/> மீனம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினர் கவனிக்கவும்;சனி தோசம் நீங்க ஒரு எளிய பரிகாரம் ;ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 17 August 2013

மீனம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினர் கவனிக்கவும்;சனி தோசம் நீங்க ஒரு எளிய பரிகாரம் ;ஜோதிடம்

சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் உஷ்ணம் தீரும்..உடல் உஸ்ணத்தால்தான் பல வியாதிகள் உண்டாகிறது என்பதால் நம் முன்னோர் இதை கட்டாயமாக கடைபிடிக்க சொன்னார்கள்..இதற்கு பின்னால் இன்னொரு உண்மையும் இருக்கிறது ஏழரை சனி,அஷ்டம சனியால் துன்ப்படுபவர்களுக்கு நல்லெண்ணெய் குளியல் ஒரு பரிகாரமாகவும் இருக்கிறது...சனியால் ஏற்படும் துன்பம் தீர நல்லெண்ணெய் குளியல் சிறந்த பரிகாரம்..!! இமாச்சல் பிரதேசத்தில் சோம்பல் காரர்களுக்கும், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களுக்கும் வேலை அல்லது தொழில் இல்லாமல் துன்பபடுபவர்கள் அடிக்கடி நஷ்டப்படுபவர்களுக்கு இதைத்தான் பரிகாரமாக சொல்கிறார்கள்...
 
மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம்  ராசியினர் இதனை தவறாமல் கடைபிடிய்ங்கள் வெறுமனே கோயிலுக்கு மட்டும் போகாமல் சனிக்கிழமை ஆனால் காலை 7 மணிக்கே நல்லெண்ணெய் உடல் முழுவதும் தலை உட்பட நன்கு தேய்த்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு அதன் பின் சீகைக்காய் கொண்டு குளிக்கவும்...அன்று காலை எதுவும் சாப்பிட வேண்டாம் மதியம் காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு உண்ணவும்...இரவு இட்லி ,தோசை சாப்பிடலாம்..அசைவம் நிச்சயம் கூடாது...
உங்கள் தெருவில் வரும் துப்புறவு பணியாளர்களுக்கு டீ கொடுக்கலாம் அல்லது டீத்தூள் கொடுக்கலாம்..அல்லது டீ கொடுக்க வெச்சிக்குங்கன்னு ஒரு பத்து ரூபாயாவது கொடுக்கலாம் மாசம் ஒரு தடையாவது..
நீலம் கல் பதித்த ஐம்பொன் மோதிரம் அணியலாம்..இதை என் வாடிக்கையாளர்கள் பலருக்கு கொடுத்திருக்கேன் அது நல்ல பலன் கொடுத்திருக்கு..வெறுமனே ஏழரை சனிக்கு மட்டும் இதை அணிய வேண்டாம்..ஜாதகத்தில் சனி கெட்டிருந்தாலோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ அதிக பாதிப்பை தரும் இதை எழுதும்போதே ஒரு கன்னி ராசிக்காரர் தலையில் அடிபட்டுடுச்சி சார் எப்போ ஏழரை முடியும்னு புலம்புறார்..சனி திசை உங்க ஜாதகத்துல நடந்தா கண்டிப்பா நீலக்கல் போட்டுக்குங்க..சனி தொழிலை கெடுப்பது மட்டுமல்ல வாகன விபத்து,அறுவை சிகிச்சை ,கோர்ட் வழக்கு என நோக செய்து விடுவார்  அது போன்ற கடும் துன்பங்கள் திடீர்னு தாக்காம இருக்க ஐம்பொன் அவசியம் ஐம்பொன்னில் 5 உலோகங்கள் இருக்கு..வெள்ளி,தங்கத்தை விட இது வேகமான பலன் கொடுக்கும்..உங்க ஜாதகத்தை எனக்கு மெயில் பண்ணுங்க..இல்லைன்னா உங்க பிறந்த தேதி பிறந்த நேரம் இவற்றை எழுதி அனுப்புங்க..உடன் பார்த்து சொல்கிறேன் நானே மோதிரம் செய்து பூஜித்து கொரியரில் அனுப்பி வைக்கிறேன் அளவு எண் சொன்னால் போதுமானது...ஒரிஜினல் சாதிக்கல் மோதிரம் தான் என் வாடிக்கையாளருக்கு தருகிறேன் அதில் சந்தேகம் வேண்டாம்...நகைக்கடைகளில் விற்பதை விட குறைந்த விலையில் தருகிறேன்..என் மெயில் முகவரி;sathishastro77@gmail.comRelated Article:

Post Comment

1 comment:

Anonymous said...

நல்ல தகவல்.
பகிர்விற்கு நன்றி.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner