/> ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 30 December 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்

புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்

கன்னி ராசியினருக்கு புத்தாண்டில் சந்தோசமான செய்தி காத்திருக்கு...இந்த ஆண்டு உங்க ஏழரை சனி முற்றிலும் தீர்கிறது இனி சனி பகவான் தொந்தரவு இருக்காது..நிம்மதியா இருக்கலாம்..அதே போல 12 வருடங்களுக்கு பிறகு லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெறுகிறார்..இதனால் உங்கள் செல்வாக்கு கூடும்...உறவினர் மத்தியில் மதிப்பு ,மரியாதை உண்டாகும் பணம் பல வழிகளிலும் வந்து பேங்க பேலன்சை உயர்த்தும் கடன்பாக்கிகள் வேகமாக அடைபடும்..குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் கல்யாணமே ஆகாம ஒத்தையா இருந்துடுவமோன்னு ஃபீல் செய்பவர்கள்,இந்த வருடம் கல்யாணம் ஆகி ஜோடியாக தேனிலவு செல்லும் காலம் நெருங்கி விட்டது..வைகாசியில் டும்டும்தான்...தொழில் மந்தமாக இருந்தவர்களுக்கு இனி பிசியோ பிசிதான்.,..நல்ல நேரம் பொறக்குதுங்க...!! பொறுமையா இருங்க!!

 புத்தாண்டு ராசிபலன் 2014;துலாம்;

சுக்கிரனின் ராசியில் பிறந்த சுகவாசி அன்பர்களே...அஎங்க சுகம் அடிதான் என ஜென்ம சனியில் துவண்டிருக்கும் நண்பர்களே....இந்த வருசம் ஜென்ம சனி முடிஞ்சிரும்..அது ஒண்ணுதான் ஆறுதல்..இருப்பினும் உங்க ராசியில் குடியிருந்து தொல்லை தரும் ராகு விலகி ஜூன் மாதம் முதல் விரயத்திற்கு செல்கிறார் அது நல்லது செய்யும்..பல கஷ்டங்கள் நெருக்கடிகள் தீரும்..இதுவரை இருந்து வந்த பகைகள் விலகும்..ஜூன் மாத குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை 10 ஆம் இட குரு பதவிக்கு சிக்கல்...இடம் மாறுதல் போன்ற பிரச்சினைகளை தரலாம் அவரவர் ஜாதகத்தில் இருக்கும் திசாபுத்திகளின் யோக அடிப்படையில் இதில் மாற்றம் இருக்கும் யோகமான திசை நடந்தா பாதிப்பு அதிகம் இருக்காது...2013 ஒப்பிடும்போது 2014 நன்றாகவே இருக்கும்..கவலை வேண்டாம்..!Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner