/> ஜோதிட ரகசியம் ;பாகம் 2 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 26 July 2013

ஜோதிட ரகசியம் ;பாகம் 2

ஜோதிட ரகசியங்கள் பாகம் ;2

 
51, வருட கிரகங்கள் இணைவு நல்ல யோகம் அதனுடன் மாத கிரகம் இணைய பாதள யோகம்.                                                                

52, 10-க்குடையவன் 6-க்குடையவன் சேர கடன் வாங்கி தொழில் செய்யக்கூடாது,                                                                   

53, புதன் தவணை கிரகம், ராகு அடமானம் கிரகம்,                                                                    

54, புதன் திசையோ அல்லது புதன் புத்தியோ நடக்கின்ற காலத்தில், தவணை வாங்குவார்கள்.                                                                    

55, ராகு திசை அல்லது ராகு புத்தி நடக்கின்ற காலத்தில் நகை அடமானம் வைப்பார்கள். மற்றும் வட்டிக்கு பணமும் வாங்குவார்கள்.                                                         

56, ஜோதிடருக்கு உண்டான கிரகம் சந்+கேது, செவ்+கேது, புத+கேது, அதாவது சந்+கேது ஜாதகம் படிக்காமல் ஜாதகம் சொல்வார்கள் செவ்+கேது அருள்வாக்கு சொல்வார்கள். புதன+fகேது கணித அறிவுடன் சொல்வார்கள்.                                

57, சந்திரன் எந்த ராசியில் இருக்கிராரோ அந்த பாவத்தில் மச்சம் இருக்கும். சந்திரன் உள்ள நட்சத்திரம் வீக்காக இருக்கும்.                                    

58, பேசாமல் இருந்தால் கும்பம் அதிகம் பேசினால் மகரம்                                  

59, புதன் வக்கிரமாக இருந்தாலோ, புதன் கேது நட்சத்திரத்தில் இருந்தாலோ, டிகிரி முடிக்க மாட்டார்கள். புதன், கேது இருந்தால் பட்டம் முடிக்க மாட்டார்கள்.                        

60, அப்படியே முடித்தாலும் அது சம்பந்தமாக வேலை செய்ய மாட்டார்கள்.                        

61, செவ்வாய் வக்கிரம் ஆனால், கணவனை விட்டு பிரிந்து  விடுவார். இது பெண் சாதகத்தில்                                                                

62, சுக்கிரன் வக்கிரம் ஆனால்  மனைவியை விட்டு பிரிந்து செல்வார். இது ஆண் சாதகத்தில்.                                                                         

63, கருப்பு டிரஸ் போட்டு வேலை கேட்டால் உடனே வேலை கிடைக்கும்.                      

64, காலனில் கடன் வாங்கி குளiகையில் கடன் அடைக்லாம். குளiகையில் ஆபரேசன் செய்யக் கூடாது. அதே போல் பௌaர்ணமி அன்றும் ஆபரேசன் செய்யக்கூடாது.                                                                       

65, 7-கிரகங்களுக்கு மேல் ஒரு ராசியில் இருக்க அதை லக்னமாக பாவித்து பலன் கூற சரியாக இருக்கும்.                                                        

66, குரு நீச்சமாக இருந்தால் சொந்த ஊரில் இருக்க மாட்டார்கள்.                                

67, புனர்பூ யோகம் உள்ள ஜாதகத்திற்கு முகூர்த்த லக்னத்திற்கு குரு சம்பந்தபட்டே ஆக வேண்டும்.

                                                               

68, சந், சனி புனர்பூ யோகம். சந், சனி சேர நடக்கப் போகிறது. சந், சனி பார்வை நடந்து விட்டது.                                                                

69, நவாம்சத்தில் பெண் சாதகத்தில் சந் சனி பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு முன் தவறு நடக்க வாய்ப்புள்ளது.                                                       

70, செவ் ராகு, சேர பல் தொந்தரவு இருக்கும். செவ் ராகு 3-பாவத்தில் இருக்க தம்பி, மைத்துனர், இருக்க மாட்டார்கள்.                                                

71, சந்+சனி+சூரி சேர்க்கை பிட்ரியூட்டி சுரப்பி பாதிக்கபட்டு குட்டையாக இருப்பார்கள.                                                                    

72, 4-தலை முறைக்கு 1-முறை பிரிவு நோய் வரும்.                                                         

73, கோட்சார கேது எந்த ராசிக்கு வருகின்றதோ அந்த வீட்டில் ஆரம்பத்தில் குரு இருந்தால் கெடுதலை செய்யவிட மாட்டார்.                                    

74,குருவும் சந்திரனும் 1-டிகிரியில் அல்லது நெருங்கிய டிகிரியில் இருக்க குடும்பம் அல்லது பொருளாதரத்தை குறைக்கும்.                                           

75, குருவுக்கு 5-ல் சந்திரன் 7-ல் சந்திரன் வரும் சமயம் எந்த பாதிப்பும் வரவில்லை எனில், நேரடியாக குழந்தையை கடுமையாக பாதிக்கும்.                        

76, குரு+சந் யோகம் வீரியம் குறைய வேண்டுமானால் சனியோ ராகுவோ சேர வேண்டும்.                                                                          

77, 1,5,9-க்குடையவர்கள் கெடாமல் இருக்க வேண்டும்.                                     

78, சூரி+சந்+குரு இவர்கள் ராகு கேதுவுடன் சேர இடம் மாற வேண்டும்.                    

79, சூரியன் புதன் பரிவர்த்தனை ஆனால் சூழ்நிலை மாறிப் படித்தல் சூரியன் 8-டிகிரி புதன் 4- டிகிரி ஆகாது.                                                                 

80, சூரியன் சனி நல்ல வேலை, நல்ல உழைப்பாளi, குழந்தை தாமதமாக பிறக்கும்.

81, 2-கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு இருக்க கூடாது.                                                             

82, சூரியனுக்கு 5-டிகிரியில் எந்த கிரகம் இருந்தாலும் அஸ்தமனம் ஆகிவிடும்.

83, சூரியனுக்கு முன் பின் 2பாதத்திற்குள் எந்த கிரகம் இருக்கினறதோ அந்த கிரகம் அஸதமனம் ஆகிவிடும்

84, ஒரு மோசமான கிரக கூட்டு எனில், அதே கிரகம் கோச்சாரத்தில் வரும் போது அந்த இடத்தில் ராகு அல்லது கேது வரும் போது மோசமான சம்பவம் நடக்கும்.                                                                    

85, பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கோச்சார செவ்வாய் தொடும் போது விபத்து நடக்கும்.                                                            

86, கோட்சார செவ்வாய் பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கடக்கும் போதும் கோட்சார சனியை பிறந்த சாதகத்தில் உள்ள செவ்வாய் கடக்கும் போதும் விபத்து நடக்கும்.                                                                     

87, குரு சனியையோ செவ்வாயையோ பார்க்க விபத்து நடக்காது.                           

88, 2-பகை கிரகங்கள் 5-டிகிரியில் அமைவது கிரகயுத்தம். கிரகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் ஆனால் கிரகயுத்தம் இல்லை.                                       

89, பிறந்த சாதகத்தில் அஸ்தமனமான கிரகத்துடன் மாந்தியும் சேர்ந்து திரிகோணத்தில் இருக்க விஷம் சாப்பிடுவார்.                                              

90, காலவிதி சக்கரப்படி செவ்வாய் 1,8-டையவர் ஆவார் 3,6,10,11-உப ஜெயஸ்தானம் இவ்விடங்களiல் செவ்வாயின் நட்சத்திரம் உள்ளது எனவே செவ்வாய் நோய் என்று எடுத்துக் கொள்கின்றோம்.                                     

91, ஜென்ம நட்சத்திர தினத்தன்று பொருள் திருடு போனால் அல்லது காணாமல் போனாலும் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்.

92,(1) லக்னத்திற்கு 5-க்குடையவனுக்கு 6-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும், 6-க்குடையவனுக்கு 5-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோயகம் சங்கு யோகம் என்பார். அல்லது கொடியோகம்.                                       

92,(2)  இந்தயோகம் உள்ளவர்கள் தான் செல்லும் கார்களiல், கொடி கட்டி செல்வார்கள். (அதாவது கட்சி கொடி, அல்லது தேசியகொடி)

93, இந்த சங்கு யோகம் உள்ளவர்கள் உயர்பதவிகளiல் உள்ளவர்கள், அமைச்சர்கள், ஆளுநர், பிரதமர், மற்றும் கட்சி தலைவர்கள், கார்களiல் கொடியை கட்டி செல்வார்கள்.                                                               

94, சந்திரனுக்கு 6,8,12-இல் குரு இருந்தால் சகட யோகம். இந்த யோகம் உள்ளவர்கள், காலம் பூராம் கடனாளiகளாக இருப்பார்கள்.                                        

95, இதில் சந்திரன் - செவ்வாய், சூரியன், சனி வீட்டில் இருந்தாலும், அல்லது இந்த மூவரும் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும் காலம் முழுவதும் கடன்காரர்களாக இருப்ப்பார்கள்.                                                         

96, இதே சந்திரன் செவ்வாய், சூரியன், சனி வீடுகளiல் இல்லாமல் மற்ற வீடுகளiல் சந்திரன் இருந்தால் கடன் அதிதிகமாக இருக்கும் இருந்தாலும் கடன் இருப்பதை காட்டி கொள்ள மாட்டார்கள் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பார்கள்.

97, ராகு+சுக்கிரன், சேர்க்கை இருந்தால் அவர்கள் வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள். அதுவும் விதவை யாக இருக்கும் வேறு மத பெண்கள்.. மேலும் ராகு+சுக்கிரன் சேர்க்கை திடீர் பணம் வரும், மனைவி நேயாளiயாக இருப்பாள். இது எப்பொழுது நடக்கும் ராகு, சுக்கிரன் தசா புத்தி காலங்களiல் தான் நடக்கும்.

98, சுக்கிரன், கேது, சேர்க்கை உள்ளவர்கள் விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது சேர்க்கை மனைவி அல்லது சகோதரி அல்லது அக்கா அல்லது அண்ணி விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது தசா புத்திகளiல் நடக்கும்.                                 

99, அது போல் எந்த கிரகம் சுக்கிரனோடு சேருகிறதோ, அந்த கிரக காரகத்துவத்தால், விஷம் சாப்பிடுவார். உதாரணம் கேதுவுடன் சந்திரன் சேருகிறது, அப்ப தாயாலும் அல்லது மாமியாராலும் விஷம் சாப்பிடுவார்.

100, ஒருவருக்கு அஸ்டமசனி நடக்கும் காலம் பேராசையை உண்டு பண்ணும்.                

குறிப்பு;ஜோதிட பலன் அறிய விரும்புபவர்கள்,ராசிக்கல் மோதிரம் வாங்க விரும்புபவர்கள் எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com

கட்டணம் ரூ 500...உங்கள் பிறந்த தேதி,நேரம் ,பிறந்த ஊர் உங்கள் கேள்விகள் எழுதி அனுப்பவும்..

ராசிக்கல் உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தரப்படும் இதனை ஐம்பொன்னில் பதித்து பூஜித்து அனுப்பி வைக்கிறேன்,,
Related Article:

Post Comment

2 comments:

சே. குமார் said...

நல்ல பகிர்வு.
அபுதாபியில் இருப்பதால் ராசிக்கல் மோதிரத்துக்கு அனுப்ப முடியாது. ஊரில் மனைவியிடம் கேட்டு அவருக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்கிறேன்.

Anonymous said...

Thankfulness to my father who informed me on the topic of this webpage, this website is really awesome.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner