/> தலையெழுத்தை மாற்றும் கொடுமுடி பிரம்மாவும் குருபூஜையும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 24 December 2013

தலையெழுத்தை மாற்றும் கொடுமுடி பிரம்மாவும் குருபூஜையும்

குரு வக்ரத்திற்காக சிறப்பு அர்ச்சனை வழிபாடு பவானி கூடுதுறை தட்சிணாமூர்த்திக்கு வியாழன் அன்று செய்ய உத்தேசம்..வெள்ளிக்கிழமை கடவுள் அனுக்கிரகம் இருப்பின் என் ஜோதிட வாடிக்கையாளர்கள் நண்பர்களுக்காக கொடுமுடி பிரம்மாவுக்கும் பூஜை, அர்ச்சனை செய்ய இருக்கிறேன்..எல்லாம் அஷ்டம சனி,ஏழரை ,குரு வக்ரத்தால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் குடும்பத்துக்காகத்தான்..இது ஒரு முதல் முயற்சி..இதையெல்லாம் செய்ய முடியாத நண்பர்களுக்காக நான் முயன்று உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் கடமை அவ்வளவுதான்...

சில நண்பர்களுக்காக..மற்றும் அன்னதானம் 6.1.2014 அன்று மாற்றி அமைத்துள்ளேன்..குழந்தைகள் விடுமுறையில் சென்று 2 ஆம் தேதிதான் வருவதால் 6ஆம் தேதி வைத்துக்கொண்டால் புத்தாண்டுக்கும் சேர்த்து அன்னதானம் செய்தது போல இருக்கும்..இப்போ குறைவான குழந்தைகள் ஆஸ்டலில் இருப்பதால் முழுமையாக எல்லா குழந்தையும் வந்தபின் சிறப்பாக செய்ய திட்டம்...நானும் இன்னும் த்யார் படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது...தனியாக சமையல் ஆள் போட்டு வீட்டில் பார்த்து சமையல் செய்து தரணும்....அன்னதானத்துக்கு யாரும் பணம் அனுப்பட்டுமா என கேட்க வேண்டாம் ..இதுவே நிறைவு..என் பங்கும் இருப்பதால் ,தேவைப்படாது..மேலும் செய்ய விரும்புபவர்களுக்கு இன்னொரு நாளில் ஸ்கூலில் தேதி பதிவு செய்து உங்கள் பெயரில் செய்து தருகிறேன்..எனக்கொன்றும் சிரமமில்லை...இதுவே பெரிய புண்ணியம்..~~!!!


Related Article:

Post Comment

1 comment:

Subramaniam Yogarasa said...

நன்று.....நன்றி.யார் தலையில் என்ன எழுதியிருக்கோ..........என் தலையில் என்ன எழுதியிருக்கோ,எங்களுக்காக பூஜை மற்றும் அன்னதானம் கொடுக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்?ஆண்டவன் உங்கள் பக்கம் இருப்பார்.நன்றி!

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner