/> உத்தரகாண்ட் அழிவு ஏன்..? கூட்டாக மரணிப்பது ஏன்.? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 23 July 2013

உத்தரகாண்ட் அழிவு ஏன்..? கூட்டாக மரணிப்பது ஏன்.? ஜோதிடம்


உத்தரகாண்ட் அழிவு மட்டுமல்ல...கும்பகோணம் தீ விபத்து,அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்,மெரினாவில் சுனாமி இது போன்ற பேரழ்வில் இறந்தவர்கள் எல்லோருக்கும் ஆயுள் கெட்டுப்போச்சா..? அது எப்படி ஒரே நேரத்தில் அவ்வளவு பேர் இறந்தார்கள்..? 
இவங்க எல்லோர் ஜாதகத்திலும் ஒரு ஒற்றுமை இருந்தது....அந்த விபத்து நடந்த கோட்சாரத்திலும் ஒரு ஒற்றுமை இருந்தது...யார் ஜாதகத்தில் குருவும் ராகுவும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறதோ அல்லது குருவுக்கு 1,5,7,9 ல் ராகு இருக்கிறதோ அவர்கள் கூட்டு மரணத்தில் மரணிக்கிறார்கள் அதாவது கூட்டத்தோடு கூட்டமாக மரணம்...அது எப்போது நடக்கும்..? குருவும் ராகுவும் கோட்சாரத்தில் பார்க்கும்போது...!! இப்போது 2013 முடியும் வரை குருவும் ராகுவும் 5ஆம் பார்வையாக பார்த்துக்கொள்கிறார்கள்...உத்தரகாண்ட் மற்றும் பாலியல் கொடுமைகள் என இதனால் தொடர்ந்துகொண்டே இருக்கு..குரு பார்க்க கோடி நன்மை என்பது ராகு விசயத்தில் கோடி கொடுமையாக மாறும்..!

குரு ராகு சேர்க்கை ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கோ அந்த ராசிக்குறிய பலன்கள் பாதிக்கப்படும் காலையில் ஒரு பெண் ஜாதகம் பார்க்க நேர்ந்தது அவருக்கு 4ல் குரு ராகு...குரு குழந்தை பாக்யம் பற்றி சொல்லக்கூடிய முக்கிய கிரகம் அவர் தான் நாகரீகம்,ஆன்மீகம்,ஒழுக்கம் பற்றியும் சொல்லக்கூடியவர்...பணபலத்தையும்,செல்வாக்கையும் குறிப்பவர்...அவருடன் ராகு சேர்ந்து இருக்கும்போது மேற்க்கண்ட பலன்கள் பாதித்தது...அப்பெண் 4 முறை அபார்சன் செய்துகொண்டார்...ஒரு ஆண் குழந்தை அதன் பின் பிறந்தது...பின் கர்ப்பப்பை பாதிப்பால் ஆப்ரேசன் செய்து அதை அகற்றும் சூழல் உண்டானது...அவர் கணவன் வங்கியில் நல்ல பணியில் இருந்தாலும் இவர் பணத்தையெல்லாம் தன் உறவினர்களுக்கு தானம் வழங்கியதால் கடன் உண்டானது...இப்போ பண நெருக்கடி..குழந்தை இவர் சொல் கேட்பது இல்லை மிக அதிக பிடிவாதம்..குரு ராகு இணைந்ததால் குழந்தை சார்ந்த பிரச்சினைகள்,பண நெருக்கடி,அடிக்கடி மருத்துவ செலவு காரணம் சுக ஸ்தானம் 4ல் இவர்கள் கூடி இருந்ததுதான்....!!Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

ம்... பார்வையும் நல்லாயிருக்கணும்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner