/> சொர்க்கம் நரகம் இருக்கிறதா ..நம்ப முடியாத உண்மைகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 16 September 2014

சொர்க்கம் நரகம் இருக்கிறதா ..நம்ப முடியாத உண்மைகள்

சொர்க்கம் ,நரகம் இருக்கிறதா...நிச்சயம் இருக்கிறது....நம்முடைய உயர்ந்த ,நல்ல எண்ணங்கள் ,செயல்பாடுகள் பொறுத்து இறந்த பின் அந்த ஆத்மா அதாவது ஆவி உருவம்..சந்திரனை நோக்கி சென்றால் வைகுண்டம்..மறுபிறப்பு உண்டு....அப்பிறவியில் சுகமான வாழ்க்கையுண்டு ....சூரியனை நோக்கி சென்றால் சொர்க்கம் மறுபிறவி இல்லை....இருள் கிரகமாகிய சனியை நோக்கி சென்றால் நரகம்....!! பல நூறு ஆண்டுகள் கஷ்டம் உண்டு....கருட புராணம் இதை சொல்கிறது .இந்த சட்டங்கள் வயோதிகம்,நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு மட்டும்..விபத்து,தற்கொலை என இறப்பவர்களுக்கு அப்படி அல்ல...அவர்கள் ஆவி,பிசாசு எனப்படுகின்றனர்...இறந்த 20 அடிக்குள் அந்த ஆவி அலையும்..உயரக்கிளம்பவும் முடியாது..வெளியே செல்லவும் இயலாது..அருளாளர்களின் ஆசி கிடைத்தால்தாம் மோட்சம்.
 ------------------------------------------
தார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!
 --------------------------------------------
 ல்லா கோயில்களிலும் இப்போதெல்லாம் கோயில் கர்ப்ப கிரகத்தில் அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போட்டிருக்கின்றனர்....டியூப்லைட் ,மற்றும் பாதரச விளக்குகளின் பாதிப்பால் தேவதைகள் சக்தி இழக்கும்..இதனால் கோயிலில் இருக்கும் நன்மை செய்யும் தேவதைகள் வெளியேறக்கூடும்....நெய்தீபம்,மற்ரும் நல்லெண்ணெய் தீபம் மட்டுமே தேவதைகளை மகிழ்ச்சி படுத்தும்..அந்த இடத்தை சுற்றி சுற்றி வரும்!! வணங்குவோர்க்கு ஆசியும் கிடைக்கும்!!.

 -----------------------------------------------
ஜாதகத்தில் செவ்வாய்,சனி நன்றாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறுகிறார்கள்..குரு,சுக்கிரன் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அதிர்ஷ்டவசமாக சுலபமாக முன்னேறிவிடுகிறார்கள்...மாமனார் சொத்தோ ,தந்தை சொத்தோ அவர்களுக்கு இயல்பிலேயே சுகவாசியாக வாழ வைத்துவிடுகிறது..அல்லது பினாமியாக கூட இருக்கலாம் 
 ------------------------------------------------
 தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது..
 -----------------------------------------
 ஜாதகத்தில் மாந்தி என இருப்பதை பார்த்திருப்போம்..மாந்தி என்பது சனியின் புத்ரன் அகும்..மாந்தி பற்றி கேரள ஜோதிடர்கள் அதிகம் பயப்படுவர்..அதை பற்றியே பலன் சொல்வர்..தமிழகத்தில் சனிக்குதான் அதிக முக்கியத்துவம்..மாந்தி சனியின் பலன்களை ஒட்டியே இருக்கும்...சனி போலவே மாந்தி லக்னத்துக்கு மறைந்து இருந்தால் நல்லது 2,7 ஆம் இடங்களில் இருந்தால் திருமணம் லேட் ஆகும் ..குடும்பம் அமையாது என சொல்லப்படுவதுண்டு..6,10,11 ல் இருந்தால் நல்ல யோகத்தை தருகிறது


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner