/> தனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 26 February 2014

தனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..?

தனுசு ராசிக்கு இப்போ ஏழாம் இடத்தில் குரு இருக்கிறது..இது குருபலம்தான்...ஆனா பணப்பிரச்சினை நிறைய இருக்கிறது.., தொழில் அப்படியே விழுந்துடுச்சி சார் என பல நண்பர்கள், வாடிக்கையாளர்கள் புலம்ப கேட்கிறேன்..இனிமே நல்லாருக்குமா என கேட்பவர்களிடம் சொல்ல சங்கடமாக இருக்கிறது..ராசிக்கு ஜூன் மதம் முதல் எட்டாம் இடத்தில் குரு வருகிறது...ஏழரை சனி நவம்பரில் துவங்குகிறது!! கொஞ்சம் கவலையன விசயம் தான் இருப்பினும் ராசி அதிபதி உச்சம் பெறுவதால் அவர் எட்டில் இருப்பதால் அதிர்ஷ்டம்தான் என சொல்லவேண்டும்...எட்டாம் இடம் எதிர்பாராத நன்மைகளையும் குறிக்கும்..ஏழரை சனி என மிரள வேண்டாம்.. ஏழரை சனியில் சொத்து வாங்கியவர்கள் தொழில் அதிபர் ஆனவர்கள் அனேகம் ஏழரை சனியில் வாங்கும் சொத்து நிலைக்கும் என்றும் சொல்வர்...பொங்கு சனி என்பது நடு வயதில் வரக்கூடியது ..உழைப்பால் பெரும் முன்னேற்றம் அடைவது பொங்கு சனியில்தான் பாடம் கத்துக்கொடுத்து இனி உன்னை மட்டும் நம்பு என ஆறுதல்படுத்தி முன்னேற்றச்செய்வதில் சனிக்கு நிகர் யாரும் இல்லை.மூன்றாவது ஏழரையாக வருபவர்கள் மட்டும் பாதிப்பு அதிகமிருக்கும் ஆரோக்கியம் கெடும்.

ராசிக்கு இரண்டாம் இடத்தை குரு பார்வை செய்வதால் குடும்பம் அமையும்...வருமானம் இருக்கும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் எனலாம்..லக்னத்தில் இருந்து கவனித்தால் குரு பார்வை பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் அல்லது சுக்கிரனை பார்த்தால் திருமணம் விரைவில் அமையும் எனலாம்...

தனுசு ராசிக்கு ராசிநாதன் குருதான் முக்கியம் அவர் மறைவது கொஞ்சம் சிக்கல்தான் மறைந்தால் என்ன பலன்..? தன்னம்பிக்கை குறையும் எதிலும் உற்சாகமாக செயல்படமுடியாத நிலை..செல்வாக்கு குறையும்..பணி செய்யுமிடத்தில் மதிப்பு குறையும் பணம் வருமானம் தடைபடும் எப்போதவது திடீர் அதிர்ஷ்டமாக எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும்.

பூராடம் போராடும் என்பார்கள்..மூலம் நிர்மூலம் என்பார்கள் ...அது இக்காலத்தில் செயல்படும் எனினும் திருமண வயதை எட்டியவர்கள் திருமண முயற்சி செய்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் திருமணம் உறுதி செய்வது நல்லது.சனி வக்ரம் குரு வக்ரம் வரும்போதெல்லாம் நீங்கள் அப்பாடா என நிம்மதியாக இருக்கலாம் அப்போதெல்லாம் எந்த பாதிப்பும் இருக்காது அப்போதிருக்கும் பிரச்சினைகள் தீரும். 

வழிபடவேண்டிய தெய்வம் முருகன் தான்...வியாழக்கிழமையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வணங்குங்கள் அல்லது தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கலாம்..தான தர்மங்கள் செய்யும் முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள்...

மகா சிவராத்திரி அன்னதானம் மற்றும் ஆடைதானம் நாளை வழங்க இருக்கிறேன் வெள்ளிகிழமை படங்கள் அப்டேட் செய்யப்படும்.

நன்கொடைகள் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி..அடுத்து பங்குனி உத்திரம் அன்று குழந்தைகளுக்கு,இனிப்புடன் கூடிய,அன்னதானம் ஆதரவற்றோர்க்கு உடைதானம் செய்ய இருக்கிறேன்...அதிக உதவியில்லாத மிக சிரமப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் இதை செய்கிறேன்..வசதியாக இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்ய பலர் இருக்கின்றனர்..
contact;sathishastro77@gmail.com  cell;9443499003Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner