/> ஜோதிடம்;சனி வக்ரம் எந்த ராசிக்கு அதிக யோகம்..? ராசிபலன் 2013 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 17 February 2013

ஜோதிடம்;சனி வக்ரம் எந்த ராசிக்கு அதிக யோகம்..? ராசிபலன் 2013

ஜோதிடம் ;சனி வக்ர ராசிபலன் 2013

.மகிமழீஸ்வரன் சமேத.மங்களாம்பிகை அருளால் நண்பர்கள் அனைவரும் செல்வ செழிப்பை அடைய பூரண ஆரோக்கியம் பெற இறையருளை வேண்டுகிறேன்....!!

மாசிமாத கிரகநிலைகள்;

16 ஆம் தேதி இரவு முதல் சனி வக்ர நிலை அடைந்து இருக்கிறார்...22 ஆம் தேதி முதல் கும்பத்திற்கு சுக்கிரன் செல்கிறார்..மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் சனி செவ்வாய் பார்வை உண்டாகிறது இதனால் நாட்டில் கலவரம்,குழப்பம்,போர் உண்டாகும் சூழல்,விபத்துக்கள் அதிகரிப்பு,பெரிய தீவிபத்துகள் அதிகரிப்பு உண்டாகும் சிவகாசி வெடி விபத்து மற்றும் ரயில்,பஸ் எரிந்தவை எல்லாம் செவ்வாய், சனி பார்வை காலங்கள் தான்... ஜாதகத்தில் செவ்வாய் சனி பார்வை உடையவர்களுக்கும் இக்காலம் அதிக சோதனைகளை உண்டாக்கும் கூட்டு மரணம் உண்டாகும் காலம் என்பதால் நெடுந்தொலைவு செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்....

சனி வக்ரத்தால் அதிக நற்பலன் பெறுபவர்கள் மீனம் ,கன்னி,மேசம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் தான் இவர்கள் தான் சனி தாக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்...சனி பின்னோக்கி நகரும்போது ஏழரை சனி அஷ்டம சனி தாக்கம் குறைந்து நற்பலன் உண்டாகும்...

மேசம் ராசியினருக்கு ஜென்மத்தில் கேது இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்  ..உங்கள் ராசிக்கு கெட்டவராகிய சனி வக்ரம் பெறுவது நற்பலன் தரும் ...

கடகம் ராசியினருக்கும் கண்டக சனி பாதகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது இவர்களுக்கும் சற்று நிம்மதியை தரும் ஜூன் மாத குரு பெயர்ச்சி இன்னும் அதிக நற்பலனையும் தரும்...

கன்னி ராசியினருக்கு இன்னும் இரண்டரை ஆண்டு ஏழரை சனி சோதனை கொடுத்தாலும் பலருக்கு புதிய சொத்துக்கள் அமைந்து இருக்கிறது திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி வைத்திருக்கிறார் சனி பகவான்...தொழில் நிரந்தரமாக அமைந்து இருக்கிறது...அலைச்சல் திரிச்சல் அதிகம் இருந்தாலும் திசா புத்தி சரியில்லாதவர்களுக்கும் சுய ஜாதகம் வலுவில்லாதவர்களுக்கு சோதனைகள் அதிகம் இருக்கும் ஆனால்; சுய ஜாதகம் வலுவாக இருப்போருக்கு அதிக கெடுதலை ஏழரை சனி உண்டாக்குவதில்லை..

துலாம் ராசியினருக்கு ஜென்ம சனி அஷ்டம குரு என இரு சோதனைகளை ஒரே சமயத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் ஜூன் மாதம் வரை அஷ்டம குரு பண திண்டாட்டத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் அதன்பின் சரளமாக பணம் வந்து சேரும் என்றாலும் சனி வக்ரகாலத்தில் சர்று பெரிய பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி தரும்..

விருச்சிகம் ராசியினருக்கு உடல்நலன் பாதிப்புகள்,மனதில் அதிக குழப்பம் போன்றவற்றை இப்போது சந்தித்து வருகின்றனர்...ஏழரை சனி பத்தி அதிகம் கவலைப்பட்டே ஒரு வழி ஆகிடுவாங்க போலிருக்கு சின்ன பிரச்சினை என்றாலும் எனக்கு ஏழரை அதான் இப்படி நடக்குது என புலம்ப ஆரம்பித்து விடுவர் இதுவே தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடும் தைரியமா இருங்க ஏழரை சனியில ஏழரை கோடி சம்பாதிச்சவனும் இருக்கான் உங்க சுய ஜாதகம் சூப்பரா இருந்தா ஏழரை அள்ளி கொடுக்கும் தெரியுமா.சனி வக்ர காலம் உங்களுக்கு பலவித வழியில் இருந்தும் சந்தோசமான செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும்...

மீனம் ராசியினர் என்றாலே கமல் தான் நினைவுக்கு வருகின்றார் கடன் வாங்கி வீட்டை அடமானம் வெச்சி விஸ்வரூபம் தயாரிச்சு நடிச்சி கடைசி நேரத்துல அதை வெளியிட முடியாம தடையாகி எதிர்ப்புகளை சம்பாதித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேறு எந்த காலத்திலும் இவ்வளவு சோதனைகளை சந்தித்து இருக்காரா இல்லை அவருக்கு மீனம் ராசி.அஷ்டம சனி அவரை இப்படி பந்தாடுகிறது...ஆனாலும் சனி கெடுத்து கொடுத்தான்..100 கோடி லாபம் என்கீறார்கள் இனி அவர் 3 படங்களில் நடிக்க போகிறார் நடிக்க போகிறார் என்றால் இன்னும் கடுமையாக உழைக்கப் போகிறார் கடுமையாக உழைத்தால் சனி பகவான் அகமகிழ்ந்து அள்ளி அள்ளி கொடுப்பார் ....எனவே மீனம் ராசியினரே சனி வக்ரம் உங்களுக்கு கடுமையான சோதனையில் இருந்து இப்போது சற்றே இளைப்பாறுதல் தரும் பணச்சிக்கல்கள் தீரும்....சோதனை தாங்காமல் முடங்கி படுத்து விடாதீர்கள் அது பல மடங்கு சோதனையை தந்துவிடும்....

Related Article:

Post Comment

1 comment:

Gnanam Sekar said...

தகவலுக்கு , நன்றி அய்யா

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner