/> செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 22 August 2013

செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்

செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்

செவ்வாய் ஒரு யுத்த கிரகம்.  சண்டைக்கு அதிபதி வீரத்துக்கு அதிபதி, நிலத்துக்கு அதிபதி, ரத்தத்துக்கு அதிபதி, பெண்கள் என்றால் கணவனை குறிப்பது என சொல்கிறது ஜோதிடம்...ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றாலும் அந்த இடம் அதிக சக்தியுடன் வீரியத்துடன் இருக்கிறது..அந்த பாவத்தை பல மடங்கு கொந்தளிக்க செய்யும்...உதாரணமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது என்ன..? வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்லாம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன..? இதெல்லாம் பிரச்சினையான இடம் அதுக்கு தகுந்த மாதிரி சேர்த்துங்க என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

4ஆம் இடம் சுக ஸ்தானம் உடல் அடிக்கடி பாதிக்கப்படுவது அல்லது உடல் அதிக பலத்துடன் இருப்பது,சொத்துக்கள் சேர்க்கை அல்லது சொத்துக்களில் வில்லங்கம்,தாயார் பாதிப்பு தாயாரால் பிரச்சினை,ஒழுக்கம் பாதிக்கப்படுதல் அல்லது ஒழுக்கத்தில் அளவுக்கு அதிகமான கண்டிப்பு இவையெல்லாம் லக்னத்தை பொறுத்து மாறும் என்பதால் இதையும் கொடுத்திருக்கிறேன் நெகடிவ் பாசிடிவ்.

7ஆம் இடம் என்பது என்ன..? களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள் ,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவதியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்..? ராசிக்கட்டத்தை ஆராயாமல் 9 பொருத்தம் இருக்கு.. ராமனும் சீதையும் மாதிரிஇருப்பாங்க  என புலிக்கு பூனையை கட்டி வெச்சிடாதீங்க மக்களே..!!

8ஆம் இடம் கொஞ்சம் விவகாரமானது எதையும் ஓபனா சொல்லிடனும்னு நினைப்பதால் சொல்கிறேன்...இந்த இடம் ஆண் உறுப்பு பெண் உறுப்பு பற்றிய இடம்,நஷ்டம் பற்றியும் திடீர் அதிர்ஷ்டம் பற்றியும் சொல்லும் இடம்,துக்கத்தை சொல்லும் இடம்..சதா குழப்பமும் துக்கமும் இருக்கும்..டென்சன் அதிகமாகவே இருக்கும் இவருக்கு 2ல் செவ்வாய் இருக்கும் வாயாடியை ( ஸாரி எளிமையா புரியனும்னு இந்த பதத்தை பயன்படுத்துறேன்) கட்டி வெச்சிட்டா என்னாகும்..? போர்க்களம்தான்..எப்படி சந்தோசம் வரும்..? சரி இவருக்கு எந்த செவ்வாய் கல்யாணம் செய்து வைக்கிறது..? துக்கத்தில் இருப்பவரை சந்தோசப்படுத்திட 2ல் செவ்வாய் தவிர வேறு செவ்வாய் எதையும் சேர்க்கலாம்,

12 ஆம் இடம் என்பது தூக்கம்,கட்டில் சுகம்,காம உணர்வு,முக்தி,மோட்சம் பத்தி சொல்லும் இடம் அதை காம உணர்வு உற்பத்தியாகும் இடம்னு வெச்சிக்குவோம்..அங்கு செவ்வாய் இருக்கிறார் அப்போ தூக்கம் இல்லாம தவித்தல்,சதா சுகம் பத்திய நினைவு உண்டாதல் இருக்கலாம்..இவருக்கு 7ல் செவ்வாய் இருப்பவரை கட்டி வெச்சா செம பொருத்தமா இருக்கும் இல்லையா..? 2ல் செவ்வாய் பேசிக்கிட்டே இருப்பார் ....புரியுதுல்ல..7,12 செவ்வாய் நல்ல பொருத்ததை தரும் 2,8 செவ்வாய் மோசமான பொருத்தம்.4-7,4-8,2-7 கூட பிரச்சினை இல்லை...செவ்வாய் தோசத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்..அதுக்கப்புறம் சுக்கிரன் வெச்சி இது மாதிரி ஆராய்ச்சி பண்ணலாம்...குரு இவருக்கு மேல இருப்பாரு...குரு,சுக்கிரன்,செவ்வாய் ,சூரியன் எல்லாம் முக்கியமான பெரிய கிரகங்கள் இவர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம பொருத்தம் அருமையா இருக்குன்னு சொல்லாதீங்க...

ஜாதகம் பார்க்க விரும்புபவர்கள் பிறந்த தேதி பிறந்த நேரத்துடன் என் மெயிலுக்கு உங்க கேள்விகளையும் எழுதி அனுப்பவும் கட்டணம் ரூ 500 மட்டும்....sathishastro77@gmail.com
.


Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

அறிந்து கொண்டோம்...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner