/> மகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 7 February 2014

மகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம்

மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 27.02.2014 வியாழக்கிழமை அன்று அமைவதாக பஞ்சாங்கம் சொல்கிறது...


 Photo: மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 27.02.2014 வியாழக்கிழமை அன்று அமைவதாக பஞ்சாங்கம் சொல்கிறது...

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும்.  இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.

சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

அன்றைய நாள் ,அன்னதானம்,உடை தானம் செய்ய இருக்கிறேன்...அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும்...!!அதுபற்றி விவரம் அறிய,பங்களிக்க விரும்புபவர்கள்.. sathishastro77@gmail.com க்கு மெயில் பண்ணவும்..அல்லது இன்பாக்சில் என்னை தொடர்பு கொள்ளவும்.எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.

சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.


அன்றைய நாள் ,அன்னதானம்,உடை தானம் செய்ய இருக்கிறேன்...காதுகேளோதோர் பள்ளி,முதியோர் இல்லம்,கண்பார்வையற்றோர் பள்ளி போன்றவற்றில் அன்னதானம்,உடைகள் வழங்குதல் செய்யும் எண்ணம் இருக்கிறது..!!அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும்...!!அதுபற்றி விவரம் அறிய,பங்களிக்க விரும்புபவர்கள்.. sathishastro77@gmail.com க்கு மெயில் பண்ணவும்..அல்லது 9443499003 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளவும்.நேரடியாக அன்னதானத்துக்கு நன்கொடை அனுப்ப விரும்புவோர்;k.sathishkumar, state bank of india ,bhavani 20010801181 ifsi;sbin0000971 என்ற வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..உங்கள் பெயர்,ராசி,உங்கள் குடும்பத்தார் ராசி நட்சத்திரம் எழுதி,முகவரியும் எழுதி.. மெயில் அனுப்புங்கள்...அந்த பெயரில் மகாசிவராத்திரி அன்று மூன்று நதி கூடும் ஸ்தலமாகிய பவானி கூடுதுறை சிவன் கோயிலில்..சங்கமேஸ்வரருக்கு சிவராத்திரி இரவில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புகிறோம்..!!!
 மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்..!!


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner