/> கடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிகாரம் கடன் அடைக்க நல்ல நேரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 22 January 2014

கடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிகாரம் கடன் அடைக்க நல்ல நேரம்

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்..ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ஆம் அதிபதி எட்டாம் அதிபதி திசை நடந்தாலோ அல்லது இவர்களது நட்சத்திரத்தில் நின்று எந்த கிரகமாவது திசை நடந்தாலோ கடன் பிரச்சினை அதிகம் உண்டாகிறது 

வருமானம் இல்லை என்றால்தான் கடன் நெருக்கடி அதிகமாகிறது வருமானம் ஏன் இல்லை..? தொழில் மந்தம்...வருமானம் போத
வில்லை சம்பலம் குறைவாக இருக்கிறது என்பதுதான் காரணம்.ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 6ஆம் ராசியில் இருந்தால் வட்டி கட்டவே வருமானம் சரியாக இருக்கும்.

உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் ,செவ்வாய் கிழமை வட்டி கட்டுங்கள் அஷ்டமி நாளில்,கரி நாளிலும் வட்டி கட்டலாம்...சீக்கிரம் கடன் அடையும்.வெள்ளிக்கிழமை,வியாழக்கிழமை கட்ட வேண்டாம் நெருக்கடி உண்டாகும் கடனும் அதிகமாகும்.

இந்த மாதத்தில் எந்த நாளில் நேரத்தில் பணம் கொடுத்தால் கடன் சீக்கிரம் தீரும் என குறித்திருக்கிறேன்.கடனில் ஒரு பகுதியையோ, வட்டியையோ இந்த நேரத்தில் முடிந்தவரை கட்ட பாருங்கள்..

ஜனவரி 25 சனிக்கிழமை மாலை 3 முதல் 4 மணி வரை....வங்கி என்றால் காலையில் கட்டலாம் தவறில்லை.

ஜனவரி 28 செவ்வாய் கிழமை 2 மணி முதல் 3 மணிக்குள்

பிப்ரவரி 1 சனிக்கிழமை 12 மணி முதல் 1மணிக்குள்

பிப்ரவரி 3 திங்கள்கிழமை 12 முதல் 1.30க்குள்

பிப்ரவரி 8 சனிக்கிழமை 12 மணிமுதல் 1 மணிக்குள்

மேற்க்கண்ட நாளை கடன் அடைக்க பயன்படுத்துங்கள்..

சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் லட்சுமி நரசிம்மரை எலுமிச்சை மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வனங்கினால் மனமுருக வேண்டினால் கடன் சீக்கிரம் தீரும்.


Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

நல்ல தகவல்...
வீடு கட்ட வாங்கிய கடன் இன்னும் அடைபடமால் கஷ்டப்படுத்துகிறது... இந்த நாளில் வட்டி அடைத்துப் பார்ப்போம்...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner