/> கடன் பிரச்சினை உடனே தீர வேண்டுமா.? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 29 July 2013

கடன் பிரச்சினை உடனே தீர வேண்டுமா.? ஜோதிடம்

கடன் பிரச்சினை உடனே தீர வேண்டுமா.? ஜோதிடம்கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என சொல்வார்கள் கடன் வாங்கிவிட்டு அதை கட்ட இயலாமல் தவிப்பது நரகம் போன்றது..வாழ்க்கையின் அத்தனை பிடிகளும் அந்த நேரத்தில் போய்விடும் மன உளைச்சல் இன்னும் மோசமானது...

ஜாதகத்தில் 6,8 ஆம் ராசியில் இரண்டாம் அதிபர் அமர்ந்துவிட்டாலும் சுக்கிரன் கெட்டு போய் இருந்தாலும் இந்த நிலை உண்டாகிறது குரு கெட்டிருந்தாலும்,குருவுக்கு 6,8ல் சந்திரன் இருந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்குவதில்லை..கடன் உண்டாகிறது அல்லது கொடுத்த கடன் திரும்புவதில்லை...வருமானம் இருப்பதில்லை...

கடன் நிறைய இருக்கு வட்டி கட்டிக்கிட்டே இருக்கோம் எப்போ இதை அடைப்போம் என தவிக்கிறீர்களா..நல்ல நாள் பார்த்து கொஞ்சம் கடன் அடைத்தாலும் வெகு விரைவில் கடன் அடையும்..அது என்றைக்கு..?


கடன் வாங்கிவிட்டு சிரமப்படுபவர்கள்,பேங்க்ல லோன் வாங்கியிருக்குறவங்க கவனிக்கவும்;

வரும் புதன்கிழமை ஜூலை 31 காலை 11 முதல் 12 மணிக்குள் உங்க கடனில் சிறு தொகையை கட்டினால் கடன் வேகமாக தீரும்..

 அன்று குளிகை காலம்....12 மணி வரைக்கும் இருக்கு..குளிகையில் எதை செய்தாலும் அது திரும்ப நடக்கும் அதாவது நீங்க தொடர்ந்து பணத்தை கட்டி அடைச்சிடுவீங்க..காலப்புருச லக்னத்துக்கு சந்திரன் 2ல் வருதல்...தேய்பிறை நவமி...ஆடிகிருத்திகை எனும் சிறப்பான நாள்....எதிரிகள்,ருண் ரோகத்தை ஒழிக்கும் முருக கடவுளுக்கு சிறப்பான நாள் என்பதால் அன்று நல்லது..முயற்சித்து பாருங்களேன்..


Related Article:

Post Comment

2 comments:

சே. குமார் said...

நல்லது.... நானும் வீடு கட்ட லோன் வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறேன்...

Muthu Murugan said...

Next eppo intha mathiri time varum sollunga Sir?

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner