/> சனி பெயர்ச்சிப்பலன்கள் 2014 -2017 ராசிபலன் -மேசம்-அஷ்டம சனி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 29 September 2014

சனி பெயர்ச்சிப்பலன்கள் 2014 -2017 ராசிபலன் -மேசம்-அஷ்டம சனி

சனிப்பெயர்ச்சி ராசிபலன் 2014 -2017 மேசம் -அஷ்டம சனி

astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்...

சனி செவ்வாய் ராசியில் குருவின் நட்சத்திரமான விசாகத்தில் செல்வதால் இந்தியா தொழில் துறையில் புதிய உச்சத்தை தொடும்...பொருளாதாரம் உயரும்...ஏற்றுமதி,இறக்குமதி சிறப்பாக இருக்கும்....நாட்டின் பலம் அதிகரிக்கும்..

மேசம் ;

மேசம் ராசியினர் எப்போதும் வேகம்,சுறுசுறுப்பு மிகுந்தவர்கள்..கடுமையான உழைப்பாளிகள்..எதையும் செய்து முடிக்கும்வரை ஓய மாட்டார்கள்...உங்கள் ஜென்ம ராசிக்கு 10,11 க்கு அதிபதியான சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை அஷ்டம ஸ்தானத்தில் செல்ல இருப்பதால் அஷ்டம சனி தொடங்குகிறது.....சனி ஏழரை சனியில் கொடுக்கும் துன்பத்தை இரண்டரை வருடங்களில் கொடுப்பதுதான் அஷ்டம சனி என்பார்கள்..... விரய செலவுகள் அதிகம் கொடுக்கும்..கடன் தொல்லையை உண்டாக்கும் ஏற்கனவே இருப்பவர்களுக்கு தீவிரப்படுத்தும் .இது பொதுவான கருத்தாகும்....

அஷ்டம சனி நடந்தவர்கள் பலர் அந்த நேரத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் உண்டு..தடைபட்டிருந்த திருமணம் அஷ்டம சனி காலத்தில் நல்லவிதமாக நடந்ததும் உண்டு...தொழிலே இல்லாமல் இருந்தவர்களுக்கு அஷ்டம சனி வந்தபின் தொழிலும் அமைந்திருக்கிறது..காரணம் சனி விருச்சிகத்துக்கு வரும்போது அதன் பார்வை படும் இடம்,பிறக்கும்போது உங்கள் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்கள் சனி பார்வையை பெறுவதால் உண்டாகும் மாற்றங்கள்...தான் திடீர் மாறுதல்களுக்கு காரணம்..வரப்போகிற  சனி குருவின் நட்சத்திர காலத்தில்தான் சஞ்சரிக்கப்போவதால் குரு உங்கள் ராசிக்கு சுபர் என்பதால் அஷ்டம சனி உங்களுக்கு பாதிப்பை தராது..சிலருக்கு திடீர் யோகத்தையும் கொடுக்கும்.

 சிலருக்கு மட்டும் தொழில் மந்தம்,முடக்கம்  உண்டாக்கும்..தொட்ட காரியங்கள் தடங்கல், தாமதம் உண்டாக்கும்...எதிரிகள்,போட்டியாளர்கள் தொல்லை அதிகமாகும் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்...இதை எப்படி சமாளிப்பது..? விரயங்கள் அதிகரிக்கும் காலம் என்பதால் சுப செலவுகளை செய்யுங்கள்....வீடு வாங்குதல்,குடும்பத்தில் சுபகாரியங்கள் செய்தல்,நிலம் வாங்குதல்,நீண்ட கால முதலீடுகள் செய்தல் இவையெல்லாம் கடன் வாங்கியோ அல்லது சேமிப்பை கரைத்தோ செய்யும்போது தோசம் விலகும்..
 

ஏற்கனவே ரொம்ப பிரச்சினையில இருக்கேன் ..இதுல வெந்த புண்ல வேலை பாய்ச்சுறீங்களே என்பவர்கள்...கவலையோ, விரக்தியோ அடைய வேண்டாம்...சலிப்பும்,சோர்வும்,அலட்சியமும் தான் சனியின் நண்பர்கள்...கடுமையான உழைப்பு,முயற்சிகள் இப்போதுதான் அதிகம் தேவைப்படும்.....ஜாதகத்தில் சனி பகை,நீசம்,பகை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தால் கொஞ்சம் பாதிப்பு அதிகம் இருக்கத்தான் செய்யும்...மற்றவர்களுக்கு பாதிப்பு குறைவு....லக்னத்துக்கு அசுபர் திசை நடந்தாலும் கேது,சனி,செவ்வாய்,திசை நடந்தாலும் சுமாரான பலன்களே நடக்கும்...வருமானம் குறையும்.. இதனால் செலவுகளும் அதிகரித்து கடன் தொல்லையை உண்டாக்கும்..

பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள்,உடன் வேலை செய்பவர்களால் பல தொல்லைகள் புதிதாக உருவாகும்...இடமாறுதல் உண்டாகலாம்....குறைந்த பட்சம் வீடு மாறுதல் செய்துகொண்டால் தோசம் அதில் அடிபடும் பணியில் பாதிப்பு வராது....மருத்துவ செலவுகள் ஏதேனும் வழியில் வந்துகொண்டே இருக்கும் அதற்கு நீங்கள் செலவு செய்து சேமிப்பை கரைக்க செய்யும்......

பெண்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பழகும்போது கவனம் தேவை..குடும்பத்தினருடன் அதிக மனக்கசப்புகள் உண்டாகும் இதனால் அதிக மன உளைச்சல் உண்டாக்கும்...பேச்சில் நிதானம் தேவை....இரண்டுமுறை யோசித்து பேசுங்கள்..ஏற்கனவே மேச ராசிக்காரங்க தடாலடி டைப்..இப்ப நாக்குல சனி உட்கார்ந்துக்கிட்டு இருக்கு...எவ்ளோ எச்சரிக்கையா இருக்கனும்னு யோசிச்சுக்குங்க...சனி குரு சாரம் பெற்றதால் பேச்சால் லாபமும் உண்டு...அதுக்குன்னு நாக்குல சனின்னு வாயே பேசாம இருந்துடாதீங்க...கெட்டது பேசுவதை தவிர்த்தால் போதும்.

 சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்..இக்காலங்களில் அஷ்டம சனி பாதிப்பு இருக்காது....எனவெ சந்தோசப்படுங்கள்...கிட்டத்தட்ட 10 மாசம் சனி தொந்தரவில் இருந்து தப்பிக்கிறீர்கள்...மேசம் ராசியில் சனி நீசம் அடைவார் அந்த காலகட்டத்திலும் உங்களுக்கு சனியால் பிரச்சினை இருக்காது...3.11.2014 முதல் 4.12.2014 வரையிலும் 14.11.2015 முதல் .16.12.2015 வரையிலும் கெட்டவன் கெடுகிறான் இதனால் ராஜயோகம் உண்டாகும்...

 பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்சிலும் வைத்துக்கொள்ளலம்..பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார் இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் 9443499003 மெயில் ;sathishastro77@gmail.com


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,கோஷ்டம்,
அரசவிதை,கெடாமஞ்சள், வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,கோராஜனம்,புனுகு,சந்தனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேங்காய் மூடியை நெருப்பில் காட்டி அதை தனலாக பயன்படுத்தி இந்த பொடியை சாம்பிராணி போல உபயோகிக்கவும்...நவகிரக ஹோமம்,லட்சுமி ஹோம்,கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன் உண்டாகுமோ அந்த பலன் முழுமையாக கிடைக்கும்..நோய் விலகும்...கடன் தீரும்.வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள்,செய்வினை பாவங்கள் விலகி வீட்டில் தெய்வ சக்தி அதிகமாகும்..

தேவைப்படுபவர்கள் மெயில் செய்யவும் அல்லது போன் செய்யவும்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள் நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com
Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner