/> செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 1 March 2013

செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம்

செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க:
    
பொதுவாக ஒரு ஜாதகத்தில் 6க்குடையவன் திசையில் எட்டுக்குடையவன் புக்தி நடக்கும் போதும், அஷ்டமாதிபதி திசையில், ருணரோகஸ்தானாதிபதி புக்தி நடந்தாலும், தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக புலம்புவர். பலகோயில்களுக்கும் சென்று வருவார். பலமந்திரவாதிகளையும் சென்று பார்ப்பார். அதிக மனக்குழப்பமும், பயமும், எதிரிகளை கண்டு அஞ்சி குடும்பமே கதறம்படி செய்துவிடுவார். இவர்களுக்கு மரகதபச்சையை அணிவிப்பது நல்லது. அறிவுக்கு அதிபதி புதன். இதனால் இவருக்கு மனதெளிவு உண்டாகும். தொழிலில் கவனம் செலுத்துவார்.
    
மற்ற ரத்தினங்களைவிட மரகதம் அழகும் சிறப்பும் மிக்கது. இதனாலேயே தெய்வ விக்கிரகங்களும், லிங்கங்களும் மரகதத்தால் அதிகம் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் ஒரு மரகதலிங்கம் உள்ளது. இங்கு சென்று இந்தலிங்கத்தை கண்குளிர தரிசித்தால் பல நோய்கள் தீருகின்றன என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.
    நாகப்பட்டினம், திருக்குவளை, திருக்காதவாயல், திரவாயமூர், திருவாரூர், திருமறைக்காடு ஆகிய ஸத்தலங்களிலும் மரகதலிங்கம் உள்ளது.
    கன்னியாகுமரி அம்மனுக்கு மரகதபச்சை மூக்குத்தி சிறந்த அணிகலனாக பிரகாசித்து வருகிறது.
    திருப்பதி வெங்கடாஜலபதி உற்சவர் மார்பிலும், மரகதப்பச்சை மின்னுவதை காணலாம்.
    மரகதப்பச்சை வசிய சக்தி, வெகுஜனசக்தி உடையது. இதனால் வியாபாரிகள் இதனை அணிந்து கொண்டால், வியாபாரம் பெருகும். இவை கொலம்பியா நாட்டில் அதிகளவில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் காங்கேயம், பரமத்தி வேலூரிலும், இடைப்பாடியிலும் மத்திய தர மரகத பச்சைகள் கிடைக்கின்றன. ஜெய்ப்பூரில் செயற்கை மரகதப்பச்சைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் பட்டை தீட்டப்படுகின்றன. செயற்கை வைரம் எனப்படும் ஏடி (அமெரிக்கன் டைமண்ட்) அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    புதன் கிரகத்தின் தோஷ    ங்களை போக்கக் கூடிய பரிகாரஸ்தலமாக ஜோதிட நூல்கள் கூறும், மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவசிலை மரகதபச்சையால் ஆனதுதான்.
    அறிவு சிறக்க மதுரை மிக சிறப்பு. ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், புதன்திசை நடப்பவர்களும், 5,14,23 தேதிகளில் பிறந்தோரும் மரகதப்பச்சை மோதிரம் அணியலாம்.மிதுன லக்னம்,கன்னி லக்னத்தாருக்கு புதன் லக்னாதிபதியாகவும் யோகாதிபதியாகவும் வருவதால் அவர்கள் அவசியம் அணிய வேண்டியது.

 இதை ஐம்பொன்னில் மோதிரமாக செய்து அதில் பச்சைக்கல் பதித்து பூஜித்து கொடுத்து வருகிறோம்..எப்படி அணிவது எப்படி பயன்படுத்துவது என்று சில முக்கியமான குறிப்புகளையும் தருகிறோம் வாங்க விருப்பம் இருப்பவர்கள் என் மெயிலுக்கு உங்க பிறந்த தேதி,பிறந்த நேரத்துடன் எழுதவும் sathishastro77@gmail.com

செய்வினை அகல கோயில் வழிபாடு;

பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வெள்ளி,திங்கள் கிழமை திறந்திருக்கும் அமாவாசை பெளர்ணமி அன்றும் திறந்திருக்கும் விக்கிரமாதித்யன் காலத்து கோயில் ஆகும் 2000 வருடம் பழமையானது...கெட்ட சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது...இங்கு சென்று எலுமிச்சையில் தீபம் ஏற்றி 108 எலுமிச்சை மாலை சார்த்தி அம்பாளை வணங்கலாம்..

கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாயும் கிருத்திகையும் வரும் நாளில் பழனி அல்லது சென்னிமலை அல்லது திருச்செந்தூர் சென்று வணக்கலாம்...சூரனை அழித்த இடம் என்பதால் திருச்செந்தூர் கெட்ட சக்திகளை அழிக்கும் ஒப்பற்ற கடவுளாக முருகன் திகழ்கிறார்

மாந்த்ரீகம்;

மாந்த்ரீக வழியில் சென்றுதான் செய்வினை தோசம் பலர் எடுக்கிறார்கள் யார் செய்வினை இருக்குன்னு சொல்றாரோ அவரேதான் வந்து எடுத்தும் தருகிறார் பல இடங்களில் ஏமாற்றும் நடக்கிறது...சேலம் மாவட்டம்,வேலூர் மாவட்டம்,தர்மபுரி,கரூர் பகுஹிகளில் செய்வினை தோசம் எடுப்பவர்கள் உள்ளனர் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன்...

என் இரு வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி கேட்டதால் மாந்த்ரீகர் ஒருவரை என் நண்பர் மூலம் தொடர்புகொண்டேன்..செய்வினை வைக்கப்பட்டவர் வீட்டிற்கு வந்து அவர் கண் முன்பே குழி தோண்டி அதில் இருந்து நிறைய தகடுகள் ,முடி,எலும்பு என எடுத்தார் ஒரு செப்பு குடமும் இருந்தது எங்களுடன் வரும்போது அந்த மாந்த்ரீகர் வெறும் கையுடன் தான் வந்தார் செப்பு குடம் அதில் கரித்துண்டுகள்,ஆணி,குடும்பத்தார் அழியனும்னு எழுதப்பட்ட செப்பு தகடு இதெல்லாம் அந்த குடத்தில் இருந்தது இதெல்லாம் அவர் கொண்டு வந்திருக்க சான்ஸ் இல்லை..ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..அதுவரை அக்குடும்பத்தில் இருந்து வந்த     துர்மரணங்கள்,விபத்துகள்,மருத்துவ செலவுகள்,பெண்களுக்கு கெட்ட பெயர்,ஆண்களுக்கு வருமானம் இல்லாத நிலை எல்லாம் மாறியது...இப்போ அவங்க நல்லா இருக்காங்க..நான் இதை ஆதரிக்கவில்லை என் அனுபவத்தை சொல்றேன்..நம்புவது உங்க அனுபவத்தை பொறுத்து...!!Related Article:

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நண்பரே... நன்றி...

சே. குமார் said...

நல்ல கட்டுரை...

அறியத்தந்தமைக்கு நன்றி.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner