/> குரு திசை யாருக்கு நல்லது செய்யும்..? ஜோதிடம் 2 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 3 March 2014

குரு திசை யாருக்கு நல்லது செய்யும்..? ஜோதிடம் 2

நான்கு பேர் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிக்கிறர்கள் என்றாலும் சரி இரண்டு பேர் சேர்ந்து தொழில் ஆரம்பித்தாலும் சரி...அவர்களுக்கு யோகமான திசா புத்தி நடக்க வேண்டும் 4ஆம் அதிபதி 5,9 ஆம் அதிபதி திசை நடப்பது தொழிலை முன்னேற்ற செய்யும் 6,8 ஆம் அதிபதி திசை நடப்பவர்கள் பார்ட்னராக இருந்தால் தொழிலுக்கு இடைஞ்சல் செய்வார் தொழிலே முடங்கும் நிலையும் உண்டாகும்..ஏமாற்றவும் செய்வார்..ஒருவருக்கு யோகமான திசை நடந்து இன்னொருவருக்கு சுமாரான திசை நடந்தால்,இவரை கழற்றி விட்டுவிட்டு தொழிலை அவரே கையகப்படுத்துவார்..10 ஆம் இடத்தில் சுபர் இருக்கனும் இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் அவங்கதான் சொந்த தொழில் செய்யமுடியும் 10,2 ஆம் அதிபதிகள் லக்னத்துக்கு கெடாமல் மறையாமல் இருக்கனும்..!! 10 ஆம் அதிபதி நல்லாருந்தா தொழில் நிலைக்கும் 2ஆம் அதிபதி நல்லாருந்தா நிலையான வருமானம் இருக்கும்!

குரு மத்தவங்களுக்கு நல்லது செய்யக்கூடியவர் நீதிமான் ஊருக்கு உழைச்சு பலன் அனுபவிக்க முடியாம தியாகியா வாழ்வை முடித்துக்கொள்பவர்..குரு ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மத்தவங்களுக்காக வாழ்பவர்கள் தான்...ஜாமீன் கையெழுத்து நண்பனுக்காக போட்டு கடனாளி ஆனவர்கள் பலருண்டு ..குரு திசையில் இது அதிகம்...

குரு யோகாதிபதியாக வருவது மட்டும் முக்கியம் அல்ல அவர் மறையாமல் இருக்கனும் ...பவர்களுடன் கெடாமல் இருக்கனும் பாவர் நட்சத்திரத்தில் இல்லாமல் இருக்கனும்..அப்படி இருந்தா நல்ல புகழும் செல்வாக்கும் கொடுக்கும் அரசாங்க ஆதரவு கிடைக்கும் திடீர்னு மந்திரி எம்.எல்.ஏ ஆனவர்களும் உண்டு..குரு ஒரு ராஜகிரகம் அல்லவா..மந்திரி என்றாலே குருதான்..ஆன்மீகத்தில் உயர்வளிக்கும் கிரகம் குருதான்..குரு பிராமணர் என போற்ற்றப்படுகிறார் ஆச்சாரம்,அனுஷ்டானம்,சுத்தம்,நேர்மை அதிகம் விரும்பக்கூடியவர் இதுவே குரு சனி யுடன் இருந்தால் நேர் எதிர்தான் சோம்பேறி,நேர்மையில்லாதவர்,மோசமான இடங்களில் சுற்றுபவராக இருப்பார்..குரு ராகுவுடன் இருந்தால் ஏமாற்றுவார்..ஊர் சுற்றுவார் பணம் கையில் தங்காது வருமானமும் இருக்காது..

குருவும் சந்திரனும் சேர்ந்தால் எந்த இடத்தில் இருக்காங்களோ அது பவர இருக்கும்..பர்வை இன்னும் பலம் கூடும் மிக நல்லது சந்திரன் வளர்பிறையா இருக்கனும்.

குரு செவ்வாய் சேரும்போது ஊருக்குள் ராஜ மரியாதை,அரசாங்கத்தில் மரியாதை,அரசுப்பணி,சொத்துக்கள் சேர்க்கை உண்டாக்கும்..Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner