருக்கிறார்...அரசியலை விட்டு விரைவில் ஒதுங்குவார் அல்லது இவர் தங்கை இவரை ஓரங்கட்டுவார்..!!
மேலும் வாசிக்க"ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு"

Post Comment

Wednesday, 8 February 2012

சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?

சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?


சனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.

சனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..?

ரிசபம் ராசி கார்த்திகை 2 ஆம் பாதம் முதல் ,ரோகிணி,மிருகசிரீடம் 2 ஆம் பாதம் வரை இருப்பவர்கள் எப்போதும் முன்னேறுவது பற்றி கவலைதான்...எப்போது சந்தோசமாக இருப்பது...என தற்போதைய காலத்தை குழப்பிக்கொண்டிருப்பர்.நீங்கள் எப்போதும் சந்தோசமான மனிதர்தான் கவலை வேண்டாம்...

பணம் சம்பாதிப்பதில் அதிக சமர்த்தர் நீங்கள் தான்.அலட்சியத்திலும்,வேலையை தள்ளிப்போடுவதிலும் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.அதை சரி செய்துகொண்டால் நல்லது.மிருகசிரீடம் நட்சத்திரக்காரர்களுக்கு கோபம் அதிகம்.அதை கட்டுப்பாட்டில் கொண்டு வாங்க..சாப்பாடு விசயத்தில் அதிக கவனம் தேவை.சிக்கன் பிரியாணின்னா ஒரு பிடி பிடிக்கிறது உங்க பழக்கம்.அசைவ உணவுகள் கட்டுப்பாட்டுக்குள் வெச்சுக்கிறது முக்கியம்.சர்க்கரை நோய் அதிகம் தாக்குவது இந்த ராசிக்காரரைத்தான்.உடல்பருமன் பிரச்சினையும் அதிகம் தாக்கும்,காரணம் உணவு பழக்கமும்,அதிக உழைப்பில்லாத உங்க தொழில் அமைப்பும் தான்.

சனிப்பெயர்ச்சிக்கு பின் ருண,ரோக,சத்ரு ஸ்தானமாகிய ஆறாம் இடத்தில் இருந்து வரும் சனீஸ்வரர் வக்ரமாகி பின்னோக்கி மீண்டும் கன்னிக்கு சென்று மறுபடி துலாம் ராசிக்கு வரப்போகும் இந்த காலகட்டத்தில் ,கூடா நட்பு கேடாக முடியலாம்..அவர்களால் பண விரயம் உண்டாகலாம் ..குழந்தைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம்...மகன்,மகளால் மன வேதனை உண்டாகும்,பூர்வீக சொத்து பிரச்சினை தலையெடுக்கும்.

பாக்யாதிபதி,சனி பூர்வீகத்துக்கு வருவது சிலருக்கு நன்மையையும் கொடுக்கலாம்.ஆனால் பெரும்பாலும் விரயமே காணப்படுகிறது.கவனம் ,கட்டுப்பாடு தேவை!

மேலும் வாசிக்க"சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?"

Post Comment

நயன்தாரா கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிய பிரபுதேவா,சிம்பு -பரபரப்பு தகவல்கள்

நயன்தாரா கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிய பிரபுதேவா,ஆபாச படம் எடுத்த சிம்பு -பரபரப்பு தகவல்கள்

நயன்தாரா ,பிரபுதேவா காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா..? பொய்யா என்பது ஒரு பக்கம்.ஆனால் இப்போது பிரச்சினை கிளப்பியிருப்பது நயன்தாரா பெற்றோர் தான்..என்ன பிரச்சினை..? பிரபுதேவா எங்கள் பெண்ணையும்,பணத்தையும் ஏமாற்றிவிட்டார் என கொதிப்புடன் கிளம்பியிருக்கிறார்கள்.

நயன் தாரா அப்பா,அம்மா கொச்சியில் இருப்பதால் அவர்கள் சார்பாக அவரது சித்தப்பாவும்,சித்தியும் பேசினார்கள்.
எல்லோரும் நினைப்பது போல நயன் தாரா ஒன்றும் பிடிவாதிக்காரி அல்ல.அவள் வெகுளி பெண்.முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள்.சிம்புவுக்கு வல்லவன் படத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தன்னுடைய பேங்க பேலன்ஸ் முழுவதையும் தந்து உதவினாள்.அதைக்கூட நினைத்து பார்க்காமல் அவளை ஏமாற்றி,ஆபாச படம் எடுத்து நெட்டில் விட்டும்,அவளை அசிங்கப்படுத்தினார்.ஒருவழியாக சிம்புவை பிரிந்து வந்தபோது எப்படியோ இனியாவது அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் போதும் என்றுதான் நினைத்தோம்!


இப்போது பிரபுதேவாவிடமும் ஏமாந்து நிற்கிறாள் அவர்கள் வீட்டில் சொல்வது போல டயானா ஒன்றும் பணம் பறிப்பவளோ ,ஏமாற்றுக்காரியோ அல்ல! ரம்லத்திடமிருந்து விவாகரத்துப் பெற பணம் தந்தது யார் என்பது அவரவர்கள் மனசாட்சிக்கே தெரியும்! ஆரம்பத்திலேயே நயன்தாரா எங்கள் அறிவுரையெல்லாம் கேட்கவில்லை.அவ்வளவுதூரம் பிரபுதேவைநம்பியிருந்தாள்.எங்கேயும் காதல்’’படத்திற்காக நயன்தாரா பணம் எவ்வளவு பறிபோனது என்பது திருவில்லா வங்கியில் பணியாற்றும் எங்கள் உறவுக்கார பையனை கேட்டுப் பாருங்கள்: உங்களுக்கே தெரியும்!!

அவர்கள் குடும்பத்திற்கு பணம் தான் குறியே தவிர ,நயன்தாரா வைத்திருந்த அன்போ பாசமோ அல்ல...!!

நயன் தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.மொத்த பணத்தையும் வாங்கி கொண்டார்கள்..இனிமேல் பிடுங்க ஒன்றும் இல்லை என்றானதும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கொண்டார்கள்...

எப்படியோ சிம்புவும்,பிரபுதேவாவும் நயன்தாராவை பிழிஞ்சு சாறு தீர்ந்ததும் சக்கையா தூக்கி எறிஞ்சிட்டாங்க..ஓகே..உங்களில் யார் அடுத்த பிரபுதேவா..?

-thanks to kumudam,நன்றி;குமுதம்
மேலும் வாசிக்க"நயன்தாரா கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிய பிரபுதேவா,சிம்பு -பரபரப்பு தகவல்கள்"

Post Comment

தி.மு.க வின் அடுத்த தலைவர் யார்..? -ஜூனியர் விகடன் 12.2.12


துவரைக்கும் 'ஸ்டாலினா? அழகிரியா?' என்றே இருந்தஉரசல்... இப்போது 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்!

புதிய உறுப்பினர் சேர்ப்பு, தி.மு.க.வின் சட்ட திட்டங்களில் மாற்றம், நாடாளுமன்றத் தேர்தல்... இப்படி விவாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து, பொதுக்குழுவுக்கு அனைவரையும் அழைத்தார். ஆனால் 'தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?' என்பதற்கான விவாத களமாகவே இந்தப் பொதுக்குழு அமைந்துவிட்டது. 'இனி இந்தப் பிரச்னையை கருணாநிதி அதிக தூரத்துக்குத் தள்ளிப் போட முடியாது’ என்பதையும் பொதுக்​குழு நடப்பு​கள் உணர்த்தி​ விட்டன.
Who is the next president of DMK.
'ஸ்டாலினே அடுத்த தலைவர்’ என்று அவரது ஆதர​வாளர்கள் முழங்கி வருகிறார்கள். 'அழகிரிக்கே அந்தப் பதவி’ என்று தென் மாவட்டங்களில் இருந்து கூவிக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சாநெஞ்ச அடிப்பொடிகள்! கூடவே, 'கலைஞர் இருக்கும்வரை, அவர்தான் தலைவர்’ என்றும் ஒரு உஷார் 'பொடி'யை இவர்​கள் தூவுகிறார்கள்.
'
ஸ்டாலின் பெயரை கலைஞரே முன்மொழிந்து, அவரை கட்சியின் அரியா சனத்தில் உட்கார வைக்க வேண்டும்’ என்பது  ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆசை! கனிமொழி தரப்புக்கோ இந்த பரமபத விளையாட்டில் முக்கிய கட்சிப் பதவியில் எதையாவது பெற்றே தீரவேண்டும் என்ற பரபரப்பு!
ஸ்டாலின், அழகிரி... இருவரில் யாரை இப்போதைக்கு உயர்த்திப் பிடித்தாலும் கட்சி ஆட்டம் காணும் என்பதால் கருணாநிதி மொத்தமாகவே மௌனம் காக்கிறார். அவரது மௌனத்தை இனியும் தொடர அனுமதிக்க முடியாது என்று ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையே பொதுக்குழு காட்டியது.

கடந்த 3ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்​தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூடியது
அன்று, பேரறிஞர் அண்ணா நினைவுதினம். அண்ணா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்து அறிவாலயத்தில் உட்கார்ந்தார் கருணாநிதி. தீர்மானங்​கள், அஞ்சலித் தீர்மானங்கள் என்று வாசிப்பதில் காலை வேளை முழுமை​யாகக் கழிந்தது. மதிய வெயில் முடியும் நேரத்தில் 'சொல்லிவைத்த' மாதிரி சூட்டைக் கிளப்பினார் வீரபாண்டி ஆறுமுகம்.


முந்தைய நாள் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்திலேயே சீறியிருந்தார் வீரபாண்டி ஆறுமுகம். எனவே, இங்கே«யும் ஏதாவது வில்லங்​கமாகப் பேசுவார் என்று ஸ்டாலின் ஆதரவு ஆட்கள் எதிர்பார்த்தே வந்தார்கள். அதற்கு பீடிகை போடுவது மாதிரியே கருணாநிதி, அன்பழகன், வீராசாமி, துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி ஆகிய அனைவர் பெயரையும் சொன்ன வீரபாண்டி ஆறுமுகம்... ஸ்டாலின் பெயரை மட்டும் சொல்ல 'மறந்து' போனார். திடீரென ஞாபகம் வந்தவர் போல...
''பொருளாளர் பெயரை நான் மறந்து விட்டேன். தம்பி ஸ்டாலின் அவர்​களே! தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால் மன்னிக்கத்தான் வேண்டும்!'' என்று சொல்லி விட்டு,  பேச்சைத் தொடர்ந்தார் ஆறு​முகம்.


''வடமாவட்டத்தில் தளபதி கழகப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகிறார். தென்மாவட்டத்தில் அஞ்சாநெஞ்சன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். தலைவர் இதனைக் கண்​காணித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்... தலைவர் இருக்கும் போதே, 'அடுத்த தலைவர் யார்?’ என்று சிலர் பேசுவது சரியானதாக இல்லை. தலை​வருக்குப் பிறகு அஞ்சாநெஞ்சனோ... தளபதியோ... யார் வேண்டுமானாலும் தலைவராக வரட்டும். இப்போது அதைப் பற்றி பேச வேண்டுமா?'' என்று கேட்டு லேசாக இடைவெளி விட்டார் வீரபாண்டி ஆறுமுகம்.


'ஆமா... தளபதிதான் வரணும்’ என்று ஒருவர் குரல் கொடுத்தார். 'தளபதிதான் அடுத்த தலைவர்’ என்று இன்னொருவர் குரல் கொடுக்க... 'தளபதி’...'தளபதி’ என்று பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்து சிலர் வீரபாண்டி ஆறுமுகத்தை காட்டமாக விமர்சித்துக் குரல் கொடுத்தனர். அப்படியும் ஆற்றாமை அடங்காதவர்களாக நான்கைந்து பேர் தாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து மேடையை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், 'அடிக்கப் போறியா? இந்தா அடி?’ என்று நெஞ்சை நிமிர்த்தி முன்னால் வர ஆரம்பித்தார். சேலத்து சிங்கமாச்சே... அதுவும் சிலுப்பிக் கொண்டது! கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகிய மூவரும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென டென்ஷன் ஆன கருணாநிதி.... 'வீல் சேரை எடுத்துட்டு வாய்யா!’ என்றார். 'நல்லா இருக்குய்யா... நல்லா இருக்கு! நான் போறேன்... நீங்களெல்லாம் என்னமோ பண்ணுங்க!’ என்று கடுகடுத்துச் சொல்ல ஆரம்பித்தார் கருணாநிதி.  ஸ்டாலினுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தனக்காகக் குரல் தரும் ஆதரவாளர்களை அடக்கி அமர வைக்கவும் அவர் முன் வரவில்லை. தொடர்ந்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டே இருந்தார் கருணாநிதி. அவரை அன்பழகன் சாந்தப்படுத்தினார். 'ஒண்ணுமில்லே... நீங்க அமைதியா இருங்கள்!’ என்று அன்பழகன் சொல்ல... 'நீங்க எதுக்குப் போறீங்க..? வருத்தப்படாம இருங்க!’ என்று ஸ்டா​லினும் சமாதானம் சொன்னார். ஆனால், ஸ்டாலின் முகத்தை கருணாநிதி ஏறெடுத்தும் பார்க்கவே இல்லை.


மைக் பிடித்த அன்பழகனின் பேச்சு பல உள் அர்த்தங்கள் கொண்டதாக இருந்தது.
'
'வீரபாண்டி ஆறுமுகம் பேசியதும் என்னுடைய கருத்துதான். ஸ்டாலின் மிகச்சிறப்பாக கழகப் பணி ஆற்றுகிறார் என்று நான் பாராட்டுகிறேன். அதற்காக, நான் வகிக்கும் பொதுச்செயலாளர் பொறுப்பை அவருக்குத் தூக்கிக் கொடுத்து விடுவேனா? எனக்குப் பிறகு அவர் அந்தப் பொறுப்பில் உட்காரலாம். ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் கலைஞரின் பிள்ளைகள். அந்த அடிப்படையில் எனக்கும் பிள்ளைகள்தான். அவர்கள் கழகப் பணி ஆற்றலாம். ஆனால், தனித்தனி அணியாக பணியாற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில்தான் அந்தத் தலைமைப் பதவி வரவேண்டும். கலைஞரை விட நான் வயதில் மூத்தவன். அவர் தலைவராக வந்து உட்காரும்போது எனக்கே சில கூச்சங்கள் இருந்தன. என் வீட்டில் உள்ளவர்கள்கூட அதைக் கிண்டல் செய்தார்கள். ஆனால் கலைஞர், தனது தகுதியால் உயர்ந்து நின்றார். அவரைப் போல என்னால் உழைக்க முடியாது. அவரே இயக்கம். இயக்கமே அவர் என்று வளர்ந்தார். அப்படிப்பட்ட தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர... சும்மா தலைவராகத் துடிக்கக் கூடாது.
இந்த வயதிலும் கலைஞர் சுறுசுறுப்புடன் உழைக்கிறார். நேற்று இரவு கூட அவருக்கு உடல் நலமில்லை. கால், கை நரம்புகள் வலித்தன. 'மதியம் வரைக்கும் பொதுக்குழுவை நடத்தி முடித்துக் கொள்ளலாம்!’ என்று நான் சொன்னேன். 'எத்தனையோ மைல் தூரத்தில் இருந்து வந்திருப்பவர்களை ஏமாற்றக் கூடாது. மாலை வரைக்கும் பொதுக்குழு நடக்கட்டும்’ என்று கலைஞர் சொன்னார். தன்னுடைய உடல்நலம் பற்றிக் கவலைப்படாமல், இயக்கமே தன் உயிராகக் கருதி நடத்தும் கலைஞரைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது!'' என்று அன்பழகன் பேசப்பேச... நெகிழ்ந்து, குளிர்ந்து, நிமிர்ந்தார் கருணாநிதி.


அடுத்து தலைவர் என்ன பேசப் போகிறாரோ என்ற ஆவல் அரங்கம் முழுக்க தகித்த நிலையில் மைக் பிடித்த கருணாநிதி, ''பேராசிரியர் பேச்சு முழுமையும் என்னுடைய கருத்துதான். அடுத்த பொதுக்குழுவுக்கு நான் இருந்தால் பேசுகிறேன். நன்றி!'' என்று சுருக்கமாக, உருக்கம் காட்டி முடித்ததில் பலருக்கும் அதிர்ச்சி!
'தலைவர் பேசணும்.. தலைவர் பேசணும்’ என்று குரல்கள். அன்பழகனும், கருணாநிதியை பேசச் சொல்லி கேட்டுக் கொண்டார். கருணாநிதிக்கு முன்னால் இருந்த டீ பாயை எடுத்து விட்டார்கள். சிறுநேர மனமாற்றத்துக்குப் பிறகு டீ பாய்... மைக் ஆகியவை மறுபடி வைக்கப்பட்டன!
கருணாநிதி தழுதழுக்கும் குரலில் பேசினார். 'அவர்களே... இவர்களே' என்று எவரையும் விளிக்காமல்... 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே!’ என்ற வார்த்தை​களையும் கூட சொல்லாமல் நேரடியாகவே மனவருத்தங்களைக் கொட்ட ஆரம்பித்தார்.


பொதுக்குழு நிகழ்வுகளில் இடம்பெற்ற ஒருவர் கூறுகையில், ''ஒருவர் தன்னுடைய அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மீண்டும் தனக்கே வாக்களிக்கும்படி கேட்கும் வகையில் இருந்தது தலைவரின் அந்தப் பேச்சு. 'இந்தக் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் எப்படி எல்லாம் நான் உழைத்தேன். எனக்கு நீங்கள் காட்டுகின்ற நன்றி இதுதானா?' என்று கேட்பது போலத்தான் இருந்தது அந்தப் பேச்சு'' என்றார்.
'
'கொட்டுகிற மழையில் ராபின்சன் பூங்காவில் இந்தக் கட்சியை ஆரம்பித்த காலம் முதல் தொடர்​பவர்கள் நானும் பேராசிரியரும். ஊர் ஊராகப் போய் அயராமல் கொடி ஏற்றி வைத்துக் கட்சி வளர்த்தவன் நான். இந்தக் கட்சிக்காக நான் செலவிட்ட உழைப்பு இன்று இங்கே வந்திருக்கிற பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த நாட்டுக்குத் தெரியும். பேரறிஞர் அண்ணாவுக்கு நன்றாகத் தெரியும்.


இப்படிப்பட்ட கட்சியில் பொதுக்குழு சீரோடும் சிறப்போடும் அமைதியாக நடக்கிறதே என்று ஒற்றர்கள் மூலமாகக் கேள்விப்பட்டு அவர்களை விட்டே சிலரைத் தூண்டி விட்டு இருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் பேசியதில் தவறு எதுவும் இல்லை. அவர் தி.மு.க. தொண்டர்களுக்குச் சில வேண்டுகோளை வைத்தார். அதைத் திரித்து, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளக் கூடிய சிலர் கட்சியில் பிளவை ஏற்படுத்த... சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை யார் தூண்டி விட்டார்கள், இதைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை என்னுடைய இதயத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்!'' என்ற போது கருணாநிதியின் குரல் கம்மியது. மொத்தக் கூட்டமும் நிசப்தமாக அடுத்து தலைவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கவனித்தது. அவருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலையைக் குனிந்தவாறு கம்மென்று உட்கார்ந்திருந்தார்.
கருணாநிதி தொடர்ந்தார்...


''நீங்கள் ஸ்டாலினுக்கு உதவி செய்யவில்லை. அவர் வளர்வதற்கு முன்னால் அவருக்கு களங்கத்தைக் கற்பித்திருக்கிறீர்கள். தி.மு.க.வில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களும் அமைதியாகத்தான் நடந்துள்ளது. சுமுகமாக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துத்தான் நடந்துள்ளது. அப்படித்தான் இனியும் நடக்க வேண்டுமென நான் நினைத்தேன். ஆனால், என்னைப் பற்றிய பெருமைகளை எல்லாம் நானே சொல்லி, 'என்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்து எடுங்கள்’ என்று என்னால் உங்களிடம் பிச்சை எடுக்க முடியாது. அதை நான் செய்யவும் மாட்டேன். அதுதான் உங்களில் சிலருக்கு விருப்பமாக இருந்தால், அடுத்த பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று நடத்தி, யாருக்கு எவ்வளவு வாக்குகள் என்ற எண்ணிக்கையைப் பார்த்து முடிவு செய்யலாம்.!'' என்று கருணாநிதி சொன்னபோது... அதன் ஆழ-அகல பரிமாணங்கள் புரிந்து அதிர்ந்து போனது பொதுக்குழு.


கருணாநிதியின் கையை பேராசிரியர் அன்பழகன் தொட்டு அமுக்கினார். 'இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம்!’ என்று அவர் நிதானப்படுத்துவது போல இருந்தது. அதைப் புரிந்து கொண்ட கருணாநிதி சட்டென உணர்வுகளை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து... காங்கிரஸ் கூட்டணி குறித்து பதில் சொல்வதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
அதைச் சொல்லிவிட்டு பேச்சை முடிக்க நினைத்​தாலும்... நடந்த சம்பவங்களின் வேதனை முழுதுமாக ஆற்ற முடியாமல் இருந்ததோ என்னவோ...  பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி இப்படி கிண்டலடித்தார் தலைவர் -


''நீங்கள் எல்லாம் நல்ல சிந்தனையாளர்கள்தான். இல்லாவிட்டால் ஒரு பொதுக்குழு இந்த அளவுக்கு அமைதியாக நடப்பதற்கு இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க மாட்டீர்கள். நாளைக்கு இதுதான் எல்லாப் பத்திரிகைகளிலும் வரும். நம்மை இருட்டடிப்பு செய்ய நினைக்கிற பத்திரிக்கையாளர்கள்கூட இருட்​டடிப்பு செய்ய முடியாது! உங்களுடைய அருமையான, ஆதங்கமற்ற, அன்பான, மேடையை நோக்கிப் பாய்ந்து தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தையே திக்குமுக்காடச் செய்கின்ற வேகம் வரவேற்கத்தக்கது. அப்போதுதானே தி.மு.க-வுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்! அந்த விளம்பரத்தைக் காசில்லாமல் உண்டாக்கிய உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுக் குழுவைப் பற்றி - இப்போதுள்ள தி.மு.க. பற்றி எனக்கு புரிய வைத்தமைக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்'' என்று  சொல்லிவிட்டு, விடை பெற்றார் கருணாநிதி!
இந்த மாதிரியான கூட்டம் நடந்து முடிந்து, கருணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஸ்டாலின் உடன் இருப்பார். ஆனால், அன்று அவர் இல்லை. தனியாகப் போய் நின்று கொண்டார். அவரை, கருணாநிதி தன் அருகில் அழைக்கவும் இல்லை.
''அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்​ளுங்கள்.. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னுடைய மனைவிகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை'' என்று கிண்டலாகச் சொல்லிச் சென்றார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகே கருணாநிதிக்கு பக்கத்தில் வந்தார் ஸ்டாலின். ''வீட்டுக்குத்தானே..? நானும் வர்றேன்!'' என்றார் ஸ்டாலின். ''வீட்டுக்கு போகலைப்பா... ஆபீஸுக்குப் போறேன்'' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு பதில் அளித்தார் கருணாநிதி.
பொதுக்குழு நடந்த 'கலைஞர் அரங்கத்தில்’ இருந்து அறிவாலயத்தில் தன்னுடைய அலுவலக அறைக்கு வந்தவர், அரைமணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே உட்கார்ந்து சக தலைவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். ஸ்டாலினுடன் பயணிக்கும் சில நிமிடங்களை அன்றைக்குத் தவிர்க்க நினைத்தாரோ என்னவோ...!


''கூச்சல் போட்டவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தமில்லை என்றால் உடனே மைக் அருகில் வந்து அவர்களை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கூச்சல் போட்டவர்களை வீரபாண்டி ஆறுமுகத்திடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர் வேடிக்கை பார்த்தது சரியில்லை'' என்பது, பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் கருத்து. 


''இதைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்று என் மனதுக்குள் எழுதி வைத்துவிட்டேன் என்று, தலைவர் சொல்வது ஸ்டாலினை மனதில் வைத்துத்தான்! 'தலைவர் பதவிக்கான தேர்தலில் அடுத்த முறை போட்டி இருக்கட்டும். நான் போட்டி போடுகிறேன். யார் அடுத்த தலைவர் என்று பார்த்து விடலாம் என்ற தொனியில் தலைவர் பேசியது, பகிரங்கமாக ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட சவால்'' என்றும் சொல்கிறார் அவர்.
அதிரடியான அழகிரி 'நல்லபிள்ளை’ என்று பெயர் எடுக்க... அமைதியான ஸ்டாலின் 'சர்ச்சையில்’ சிக்கியது தி.மு.க.வில் ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறி!


முந்தைய நாள் நடந்த கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்துக்கு வந்து கடைசி வரிசையில் உட்கார்ந்த அழகிரி... மறுநாள் நடந்த பொதுக்குழுவுக்கு காலையில் வந்து முன்வரிசையில் அமர்ந்தார். அவருடன் தயாநிதி மாறன், மன்னன், மூர்த்தி, எஸ்ஸார் கோபி ஆகியோரும் வந்தார்கள். காலை நிகழ்வுகள் முடிந்ததும் மதிய சாப்பாட்டுக்காக கிளம்பிப் போன அழகிரி, பிறகு மதியம் வரவில்லை.
எனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சு, அதன்பிறகு நடந்தவற்றை அழகிரி பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ''சும்மா அங்கே போய் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்குப் போகணும்?'' என்று ஆதரவாளர்களிடம் சொன்னாராம் அழகிரி.
'
'அவர் வந்திருந்தால், கதையே வேறு மாதிரிப் போயிருக்குமோ..?'' என்று கேட்டுக் கொண்டு கலைந்தார்கள் பொதுக்குழுவில் சிலர்!


கனிமொழிக்காக....
கனிமொழிக்காக பேசினார் விஜயா தாயன்பன். ''கனிமொழி இல்லாமல் நடக்கிறதே என்று கோவை பொதுக்குழுவின்போது வருத்தப்பட்டேன். சென்னை பொதுக்குழுவுக்கு அவர் வந்துவிட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப் போலவே நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைக்​கிறேன்'' என்று சொல்லி நிறுத்தினார். பொதுக்குழு அமைதியாக இருந்தது.
''நீங்கள் கைதட்டவில்லை என்றாலும் மகிழ்ச்சி​யாகத்தான் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்'' என்று 'சும்மா கிடந்த சங்கை' ஊதிவிட்டு உட்கார்ந்தார். 
ஃபேஸ்புக்கா? டி.வி-யா?
தயாநிதி மாறன் பேசும்போது தி.மு.க.வின் பிரசார உத்திகளில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ''இன்றைக்கு இன்டர்நெட், ஃபேஸ்புக், ஆர்குட் என்று சமூக வலைதளங்கள் வந்துவிட்டன. இதைத்தான் இளைஞர்கள் அதிகம் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். இந்த ஏரியாவையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கேயோ கனடாவில் உட்கார்ந்து கொண்டு தி.மு.க-வை திட்டி இணையதளத்தில்  எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க நாமும் தயாராக வேண்டும்'' என்று சொன்னார்.


அடுத்துப் பேசிய திருச்சி சிவா, ''ஃபேஸ்புக், ஆர்குட் என்பவை படித்தவர்கள் மீடியம்தான். ஆனால், அனைவர் வீட்டிலும் இருப்பது டி.வி! உங்களிடம் இருக்கும் டி.வி. மூலமாக தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தீர்கள் என்றாலே போதும். தி.மு.க. முழு வெற்றி பெறும்'' என்று சொன்னார்!
 ''எனக்கு எந்த பயமும் இல்லை!''
வழக்கறிஞர் ஜோதி பேசும் போது பிரதமர் மன்மோகன் சிங்கையும் கடுமையாகக் குற்றம் சாட்டினார். ''ஒரு அரசியல்வாதி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அரசியல் தெரியாத பொருளாதார வல்லுநராக அவர் இருப்பதுதான் சிக்கல்'' என்று சொன்னதும், முன்வரிசையில் இருந்த தயாநிதி மாறன் எழுந்து, ''பிரதமரைப் பற்றி தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல வேண்டாம். அவரை எதற்கு குற்றம் சாட்டுகிறீர்கள்?'' என்று கேட்டார்.
''உங்களுக்கு வேண்டுமானால் பிரதமரைப் பற்றிப் பயம் இருக்கலாம். எனக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால்தான் உண்மையைப் பேசுகிறேன்'' என்பது ஜோதியின் பதில்!

உயர்நிலைக் குழுவில் தொடங்கிய உஷ்ணம்!
தி.மு.க-வின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யும் முயற்சி பற்றி, கடந்த 3-ம் தேதியன்று அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி விவாதித்தது. அதில், முக்கிய இடம் பிடித்தவை, மூன்று யோசனைகள். ஒன்று, நகர மற்றும் ஒன்றிய அளவில் ஒரே பதவிக்கு தொடர்ந்து ஒருவர் மூன்று முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது... அடுத்து, பெரிய மாவட்டங்களை கட்சிப் பொறுப்பைப் பொறுத்தவரை இரண்டாகப் பிரிப்பது. மூன்றாவது... பதவியைப் பிடிப்பதற்காக ஒரே ஊருக்குள் கட்சித் தேர்தலின்போது மட்டும் கிளைகளை உருவாக்குவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிளை, அதற்குக் கீழ் ஊராட்சியின் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கிளை மட்டுமே இருக்க வேண்டும் என்பது.




ஊராட்சிக் கிளை திருத்தத்துக்கு எல்லாரும் ஒரே குரலில் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், மூன்று முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என்ற யோசனையை, அனைவருமே எதிர்த்தார்கள். இதேபோல் மாவட்டப் பிரிப்புக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது. ''கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நான்கு தொகுதிகள்தான் உள்ளன. நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரியிலோ ஆறு தொகுதிகள், தஞ்சையில் ஒன்பது தொகுதிகள், நெல்லையில் 10 தொகுதிகள், சேலம், விழுப்புரத்தில் 11 தொகுதிகள், வேலூரில் 13 தொகுதிகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்மாறாக தொகுதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை, ஏற்கெனவே தருமபுரியில் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்ட அமைப்புகள் உள்ளன. 100 வார்டுகள் வந்துவிட்ட மதுரை மாநகராட்சி தனி மாவட்டமாக உள்ளது. அதே போல, 100 வார்டுகள் பெற்​றுள்ள கோவை மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம். அதிக தொகுதிகள் உள்ள மாவட்டங்களை மாவட்டச் செயலாளர்​களின் யோசனைப்படி பிரிக்கலாம்'' என்று, டி.கே.எஸ்.இளங்​கோவன் பேச, முதல் முயற்சியிலேயே அதைக் கிள்ளியெறியும் வகையில் சீறிப்பாய்ந்து விட்டார், வீரபாண்டி ஆறுமுகம்.


 ''63 வாங்கி 5 கூட ஜெயிக்க முடியாத கட்சி எதுக்கு?''


தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குரல்கள் அதிகமாக ஒலித்தன. காலை நிகழ்ச்சியில் பேசிய குளித்தலை சிவராமன், குத்தாலம் கல்யாணம் ஆகிய இருவருமே, ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டாம்'' என்று வலியுறுத்தினார்கள். இவர்களது பேச்சுக்கு உறுப்பினர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. ''அதே சமயம் தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்பட்டுச் செயல்படுவோம்'' என்பதையும் சொல்லிச் சென்றார்கள்.
மதியம் நிகழ்வுகளில் பேசிய வழக்கறிஞர் ஜோதி, இந்தக் கருத்தை விலாவாரியாக எடுத்து வைத்தார்.


''போஃபர்ஸ் விவகாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்​வதற்காக, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்றுவரை எதை எதையோ செய்து பார்க்கிறது காங்கிரஸ். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதிரி நடப்பவர்கள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் மாட்டிவிட்டு தாங்கள் தப்பிக்க நினைக்கிறார்கள். 63 ஸீட்களை நம்மிடம் கேட்டு வாங்கியவர்களால், ஐந்து சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. அவர்களோடு எதற்கு நாம் கூட்டணியைத் தொடர வேண்டும்? காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்றால்... அதற்காக பாரதிய ஜனதாவுடன் அணி சேர வேண்டும் என்று நான் சொல்லவில்லை'' என்று பேசி பரபரப்பு ஆக்கினார் ஜோதி.


பேராசிரியர் அன்பழகன் பேசுகையில், ''ஜோதி அதிக விவரமானவர். தலைவர் கலைஞரிடம் தனியே சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கே பொதுக்குழுவில் பேசி இருக்க வேண்டாம்'' என்று கூறினார்.
இதற்கெல்லாம் தனது பேச்சில் பதில் சொன்னார் கருணாநிதி.
''காங்கிரசுடன் உறவு வேண்டுமா வேண்டாமா என்று பிரச்னை எழுவதற்கான தேவையே இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுடன் உறவு வேண்டாம் என்று உங்களிடம் கேட்காமலேயே நாங்கள் முடிவு எடுத்தோம். உங்கள் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம். அப்படி, நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்க முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால், மதவாத பா.ஜ.க. ஆட்சியில் அமருவதற்கு நாமே உதவி செய்தது போலாகும். பா.ஜ.க-வை வரவிடாமல் தடுக்க நமக்கு இருக்கும் ஒரே மாற்று காங்​கிரஸ்தான்.


'காங்கிரஸ் உங்களுக்கு நன்மை செய்ததா?’ என்று நீங்கள் கேட்கலாம். 'உங்கள் மகள் கனிமொழியியை திகார் சிறையிலே வாட வைத்தார்களே?’என்று கேட்கலாம். 'தம்பி ராசாவை பூட்டி மகிழ்ந்தார்களே?’ என்று கேட்கலாம். தன்னலத்தை மறந்து விட்டு இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றித்தான் நான் யோசிப்பேன். எனக்கு கனிமொழியின் வேதனை பெரிதல்ல. இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்க விடமாட்டேன். இப்போதே, ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க சோ போன்றவர்கள் முயற்சியைத் தொடங்கி விட்டார்கள். இதை நாம் எப்படி ஏற்க முடியும்? காங்கிரஸுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அந்தக் கட்சியைத்தான் தொடர்ந்து ஆட்சியில் வைக்க வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு அவர்கள் நமக்கு எந்த நன்றியையும் செய்து விடவில்லை. ஆனால், காங்கிரசுக்காக அல்ல... வேறு வழியில்லை என்பதற்காக காங்கிர¬ஸையே ஆதரிக்க வேண்டி இருக்கிறது'' என்றார் கருணாநிதி!


நன்றி;ஜூனியர் விகடன்
மேலும் வாசிக்க"தி.மு.க வின் அடுத்த தலைவர் யார்..? -ஜூனியர் விகடன் 12.2.12"

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner