/> செவ்வாய் வக்ரம்...சனி வக்ரம்..பலன்களும் தீர்வுகளும் | ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Monday, 5 May 2014

செவ்வாய் வக்ரம்...சனி வக்ரம்..பலன்களும் தீர்வுகளும்

செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது தீவிபத்து,ரயில்விபத்து,பூமி அதிர்ச்சி,மின்வெட்டு,நாசவேலைகள் இருக்கும் என ஒரு மாதத்துக்கு முன் செவ்வாய் வக்ரம் தொடங்கும்போது சொல்லி இருந்தேன்.. வரும் 10.5.2014 முதல் வக்ரம் நிவர்த்தி ஆகிறது...இதன்படி பார்த்தால் மின்வெட்டு பிரச்சினைக்கு வழி பிறக்கும்னு நம்புறேன்..

செவ்வாய்,சனி இருவரும் ஒரே நேரத்தில் வக்ரம் அடைந்தவுடன் பல பிரச்சினைகள் அடுத்தடுத்து உண்டாகின்றன..எல்லாம் அதிர்ச்சியான செய்திகள்தான்..

சனி வக்ரம் 17.7.2014 வரை இருக்கு..அதுவரை சனியால் பாதிப்பில் இருக்கும் ராசிகளான மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கு பாதிப்பு குறைகிறது

 நந்தியை நீரில் முழ்க வைத்து வருண ஜெபம் செய்தால் மழை பெய்யும் என்பது மன்னர்கள் காலத்தில் இருந்து ஆண்டாண்டு காலமாக நம் மண்ணில் இருக்கும் நம்பிக்கை...இரு தினங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை திருநள்ளாறு உட்பட மதுரை,திருச்சி என முக்கிய கோயில்களில் அவ்வாறு வருண ஜெப செய்தது இப்போது மதுரை திருச்சி என சில ஊர்களில் நல்ல மழை பெய்கிறது...சுக்கிரன் பலமானால் மழை பெய்யும் என முன்பு ஒருமுறை எழுதி இருந்தேன்...28 ஆம் தேதி முதல் சுக்கிரனும் உச்சமாகி இருக்கிறது..இனி தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும்..வைகாசியில் நல்ல மழை எதிர்பார்க்கலாம்..!!
  


முலாம்பழம் பழச்சாறுதான் இப்போ மிக அதிகமா தமிழகத்தில் மக்கள் விரும்பி குடிக்கிறாங்க..இதை குடிக்காம கோக்,பெப்சி,என குடிப்பவர்கள் இந்த பழத்தை பத்தி தெரிஞ்சுக்குங்க..இது உடலை குளிர்ச்சியாக்குவதில் மற்ற பழங்களை விட,முதலிடம் வகிக்கிறது...புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ',"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மாமருந்து.கோடை காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கும்..கோக்,பெப்சி குடிச்சா உங்கள் கல்லீரல்,கணையம்,இரைப்பை கடுமையாக பாதிக்கப்படும்...எது வசதி..? உங்க குழந்தைகளின் மீது குடும்பத்தின் மீது,உண்மையான அன்பு இருந்தா கோக் ,பெப்சியை தவிர்த்துவிடுங்கள்.. முலாம்பழம் கிலோ 20 ரூபாய் தான் ..5 பேர் குடிக்கலாம்..வீட்டுக்கு வாங்கிட்டு போங்க....வெய்யிலையும் சமாளிக்கலாம், உடலையும் பாதுகாக்கலாம்..!!
Related Article:

Post Comment

1 comment:

Subramaniam Yogarasa said...

சனி வக்கிரம்.....நல்ல பகிர்வு!என்ன பரிகாரம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி!

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner