/> ஆடி மாசத்தில் செய்யக்கூடாதவை ..ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 17 July 2013

ஆடி மாசத்தில் செய்யக்கூடாதவை ..ஜோதிடம்


ஆடி மாசம் பொறந்துடுச்சி..சூரியன் கடக ராசிக்கு போகிறார் அது சந்திரன் ராசி...சந்திரன் உடல் மனக்காரகன் அங்கு நெருப்பு கிரகம் சூரியன் போவது ...என்றால் தண்ணீருக்குள் நெருப்பை போட்டா என்னாகும்..?கொதிக்கும்...ஆவியாகும்..நெருப்பும் அணையும்..அதனால் இந்த மாசம் சுப காரியத்துக்கு ஆகாது...நோய்கள் பெருகும் மாசம்..அதனால் நோய் எதிர்ப்பு சக்திகளான இயற்கை கொடுத்த மருந்துகள் வேப்பிலையும் ,மஞ்சளையும்..அதிகம் உபயோகித்து அம்மன் திருவிழாக்கள் தொடங்கும்..காதல் ராசியான கடகத்தில் நெருப்பு கிரகம் புகுந்தா காதல் விளங்குமா..? அதான் இந்த மாசத்துல கல்யாணம் வேண்டாம்னு பெரியவங்க சொன்னாங்க..கருவும் தங்காத மாசம் என்றுதான் புது ஜோடிகளையும் பிரிச்சு வெச்சாங்க அப்படி உருவாகும் கரு சித்திரையில் பிறந்து கொடூர எண்ணங்களும்,கோபமும் நிறைந்த குணவானாகவும்,அனைவரிடமும் பகை உண்டாக்கி கொள்கிறவனாகவும் இருப்பான்..!!

இன்னிக்கு தலையாடி...தேங்கா சுடுற நோன்பின்னு சின்னக்குழந்தைகள் சந்தோசமா சொல்வாங்க..பள்ளிக்கூடம் 3 மணிக்கே விட்ருவாங்க...இளம் தேங்காயை பாறையில் தேய்த்து மொழு மொழுன்னு செஞ்சி,அதோட கண்ணுக்குள்ள ஓட்டை போட்டு ஊற வெச்ச பச்சரிசி,வெல்லம்,எல்லாம் போட்டு குச்சியால குத்தி அதை நெருப்பில் சுடுவோம்...தேங்காய் ஓடு வெடிக்கும் வரை சுட்டு ,சாப்பிடும்போது ரொம்ப ருசியாக இருக்கும்...சின்ன வயசு சந்தோசம் தனி..இந்த வருசம் ஆடி 18க்கு காவிரி கரை புரண்டு ஓடும் என்பதை நினைத்தால் சந்தோசமா இருக்கு..ஆடி அமாவாசை,ஆடி வெள்ளி,அம்மன் ,கூழ்,மஞ்சள் காப்பு என கிராமங்கள் களைகட்டும்....!!! அனைவருக்கும் அம்மன் அருள் உண்டாகட்டும்..!!!Related Article:

Post Comment

3 comments:

Shanmugavel said...

This is really very informative and damn true statements about Aadi month. Thanks for your astrology service.

சே. குமார் said...

ஆடி வந்தாச்சா....
இனி கோவில்களில் திருவிழா களை கட்டுமுல்ல...

ஆடியில எல்லாருக்கும் நல்லா இருக்குமில்ல....

pallavan said...

please analyse Thivya's horoscope.As well Thanush'.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner