/> திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்கள் பிரசாதமும்..~~~ | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 3 January 2014

திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்கள் பிரசாதமும்..~~~

தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தரும் திருப்பதியில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் மூலவரான வெங்கடாஜலபதி சன்னதிக்கு எடுத்து சென்று அமுது செய்வித்து அதாவது படைக்கப்பட்டு அதன்பின்பே விநியோகம் செய்யப்படுகிறது..ஆனால் பிரபலமான தமிழக கோயில்களில் அப்படி செய்கிறார்களா..? இல்லை..காண்ட்ராக்ட் எடுத்தவர் எந்த சோற்றை மடித்து தருகிறாரோ அதுதான் பிரசாதம்..அநியாயம்!!!

திருநள்ளாறு செல்பவர்கள் சனிபகவானையே நினைத்து செல்ல வேண்டாம்...சிவன் கோயில் அது.தர்பாரண்யேஸ்வரர்,தியாகராஜர்,மரகதலிங்கம் என மூன்று சிவ ரூபங்கள் உள்ளன..மூன்றையும் தரிசனம் செய்துவிட்டு,ப்ராணாம்பிகை அம்பாளை தரிசனம் செய்தபின் சனீஸ்வரரை வழிபட வேண்டும்..நளனுக்கு சனிதோசம் நீங்க அருள் செய்தவர் தர்பாரண்யேஸ்வரர்...ஆகவே அந்த சிவனை வழிபட்டால்தான் சனி தோசம் நீங்கும்!!!!

 ரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்களா..என கேட்கிறார்கள்...புனர்பூசத்தில் பிறந்தவர்கள் அனைவரும்,ராமரை போல ஏகபத்தினி விரதனாகவா இருக்கிறார்கள்..?

 மது நாட்டின் மூலிகை வளங்களை அழிக்கவும்,நம் மண்ணின் உயிர்ப்பு சக்தியை சீர்குலைக்கவும் ஏவப்பட்ட உயிர்மை ஆயுதம்தான் பார்த்தீனியம் செடி..இந்த செடியின் விசத்தன்மை காற்றில் பரவி நம்மை நோயுற செய்து நமது நோயை போக்கக்கூடிய மூலிகைகளையும்,விவசாயத்தையும் அழிக்கிறது.இதன் மூலம் நாம் நோயாளியாகி,தினம் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை...இது கிராமங்களில் மிக வேகமாக பரவி வருகிறது...நமது கிராமங்களை அழிக்க ஏவப்பட்ட அணுகுண்டை விட மோசமான பையோ வெப்பன்ஸ் அதாவது உயிர்மை ஆயுதமான இதனை அழிப்பது மிக அவசியம்.அவசரம்!!

 மத்தம்பூ,அரளிப்பூ,எருக்கம்பூ எல்லாம் விஷ செடிகள்...நம் நாட்டு விஷ செடிகள் நன்மை செய்பவை...காலரா,பிளேக்,அம்மை போன்ற காற்றில் பரவும் நோய்கள் வராமல் தடுக்க நம் முன்னோர்கள் கடவுள் சிலைகளுக்கு இவற்றை மாலைகளாக கட்டி அணிவித்தும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் நோய்கிருமிகளை காற்றிலேயே அழித்தனர்..இதுதான் உண்மையான பகுத்தறிவு..கடவுள் சிலைகளை உடைப்பதும்,பார்ப்பானை அடித்து கொல்லு என்பதும் பகுத்தறிவு அல்ல..!

 னிகளில் உணவு கனி ,காற்றுக்கனி என நம் பெரியவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்...மா,கொய்யா,வாழை,போன்றவை உனவுகனிகள் ஆகும்,நுணா,கொன்றை போன்றவை காற்றுக்கனிகள்..காற்றில் மூலம் பரவும் நோய்க்கிருமிகளை அழிக்க இந்த கனிகள் உதவும்..அந்தகாலத்தில் கோபுரமாடங்கள் போன்ற உய்ரமான இடங்களில் ஏறி நின்று முரசில் நுணா கனியை தடவி முரசை அடித்து அதன்மூலம் காற்றில் பரவும் பிளேக் போன்ற நோய்க்கிருமிகளை விரட்டினர்..

துபோலவே சின்னக்குழந்தைகளுக்கு நுணா காய்களை கொடுத்து பிள்ளையார் பந்து விளையாட்டு என சொல்லி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாட செய்தனர் இதனாலும் கார்ரில் அது வீசப்படும்போது நோய்க்கிருமிகளை அழிக்கும் ..நுணா மரத்தால் செய்யப்பட்ட விவசாயகருவிகளை பயன்படுத்தினர்..உழவு மாடுகளுக்கு நுகத்தடி போன்றவை நுணா மரத்தால் செய்யப்பட்டன..இதனால் விவசாய வேலை செய்து கைகள் புன்ணானால் அந்த கைப்பிடியே மருந்தாக செயல்படும்..மாடுகளுக்கும் கழுத்தில் காயம்பட்டால் அந்த நுகத்தடியே மருந்தாக வேலை செய்யும்..குணமாக்கும்..நுணா கனியை சாப்பிடுவது கடும் விசம்...ஆனால் இப்போது நோனி எனும் கெமிக்கல் கலந்த மருந்த இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது..நுணா பற்றி அறியாமல் பலரும் வாங்கி அருந்துகின்றனர்...இதனால் புதிய நோய்கள்தான் உண்டாகும்!!

 கொன்றை மலருக்கும்... தமிழ் வருடம் பிறக்கும் சித்திரை மாதத்துக்குமான தொடர்பு... பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆம்... சித்திரை முதல் தேதியன்று கண் விழித்ததும் பார்க்க வேண்டிய மங்கலப் பொருட்களின் வரிசையில் பொன்னுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருப்பது கொன்றை மலரே! அந்தளவுக்குச் சிறப்பு பெற்றது கொன்றை.
 
 கொன்றை மலரைக் கொண்டு வழிபட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இதற்கு 'சொர்ண புஷ்பம்' என்கிற பெயரும் உண்டு!


Related Article:

Post Comment

3 comments:

சே. குமார் said...

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.

A. Chandar Singh said...

பல வகையான அறிய செய்திகள்.மிக்க நன்றி நண்பரே.............

Subramaniam Yogarasa said...

நன்றி சார்,அருமையான விளக்கங்களுக்கு!நம் முன்னோர் ஒவ்வொன்றையும் பகுத்து ஆய்ந்தே வகுத்திருக்கிறார்கள்.இது தெரியாமல் நாம்...........//நமது நாட்டிலும்(தமிழீழம்)பார்த்தீனியம் செடியை ஒழிக்கப் பெரும் போராட்டமே நடக்கிறது!ஒழித்து விடுவார்கள்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner