/> ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்,தனுசு | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 31 December 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்,தனுசு

புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்;

கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என உங்களை பார்த்துதான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..பிடிவாதம் என்றாலும் அது அக்கறையின் வெளிப்பாடுதான்...அன்புள்ளம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..உங்களுக்கு இந்த புத்தாண்டு சந்தோசமான செய்தியை கொண்டு வருகிறது...ஆம்...பாக்யஸ்தானத்தில் குரு உச்சம் பெறுகிறார்...இதுவரை அஷ்டமத்தில் குரு இருந்து பணக்கஷ்டம்,மனக்கஷ்டம்,உறவினர் நண்பர் பகை என தொல்லை கொடுத்தார் இனி சந்தோசத்தை வாரி வழங்க காத்திருக்கிறார்...9ல் உச்சம் பெற்ற குரு உங்க ராசியை பார்வை செய்வதால் நீங்க ரொம்ப நாளா ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கப்போகுது..நினைச்சது எல்லாம் நடக்கப்போகுது!!! ஏழரை சனி கவலையை விடுங்க..குரு பர்க்க கோடி நன்மை..என்பது இந்த வருசம் உங்களுக்கு புரியும்..சனியின் பாதிப்பும் இதனால் விலகும்...ஜூன் மதம் முதல் இனிப்பான செய்திகள் காத்திருக்கு..வீடு கட்டுதல்,வாங்குதல்,குழந்தை பாக்யம்,திருமணம் கைகூடுதல் ,உடல் ஆரோக்கியம் சீராகுதல்,நீண்ட நாள் சந்திக்காமல் இருந்த உறவுகளை சந்தித்தல்,அலுவலகத்தில் செல்வாக்கு பதவி உயர்வு,கடன் அடைபடுதல்,அதிக வருமானம் இதெல்லாம் நிச்சயம் நடக்கும்..சந்தோசம்தானே!!!

தனுசு; 

 புத்தாண்டு ராசிபலன் 2014;தனுசு

புத்தாண்டு பிறக்கும் ராசியே உங்க ராசிதான்..ஆமா புத்தாண்டு அன்று மூலம் நட்சத்திரம் தனுசு ராசி...உங்க ராசி அதிபதி மாசி 22 வரை வக்ரம் பெற்று இருக்கிறார் அதனால் உடல்நலனில் கவனம் தேவை..வரவு செலவில் கவனம் தேவை..ராசி அதிபதி குரு உச்சம் பெறுவது நல்லதுதான் என்றாலும் எட்டாமிட்த்தில் மறைந்துவிடுகிறார்...இந்த வருடத்தில் ஏழரை சனியும் துவங்குகிறது...சுப காரியங்கள் செய்வது,வீடு கட்டுவது வாங்குவது என சுப விரயம் ஆகும்..இதனால் கடனும் ஆகலாம்..தொழிலில் நிறைய மாற்றங்கள் உண்டாகும் சிலர் இடம் விட்டு இடம் மாறுவர்...சுப காரியம் செய்வதற்கான வருடமாக இது உங்களுக்கு அமைகிறது!!கடன் கொடுத்தால் திரும்பாது கடன் வாங்கினால் நெருக்கடி...ஜாமீன் கையெழுத்து யாருக்கேனும் போட்டால் நீங்கதான் கட்டனும்..நினைவில் வைத்துக்கொள்ளவும்...செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் அதற்கேற்ற வருமானமும் குறைவில்லாமல் இந்த வருடம் வந்து சேரும்


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner