/> குருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 25 October 2013

குருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..?

குருப்பெயர்ச்சி வருடம் ஒரு முறை நிகழ்கிறது..இப்போது குரு மிதுனத்தில் இருக்கிறது...மிதுனம் ராசியினருக்கு ஜென்ம குருவாகவும்,கடகம் ராசியினருக்கு விரய குருவாகவும்,சிம்மம் ராசியினருக்கு லாப குருவாகவும் ,கன்னி ராசிக்கு 10 ஆமிட குருவாகவும் ,துலாம் ராசிக்கு பாக்ய குருவாகவும்,விருச்சிக ராசிக்கு அஷ்டம குருவாகவும்,தனுசு ராசிக்கு களத்திர லாப குருவாகவும்,மகரம் ராசிக்கு ருண ரோக குருவாகவும்,கும்பம் ராசிக்கு ஜெய குருவாகவும்,மீனம் ராசிக்கு சுகஸ்தான குருவாகவும்,மேசம் ராசிக்கு வீரிய குருவாகவும்,ரிசபம் ராசிக்கு தன குருவாகவும் இருக்கிறார்...

இந்த குருவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராசிகள் ;கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம்,மேசம் ஆகும்

மிதுன க்ருவால் அதிகம் நன்மை பெற்ற பெறும் ராசிகள்;ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகும்..


அடுத்து மிதுனம் ராசியில் இருந்து குரு எப்போது கடகம் ராசிக்கு செல்கிறார் என பார்த்தால் 19.6.2014 அன்று பெயர்ச்சியகிறார்..

அப்போது கடகத்தில் குரு உச்சமாகி இருப்பார்..உலகில் அதிகம் கோயில் கொண்டுள்ள பகுதி தமிழகம் ஆகும்..கோயில்களை குறிக்கும் கிரகம் குருவாகும்...குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர் ..செல்வாக்கை குறிப்பவர்...குரு கடகத்தில் உச்சமாகும்போது தமிழகத்துக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிக செல்வாக்கும் உண்டாகும் ஆன்மீக புரட்சியும் உண்டாகும்...


Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

நம்மளுக்கு நல்லா இருக்கும்ன்னு ஒவ்வொரு வருசமும் சொல்லுறாங்க... இந்த முறையும் அதேதான்...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner