/> வேண்டியது வேண்டியபடி கிடைக்கச்செய்யும் கோயில்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 4 September 2014

வேண்டியது வேண்டியபடி கிடைக்கச்செய்யும் கோயில்கள்

சூரிய ஒளி சுவாமி சிலை மீது வருடத்தின் குறிப்பிட்ட நாளில் நேரத்தில் விழுவது போன்ற நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை..நம் தமிழகத்தில் முன்னோர்கள் அப்படி பல கோவில்களில் வடிவமைத்துள்ளனர்..அப்படிப்பட்ட கோயில்களில் சூரியன் கர்ப்பகிரகத்தில் ஒளிப்பாய்ச்சும் மாதத்தில் அந்த ஆலயம் சென்று வழிபட்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கும்....கிருஷ்ணகிரி புதுப் பேட்டை வடக்கு மாடவீதியில் ஸ்ரீ ஞானராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு அம்மன் மீது சூரிய ஒளி படும் அதிசயம் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் ஒரே உருவமாய், லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது, ஒவ்வொரு ஆண்டும், தட்சணாயண காலத்தில், மூன்று நாட்களும், உத்ராயண நாட்களில் மூன்று நாட்களும், சூரியஒளி நேரடியாக பாயும்.உத்ராயண காலத்தில் சூரியஒளி, காலை, 6:35 மணி முதல், 6:39 மணி வரை, ராஜகோபுர வாசல் வழியாக, சூரியஒளி அம்மன் மீது விழுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீதும் வருடத்தில் குறிப்பிட்ட நாளில் மூலவர் மீது சூரிய ஒளி படுகிறது...

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் வரலாற்று சிறப்புமிக்க பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுந்தரர் கயிலையில் பெற்ற சாபம் நீங்க அரூரராக அவதரித்த இத்தலத்தில் சிவன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். நவக் கிரகங்களில் ஒன்றான சூரியன் இத்தலத்தில் ஈசனை நோக்கி (மேற்கு திசை நோக்கி) பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை வழிபட்டுள்ளார். அதனால் இந்த தேதிகளில் பக்த ஜனேஸ்வரர் (சிவன்), மனோன்மணி அம்பாள் (பார்வதி) ஆகியோர் மீது காலை சூரிய உதயம் படுவது ஒர் அற்புதமான நிகழ்வாகும்.

திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது..

கொடுமுடி மகுடேஸ்வரர் சன்னதியில் ஆவணி மாத கடைசியிலும்,பங்குனி மாத கடைசியிலும் சூரிய ஒளி மூலவரை தரிசனம் செய்யும்...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில், ஆயக்குடி ,திருநெல்வேலி மாவட்டம்.
இது மிகவும் பழமையானதும் சக்தி வாய்ந்ததும் ஆன கோவில் ஆகும். இது 1900 வருடம் பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சித்திரை மாதம் பிறந்தவுடன் ஒரு வாரத்திற்கு மூலவரின் மீது சூரியனின் ஒளி பாய்ந்து வெளிச்சம் தருவது அதிசயமாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் இங்கு சூரிய ஒளி வருவதில்லை.

 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பிப்ரவரி 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் மறைவதற்கு முன் 5..45 முதல் 6.10 வரை விழும்

 மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுதசுவாமி சித்திரை 15,16,17 தேதிகளில் விழும் அதனாலேயே அவருக்கு உதயகிரி என பெயர் வந்ததாக திருக்கோவில் வரலாறு

 கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதையும், விளக்குகள் ஏதுமில்லாத நிலையில் சூரிய ஒளியில் ஒளிரும் சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

 விழுப்புரம் மாவட்டம்,பனையபுரம் சத்யாம்பிகை(புறவாம்பிகை,மெய்யாம்பிகை)உடனுறை பனங்காட்டீஸ்வரர் ஆலயம். சித்திரை மாதம் முதல் தேதி-யில் இருந்து ஒரு வாரம் காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதும், இங்குள்ள சிவசூரியனாரை வழிபட்டால் கண் சம்பந்தமானா பிரச்சனைகள் தீருவது திண்ணம். இவ்விரண்டும் இக்கோவிலின் சிறப்பு விழுப்புரம் to திருக்கனுர்-புதுச்சேரி-------விக்கரவாண்டி to பண்ருட்டி ----- இந்த இரண்டு சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடுதான் இந்த பனையபுரம் இக்கோவிலை அனைவரும் தரிசனம் செய்யுங்கள்
Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner