/> ஹோமம் வேள்வி பரிகாரம் பலன் தரும், ஆரோக்கியம் தரும், செல்வம் தரும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 19 November 2013

ஹோமம் வேள்வி பரிகாரம் பலன் தரும், ஆரோக்கியம் தரும், செல்வம் தரும்

உண்ண இயலா எல்லாப்பொருட்களையும் வேள்வியில் இட்டு புகையாக்கி நம் உடலுக்கு வழங்கி பல பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கின்றனர் நம் பாரத மகான்கள்...

உடல்பருமனால் அவதிபடுபவர்களுக்கு அப்பளப்பிரண்டை எனும் மூலிகையை வேள்வியில் இட்டு புகையை சுவாசிப்பதால் ஊளைசதை கரைகிறது..தாமரைப்பூவை தேனில் குழைத்து வேள்வியில் இடுவதால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற முடியும்..செண்பகபூவை வேள்வியில் இடுவதால் கடன் பிரச்சினை அகலும்.,..புரசுப்பூவை வேள்வியில் இடுவதால் அரசு சம்பந்தமான பிரச்சினை வழக்குகள் சம்பந்தமான பிரச்சினை குறையும்..சிலோத்துமம் என்ப்படும் சளி மிக கொடியது நெஞ்சுசளியால் இறந்த பெரியோர்கள் அநேகம்...வேள்விகள் சிலோத்துமத்தை ஓட ஓட விரட்டுகின்றன..வாத நோய்க்கு வஜ்ரவல்லி வேள்வி நல்ல பலன் தரும்..விச ஒவ்வாமையால் அவதிப்படும் ராகு திசை நடப்பவர்களுக்கு அருகம்புல் வேள்வியில் இடுவதால் பிரச்சினை தீரும்...குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நாயுறுவியால் யாகம் வளர்க்கப்படுகிறது..


பாரத நாட்டுக்கே உரியதான வேள்வி எனும் யாகம் வளர்ப்பது சாதாரண புரோகிதர் சமாச்சாரம் அல்ல..அதில் நிறைய மருத்துவ குணம் உள்ளது..போபால் விஷ வாயு கசிவு உண்டாகி எல்லோரும் இறந்தபோது அக்னி ஹோத்திரம் பூஜை செய்து தப்பிய குடும்பம் பற்றி படித்திருப்பீர்கள்...இப்போது இந்த அக்னி ஹோதிரம் அமெரிக்கா இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது..தன்வந்திரி ஹோமம் வளர்ப்பதால் கடுமையான நோயும் கட்டுப்படுகிறது..வேள்வியில் இடப்படும் மூலிகைகளால் பலவிதமான பலன்கள் உண்டாகிறது..மழை வேண்டி செய்ய்ப்படும் வருண ஜபங்களில் தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் மூலிகையை அதிகளவில் இடுகின்றனர் இதனால் மழை அங்கு பெய்கிறது..வஜ்ரவல்லி எனும் மூலிகையை இட்டு வேள்வி செய்தால் பூப்படையாத பெண்ணும் பூப்படைவாள்..சோரியாசிஸ் எனும் வியாதியை தன்வந்திரி ஹோமம் சரி செய்கிறது..கல்யாண முருங்கை எனும் மூலிகையை வேள்வியில் இடுவதால் தோல்நோய்கள் குணமாகின்றன...Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

தெரியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner